எதிரிகள் அழிய
பொறாமை அல்லது நம் வளர்ச்சி பிடிக்காமல் சூழ்ச்சி செய்வோர், நம்மை சதா தொந்தரவு செய்து கொண்டே இருக்கும் எதிரிகள் தொல்லை அழிய, (குறிப்பு : எதிரிகள் அழிய அல்ல..அவர்களின் தொல்லைகள் அழிய) நம்மை அழிக்க நினைப்போரிடம் இருந்து நம்மை காத்துக்கொள்ள கீழ்க்கண்ட தாந்த்ரீக முறையை கையாளலாம். இதை எந்த நாளிலும் எந்த நேரத்திலும் செய்யலாம்.
ஒரு வெள்ளை தாளில் ஒரு பெருங்காய கட்டியை கொண்டு, நமக்கு இனி தொல்லை தராமல் இருக்க வேண்டும் என மனதினுள் நினைத்து கொண்டே எதிரியின் பெயரை எழுதவும். பின்பு அந்த பெயரை சுற்றிலும் வட்டமிடவும். மீதமுள்ள பெருங்காயத்தை பேப்பருடன் சேர்த்து நன்றாக மடித்து ஒரு கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாவில் இட்டு மண்ணில் புதைக்கவும். எங்கு வேண்டுமானாலும் புதைக்கலாம். நாளடைவில் எதிரிகள் நம்மை தொல்லை செய்யாது விலகுவதை கண்கூடாக காணலாம்.ஒரு பேப்பரில் ஒரு பெயர் மட்டுமே எழுதவும். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட எதிரிகள் இருப்பின் அவர்கள் தனி தனியாக செய்யவும் .
குறிப்பு : மேற்கண்ட முறை நம்மை அழிக்க நினைக்கும் தீய எண்ணம் கொண்ட எதிரிகளுக்கு மட்டுமே பயன்படுத்தவும். தவறான முறையில் செய்ய நினைத்தால் 'தன் வினை தன்னை சுடும் ' என நினைவில் கொள்க.
No comments:
Post a Comment