Sunday, 17 January 2016

மதுப் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் பரிகாரம்

மதுப் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் பரிகாரம்

மது மற்றும் போதைக்கு அடிமையானவர்களை விடுவிக்க இந்த பரிகாரம் உதவும்.மகாராஷ்டிரா,மத்தியப்ரதேசம் போன்ற மாநிலங்களில் இதைச்  செய்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர் தானே செய்துகொள்ளலாம் அல்லது  குடும்பத்தில் யாராவது ஒருவர் அவருக்கு இதைச் செய்யலாம்.

பரிகாரம்:-

வளர்பிறை அஷ்டமி,தேய்பிறை அஷ்டமி,அமாவாசை ஆகிய மூன்று நாட்களிலும் செய்ய வேண்டும்.

கொஞ்சம் மஞ்சளை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
கொஞ்சம் குங்குமத்தை நீரில் குலைத்து வைத்துக்கொள்ளவும்.
கொஞ்சம் கண்மை எடுத்துக்கொள்ளவும்.

ஒரு சுத்தமான வெள்ளைப் பேப்பர் எடுத்துக்கொள்ளவும்.அந்தப் பேப்பரில் மஞ்சளால் ஒரு கோடும், குங்குமக்கலவையால் ஒரு கோடும்,கண்மையால் ஒரு கோடுமாக மொத்தம் மூன்று கோடுகள் வரையவும்.பின்,வேகவைத்த அரிசிசாதம் கொஞ்சம் அந்தப் பேப்பரில் வைத்துக்கொண்டு அந்த சாதத்தின் மேல் கொஞ்சம் தயிர் விட்டு சாதத்தின் மேல் சிகப்பு மிளகாய் விதைகள் கொஞ்சம் தூவவும்.    .

பின் அந்த பேப்பரை எடுத்துக் கொண்டு மது/ போதைப் பழக்கத்துக்கு அடிமையானவரின் தலை மற்றும் உடலை 11 தடவை இடமிருந்து வலமாக ஓம் நமசிவாய என்று மனதுக்குள் ஜெபித்தபடியே சுற்றவும்.

11 தடவை சுற்றி முடித்த பின் அந்த பேப்பரையும் அதில் உள்ளவற்றையும் அப்படியே ஓடும்நீர், கிணறு,ஏரி, குளம்,கடல்,ஆறு எதிலாவது போட்டு விடவும். பின் காலையும் கையையும் கழுவிக் கொண்டு தலையில் கொஞ்சம் நீர் தெளித்துக் கொண்ட பின் வீட்டுக்குள் செல்லவும்.

No comments:

Post a Comment