Saturday, 30 January 2016

குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி?

குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி?

நம்மில் பலபேர்களுக்கு குலதெய்வம் யார், எங்கு இருகின்றார், அவரை வீட்டிற்கு அல்லது வாழுகின்ற இடத்திற்கு வரவழைக்கும் முறை என்ன என்பது தெரியாது.

இந்தப்பதிவில் எளிமையான, அனுபவப்பூர்வமான முறையை விளக்கியுள்ளோம். பயன்படுத்தி வெற்றி கொள்க.

1.நீங்கள் வாழக்கூடிய ஊரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று விநாயகர்,ஒன்பது கோள்கள், பலிபீடம், கொடிமரம், நந்தி தேவர் இவர்களுக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வணங்கவும்.

2. சிவபெருமானுக்கு அவர் பெயருக்கே ஒரு அர்ச்சனை செய்யவும். பூசை செய்கின்ற குருக்களிடம் 11 ரூபாய் பணத்தை கொடுத்து சிவபெருமான் பாதத்தில் வைக்கச் சொல்லுங்கள்.

3. " ஐயா சிவபெருமானே (தாத்தா பெயர்) அவர்களின் பேரனும், (அப்பா பெயர்) அவர்களின் புதல்வனுமாகிய (உங்கள் பெயர்) அடியேனுக்கு என்னுடைய குலதெய்வம் யார் என்பதும் அவர் எங்கு இருகின்ற்றர் என்பதும் தெரியவில்லை. என் சார்பிலும் என் வம்சாவளியின் சார்பிலும் இந்தக் கோரிக்கையையும், காணிக்கையையும் பெற்றுக்கொண்டு என் குலதெய்வம் என் வீட்டிற்கு வரவும், எங்களுக்கு அருளாசிகள் வழங்கவும், எங்களை காத்துக்கொள்ளவும் அருளிடுக" என்று மனமுருகி வேண்டிக்கொள்க.

4. உங்கள் ஊரில் நல்ல செயல்பாட்டில் உள்ள முனீசுவரர், காளியம்மன், கருப்பர் கோவிலுக்குச் சென்று அவர்களையும் மேற்சொன்னது போலவே வணங்க வேண்டும்.

5. உங்கள் ஊரில் ஊர்த்தெய்வமாக இருக்கும் (உதாரணம்: மதுரை- மீனாட்சி அம்மன், காஞ்சி- காமாட்சி, காரைக்குடி- முத்தாலம்மன், சென்னை- சென்னியம்மன், பட்டுக்கோட்டை- நாடியம்மன், திருச்சி- உறையூர் வெக்காளியம்மன்) தெய்வத்தையும் மேற்சொன்ன முறையில் வணங்க வேண்டும்.

6. உங்கள் வீட்டில் எந்தவிதமான எதிர்மறை சக்திகளை வணங்குபவர்களிடமிருந்து வாங்கிய எந்திரங்கள், தகடுகள், தாயத்துகள், எலுமிச்சை பழம், மை... போன்ற எந்த ஒரு பொருள் இருந்தாலும் அதை எல்லாம் அகற்றி எரித்து விடவும்.

7. அருவி நீர், ஊற்று நீர், கோவில் கிணற்று நீர் போன்ற ஏதாவது புனித தீர்த்தத்தை கொண்டு வீட்டை சுத்தம் செய்து குங்கிலியம், நாய்க்கடுகு, வெண்கடுகு, மருதாணி விதை, மிளகு முதலியவைகளை அரைத்து செய்யப்பட்ட சாம்பிராணி புகை காட்டவும்.

8. வீட்டு வாசலில் மஞ்சள் நீர் தெளித்து அழகான கோலம் போடவும். வீட்டு வாசலில் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி நிலையின் இருபுறமும் வைக்க வேண்டும்.

9. அன்றைய இரவு ஐந்து முகங்கள் கொண்ட குத்து விளக்கை சுத்தமான நல்லெண்ணெய், பசுவின் நெய் கொண்டு நிரப்பி, 5 திரிகள் இட்டு அலங்கரித்து வைக்கவும். குத்து விளக்கின் இருபுறமும் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி வைக்க வேண்டும்.

10. குத்து விளக்கின் முன்புறம் ஒரு தலைவாழை இலையில் நீங்கள் விரும்பி உண்ணும் உணவுகளை படையலாக இடவும். வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைக்கவும். இந்த வெற்றிலை பாக்கில் சுண்ணாம்பு தடவி வைக்க வேண்டியது கட்டாயம்.

11. இலையில் 2 லட்டுகள் வைக்கவும், ஒரு சொம்பில் மஞ்சள் நீர், ஒரு சொம்பில் பானக்கம், ஒரு சொம்பில் பால், ஒரு சொம்பில் குடிநீர் வைக்கவும்.

12. குளித்துவிட்டு மஞ்சள், சிவப்பு, வெள்ளை, நீலம், பச்சை வண்ணங்களில் உள்ள உடையை அணிந்து கொள்ளவும். கறுப்பு கூடவேகூடாது. விபூதி, மஞ்சள், குங்குமம், நெற்றியில் முறைப்படி பூசிக்கொள்ள வேண்டும்.

13. பெண்களும் இதுபோல் தயாரான பின்பு கையில் ஆரத்தி தட்டு எடுத்துக் கொண்டு வாசலுக்கு செல்ல வேண்டும். ஆண்கள் கையில் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி, வாசலில் வாசலின் வெளிப்புறத்தை நோக்கியவாறு நின்று கொண்டு " எங்களுடைய குலதெய்வம் எங்கிருந்தாலும், எங்கள் மீது ஏதேனும் குற்றம் குறை இருந்தால் மன்னித்து ஏற்றுக்கொண்டு, அனைத்து கட்டுக்களையும் அறுத்துக் கொண்டு, எழுச்சி பெற்று, செழுச்சி பெற்று, எங்களையும் எங்கள் வம்சாவழிகளையும் காக்க எழுந்தருள்க" என்று சொல்லி பழத்தை பிழிந்து விடவும்.

14. வாசலின் முன் புறத்தில் 3 சூடங்களை ஏற்றி "எல்லோரும் வருக" என்று சொல்லி ஆரத்தி, கற்பூர தீபம் காட்டவும். அப்படியே சூடத்தட்டோடு குத்துவிளக்கின் முன்பாகச் சென்று அமர்ந்து குத்து விளக்கை ஏற்றவும்.

15. கருப்பர்களில் மூத்தவரான பதினெட்டாம்படிக் கருப்பரை மனதில் நினைத்துக் கொள்ளவும். அவரையே குருவாக நினைத்து கீழ்க்கண்ட குரு வாசகத்தை 24 நிமிடங்கள் மனமுருகச் சொல்லுங்கள்.

ஓம் குரு வாழ்க; ஓம் குருவே துணை;ஓம் குருவே எல்லாம்;
ஓம் குருவே அனைத்தும்; ஓம் குருவே சரணம்.

"தாத்தா பதினெட்டாம்படிக் கருப்பர் அவர்களே (தாத்தா பெயர்) அவர்களின் பேரனும், (அப்பா பெயர்) அவர்களின் புதல்வனுமாகிய (உங்கள் பெயர்) அடியேனுக்கு என்னுடைய குலதெய்வம் யார் என்பதும் அவர் எங்கு இருகின்றார் என்பதும் தெரியவில்லை. நீங்களே என் குலத்திற்குரிய தெய்வத்தை இந்தப் பூசையின் மூலமாக வலிமை பெற்று, வளம் பெற்று, புத்துயிர் பெற்று, மீண்டும் ஆட்சி பீடத்தில் அமரச் செய்து அருளாட்சி செய்யச் செய்திடல் வேண்டும்.

என் சார்பிலும் என் வம்சாவளியின் சார்பிலும் இந்தக் கோரிக்கையை பெற்றுக்கொண்டு என் குலதெய்வம் என் வீட்டிற்க்கு வரவும், எங்களுக்கு அருளாசிகள் வழங்கவும், எங்களை காத்துக்கொள்ளவும் அருளிடுக"

ஓம் குரு வாழ்க; ஓம் குருவே துணை;ஓம் குருவே எல்லாம்;
ஓம் குருவே அனைத்தும்; ஓம் குருவே சரணம்.

16, பூசையின் முடிவில் வணங்கப்பட்ட தெய்வங்கள் அனைவருக்கும் படைத்தது வைத்து இருக்கும் படையலை காணிக்கையாக்கி தூப தீபம் காட்டி பூசையை நிறைவு செய்யவும். அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி சொல்லுங்கள்.

17. பூசையின் முதல் நாளன்றே உங்கள் குலதெய்வம் உங்களைத்தேடி வந்துவிடும். நம்பிக்கையோடு 48 நாட்கள் இதே பூசையை செய்யும்போது உங்கள் குலதெய்வம் எப்படி இருந்தாலும் எங்கு இருந்தாலும் வந்துவிடுவது உறுதி.

18. 7 தலைமுறையாக வராத குலதெய்வம் இந்தப்பூசையால் அவர்களை தேடி வந்தது. நம்பிக்கையோடு செய்யுங்கள். வெற்றி உண்டாகட்டும்.

4 comments:

  1. தெரியாத பல விசயங்கள் தெரிந்து கொண்டேன்....
    நன்றிகள்...............

    ReplyDelete
  2. லக்கினம் 5ம் வீட்டில் சூரியன், சந்திரன், புதன் இருந்தால் குலதெய்வம் என்னவாக இருக்கும்

    ReplyDelete
  3. லக்கினம் 5ம் வீட்டில் சூரியன், சந்திரன், புதன் இருந்தால் குலதெய்வம் என்னவாக இருக்கும்

    ReplyDelete
  4. லக்கினம் 5 ம் வீட்டில் ராகு 9ம் வீட்டில் புதன் சூரியன் இருந்தால் குலதெய்வம் யார்

    ReplyDelete