Saturday, 30 January 2016

எண் 4 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்! பிறப்பு முதல் இறப்பு வரை!

எண் 4 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்! பிறப்பு முதல் இறப்பு வரை!

ராகு நட்த்திரம் :- திருவாதிரை, சுவாதி, சதயம்

இப்போது சர்வவல்லமையுள்ள இராகு பகவானின் ஆதிக்கத்திற்குரியஎண்ணான 4-ஐப் பற்றிப் பார்ப்போம். (சாதகத்தின்படி)நவக்கிரகங்களின் (நைசிக பலம்) பலத்தில், இராகு பகவான் தான்பலவான் என்றாலும், எண்களை சாத்திரத்தில் நான்கு எண் அவ்வளவுவலிமை மிகுந்த எண்ணாகச் சொல்லப்படவில்லை! சூரியனின்எண்ணான 1-ஆம் எண்ணைச் சார்ந்தே இதன் பலன்களும்,நடைமுறைகளும், அதிர்ஷ்டங்களும் உள்ளன! மேலும் 1-ம்எண்ணிற்கு மிகவும் நட்புடையதாகவும் விளங்குகிறது.
வெளிநாட்டு எண்கணித மேதைகள் இதை (4 எண்) யுரேனஸ் என்னும்கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவர்கள்வாய்ப் பேச்சில் இன்பம் காண்பவர்கள். நாவன்மை அதிகமுள்ளஇவர்கள் வீட்டிலும், ரோட்டிலும், காபி, டீக்கடைகளிலும்,கோவில்களிலும் ஆற்றங்கரையிலும், கடற்கரையிலும், கையைஆட்டி, குரலை ஏற்றி, இறக்கி, உணர்ச்சியுடன் பேசி மக்கள் மனதைக்கவருவார்கள். பல மணி நேரம் பேசும் இயல்பினர். ஒரு ஜனக்கூட்டம்எப்போதும் இவர்களைச் சுற்றியே நிற்கும்.

இவர்கள் இரகசியங்களைக் காப்பாற்ற மாட்டார்கள். எந்த ஒருவிஷயத்தையும், வேலையையும்,அடுத்தவரிடம் சொல்லிப் புலம்பாதுஇருக்கமாட்டார்கள். இவர்களிடமிருந்தே திட்டத்தை அறிந்துகொண்ட இவர்களது நண்பர்கள் அந்தத் திட்டத்தை அவர்களேவிரைந்து சென்று செயலாற்றி, வெற்றி பெற்று விடுவார்கள். எனவேஇவர்கள் அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ வேண்டுமானால் முதலில்நாகாக்க வேண்டும்.

மேலும் 4, 3, 22, 31 ஆகிய தேதிகளில்பிறந்தவர்கள், தங்களது நண்பர்களாலும், சுற்றத்தார்களாலும், மற்றும்நம்பியவராலும் செய்வினைகள் மற்றும் ஏவல் கோளாறுகளைஇவர்களது வாழக்கையில் அனுபவிக்க நேரிடுகிறது! இதே யோகம் 2, 8 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்களுக்கும் உண்டு.

13 ம் எண் சில உண்மைகள்

வெளிநாட்டு மக்கள் (ஏன் நம்மவர்கள் கூட) 13-ம் எண்ணைக் கண்டுமிகவும் பயப்படுகிறார்கள். உலகின் சரித்திரத்தில் பல இயற்கைச்சீற்றங்கள் 3-ம் தேதியில்தான் நடந்துள்ளன. நெப்போலியன் வீழ்ந்ததுஒரு 13ந் தேதியில்தான். கி.பி.2026 நவம்பர் 13 வெள்ளிக்கிழமையில்,உலகின் மக்கள் தொகை 5000 கோடி என்ற அளவில் உயர்ந்து, திடீரென உலகம் வெடிக்க வாய்ப்புள்ளது எனறு அமெரிக்கவிஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சியின் முடிவாகக் கூறியுள்ளனர். மேலும்ஜாலியன் வாலாபாக் படுகொலையும் அமிர்தசரஸில் 13.4.1919அன்றுதான் நடந்தது!

மேலும் 13 எண் பெயரில் வரும் அன்பர்கள் தங்களது வாழ்க்கையில்பல ஜீவ மரணப் போராட்டங்களை அவசியம் சந்தித்துத்தான் ஆகவேண்டும். பெரும்பாலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தஅன்பர்களும், நான்காம் எண்ணில் பெயர் அமைந்த அரசுஅதிகாரிகளும், ஊழியர்களும், அயராது உழைத்திட்ட போதிலும்,ஏனோ மேலதிகாரிகளால் வெறுக்கப்படுகிறார்கள். அடிக்கடி இவர்கள்வீண் பழிகளைச் சந்திக்கின்றார்கள். பல அன்பர்கள் அரசாங்கவே¬யை இடையிலேயே இழந்துவிடும் அவயோகமும் உண்டு.

அடிக்கடி ஓடிக் கொண்டிருக்கும் வண்டி வாகனங்களுக்குத் தவிர,மனிதனின் வாழ்க்கைக்கு இந்த 13-ம் எண் ஏற்றதல்ல! அதுமல்மல்ல22-ஆம் எண்ணும், 13-ஐப் போன்றே பயப்பட வேண்டியதுதான் 22-ந்தேதியில் பிறந்தவர்கள் அல்லது பெயர் எண் உள்ளவர்களில் பலர்திடீரெனத் தாழ்ந்து விடுவார்கள்.

பிறரால் வஞ்சிக்கப்படுவார்கள். பலஅன்பர்கள் அடுத்துக் கெடுக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும்இவர்களிடம் அன்பு பாராட்டியவர்களே செய்து விடுவார்கள் என்பதுவேதனையான விஷயம் இந்த எண்ணின் தொடர்புடையவர்களின்வாழக்கையானது எவ்வளவு வேகமாக உயர்கிறதோ, அதே வேகத்தில்திடீரெனத் தாழ்ந்து விடும் என்பதையும் மறக்கக் கூடாது !

மேலும் இந்தக் கிரகத்தின் ஆதிக்கத்திலுள்ள அன்பர்களுக்கு அடிக்கஇடமாற்றம் 13, 22 எண்ணில் பிறந்தவர்கள் சுதந்திரப் பிரியர்கள்.எவருக்கும் கட்டுப்பட்டு வாழ விரும்பாதவர்கள். இவர்கள் தங்களதுமேலதிகாரிகள், முதலளிகள் ஆலோசனைக்குக் கட்டுப்பட விரும்பமாட்டார்கள்.

ரோஷமும், தன்மான உணர்வும் மிகுந்த இவர்களில்,அடுத்தவர்களுக்கு அடிமையாக இருந்து முன்னேறுவதைவிட அந்தவேலையை விட்டு விலகி ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம்என்று எதிர்த்து நிற்பார்கள். எனவேதான் இவர்களுக்குப் பலபிரச்சினைகளும், முன்னேற்றத் தடைகளும், தொழிலில்உண்டாகின்றன. தங்களது மேலதிகாரிகள், முதலாளிகள்போன்றோர்களை அனுசரித்துச் சென்றால் இவர்களும் மிகுந்தமுன்னேற்றம் பெறலாம்.

இவர்களது தொழில்கள்

ஒப்பந்த தொழில்கள், கார், லாரி, இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள்,பேச்சாளர்கள், சோதிட நிபுணர்கள் ஆகியவை இவர்களுக்கு ஒத்துவரும். இவர்களில் பலருக்கு நல்ல ஆராய்ச்சி மனப்பான்மையும்உண்டு! துப்புத் துலக்கும் பணிகளிலும் விரும்பி ஈடுபடுவார்கள்.நிருபர்கள் டைப்பிஸ்ட்டுகள், இரயில்வே, வங்கி ஊழியர்கள் போன்றதொழில்களும் அமையும். அடுத்தவர்களைத் தூண்டி வேலை வாங்கும்மலாளர், மேற்பார்வையாளர் போன்றவையும், இவர்களுக்கு நன்மைதரும் தொழில்களாகும். கராத்தே, சர்க்கஸ், சிலம்பம் போன்றஉடற்பயிற்சித் தொழில்கள் ஏற்றவை. மேலும் இவர்களுக்குமருத்துவம், சோதிடம் ஆகிய கலைகளிலும் ஈடுபாடு தீவிரமாகஅமையும்.
விமர்சனங்கள் எழுதுவதில் இவர்களுக்குத் தனித்தன்மையும், புகழும்உண்டு. புத்தகங்கள் விற்பனை, வெளியிடுதல் போன்ற தொழில்களும்நன்மையே செய்யும். மாடு, குதிரை போன்ற கால்நடைத் தரகும்,லாபம் தரும். (கட்டில், பீரோ) போன்றவை, சினிமாப் படங்கள்தயாரித்தல், விற்றல் ஆகியவையும் ஒத்துவரும்! மக்கள் தொடர்புதொழில்கள் (றி.ஸி.ளி) இவர்களுக்கு மிகவும் ஒத்துவரும்தொழிலாகும். டெய்லர்கள், கார், பைக், ஸ்கூட்டர் மெக்கானிக்குகள்,எலக்ட்ரிசியன்கள், அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள் வேலைபோன்றவை இவர்களுக்கு அமையும்.

திருமண வாழ்க்கை

பெரும்பாலும் இளமையிலேயே இவர்களின் திருமணம்அமைந்துவிடும். மனைவியுடன் எப்போதும் விதண்டாவதம்செய்பவர்களானாலும் குடும்ப பாசத்திலும் அன்பிலும் சிறந்தவர்கள்.தூய்மையே மிகவும் புனிதமாகப் போற்றுவார்கள். தாங்கள்காதலித்தவர்களை சமூகத்தின் கட்டுப் பாட்டையும், எதிர்ப்பையும் மீறிமணந்து கொள்ளும் வேகமும், தைரியமும் உண்டு! இவர்கள் 1, 8ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் (பிறவிஎண் மற்றும் கூட்டு எண்) நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

5அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும் இவர்களுக்கு நன்மையேசெய்வார்கள். இருப்பினும் 4-ம் தேதிகளில் பிறந்த ஆண்கள், 6&ஆம்எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால்அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும்.
இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும்தேதிகளில் (தேதி எண் அல்லது கூட்டு எண்) வைத்துக் கொண்டால்,திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம்.

நண்பர்கள்/கூட்டாளிகள்

பொதுவாக 1, 2, 4, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களைநண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் வைத்துக் கொள்ளலாம். 8-ந்தேதி பிறந்தவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளலாமே தவிரப்பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. 1-ம் எண்காரர்கள்இவர்களைத் தங்கள் ஆளமைக்குள் கொண்டு வந்து, இவர்களையும்முன்னேறச் செய்வார்கள்.

இவர்களது நோய்கள்

பொதுவாக இவர்கள் பித்த ஆதிக்கம் உடையவர்கள்.மனநோய்களான டென்ஷன், படபடப்பு அதிகம் உடையவர்கள்.இரத்தக் குறைவு நோயும் உண்டாகும். மனச்சோர்வுகள் அடிக்கடிஏற்படும். இருப்பினும் இவர்களுக்கு வரும் நோய்கள் உடனுக்குடன்விலகிவிடும் யோகமும் உண்டு. வாய்வுப் பிடிப்பு, சீரண சக்தி, இடுப்புவலி, பின் தலை வலி, சோகைகள் போன்றவைகள் ஏற்படும். தலை,கண், மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட கோளாறுகள் அடிக்கடி வந்துமறையும். மாமிச உணவுகள், மசாலப் பொருட்கள் போன்றவற்றைநீக்குவது நன்மை புரியும்.

தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்துவந்தால், இவர்களை நோய்கள் அணுகாது! ” அனுபவம் உள்ளவர்கள்அதிகம் பேசமாட்டார்கள்” என்பதை அவசியம் வாழ்வில் இவர்கள்கடைப்பிடிக்க வேண்டும். “நிறைகுடம் தளும்பாது” போன்றபழமொழிகளைத் தங்களது வாழ்க்கையில் இவர்கள் கடைப்பிடித்தால்இவர்களும் நல்ல அதிர்ஷ்டத்தையும், இலாபங்களையும் அடையலாம்.எதிர்ப்புக்களையும், எதிரிகளையும் தவிர்த்து விடலாம்.

இராகுவின் யந்திரம் & இராகு சக்கரம் & 36

13 8 15
14 12 10
9 16 11

இராகுவின் மந்திரம்

அர்த்காயம் மஹாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்தநம்!
ஸிம்ஹிகா கர்ப்பஸம்பூதம்
தம் ராஹூரும் ப்ரணாம்யஹம்

எண் 4. சிறப்புப் பலன்கள்

இப்போது மக்கள் பிரதிநிதியான 4-ஆம் எண்காரர்களின் சிறப்புப்பற்றிப் பார்ப்போம். உலகத்தில் உள்ள பலவகையானசெய்திகளையும், அனுபவங்களையும் தெரிந்து கொள்வதில் இவர்கள்ஈடுபாடு கொண்டவர்கள்! எப்போதும் தன் இச்சைப்படி செயலாற்றவிரும்புவார்கள்.

எப்போதும் நான்கு பேருடன் கலகலப்பாக இருக்க வேண்டும் என்றுவிரும்புவார்கள். தனிமையை வெறுப்பார்கள். பணம்சம்பாதிக்கும்போது இருக்கும் பொறுமையை, பணம் செலவழிப்பதில்காட்டமாட்டார்கள். கையில் பணம் இருக்கும்வரை கண்ணில்பார்ப்பதை வாங்கும் இயல்பினர். நான்கு பேரை அதட்டி, தங்கள்காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். எதிலும் எதிர்ப்பு உள்ளவிவகாரங்களையே எடுத்து வாதாடுவார்கள். நண்பர்களுக்காகச்செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். ஆனால் இவர்கள்மற்றவர்களின் உண்மையான அன்பிற்காக ஏங்குவார்கள்.சமுதாயத்தின் முன்னேற்றம், நாட்டு நடப்புக்கள் ஆகியவற்றைப்பற்றிப் பொது இடங்களில் காரசாரமாகப் பேசுவார்கள்.

உணவு விஷயத்தில் தாராளமானவர்கள்! சுவையான உணவு,இனிமையான காட்சி ஆகியவற்றிற்காகப் பண விரயம் செய்வார்கள்.தங்களின் உடல்நலம், ஆரோக்கியம் பற்றி மிகவும் கவலைப்பட்டு,அதற்காக லேகியங்களையும், மாத்திரைகளையும் சேர்த்துக்கொள்வார்கள்.

தங்களுடைய அபிப்பிராயங்களைத்தான் மற்றவர்ளும் ஏற்க வேண்டும்என்று வற்புறுத்துவார்கள்.

பிறர் அபிப்பிராயத்தை அலட்சியம்செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். தங்கள் காரியம் வெற்றியடையவேண்டும் என்பதற்காக, எநத வழியையும் பின்பற்றத் தயங்கமாட்டார்கள். இருப்பினும், வாழ்க்கையில் வெற்றி பெறுவோமா என்றவீண் பயம் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் அவசரமும்,ஆத்திரமும் உண்டு. தங்களைக் கண்டு பயப்படுபவர்களை, விரட்டிக்கொண்டே இருப்பார்கள். தங்களைக் கண்டு பயப்படாமல்இருப்பவரிடம் நயமாகப் பழகுவார்கள்.

சந்தேக குணமும், அதிகாரம் செய்யும் விருப்பமும் இருப்பதால்,நண்பர்கள் குறைவாகவே இருப்பார்கள். தங்கள் முயற்சிகளில்அடுத்தவர் குறுக்கீட்டை விரும்பமாட்டார்கள்.

அவரிடம் வெறுப்பைக்காட்டுவார்கள். குடும்பத்திலும் இவர்களது குறுக்கீடுகள் அதிகம்இருக்கும். எனவே, குடும்பத்திலும் இன்பம் குறைவுதான். இளமைப்பருவத்தில் விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றில் மிகவும்ஈடுபாடு கொள்வார்கள். சோம்பல் குணம்தான் இவர்களது சத்துரு!அதை விட்டுவிட வேண்டியது அவசியம். முன்கோபம் ஓரளவுஇருக்கும். சமயங்களில் அடுத்தவரைத் திட்டிவிட்டுப் பின்புவருந்துவார்கள்.

சாதாரணமாக மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே, தங்கள்குரலை உயர்த்திப் பேசித் தங்களின் வாதங்களை வற்புறுத்துவார்கள்.ஒரே விஷயத்தைப் பற்றியே, பட்டிமன்றமாகப் பேசுவார்கள்.

தங்களதுசொந்தப் புகழுக்கும், பொருளுக்கும் ஆசைப்படமாட்டார்கள். ஆனால்அனைத்தும் தெரிந்த மனிதர் இவர்தான் என்று உலகத்தார் பேசவேண்டும் என நினைப்பார்கள். பொது நல சேவை செய்வார்கள்.அரசியல்வாதிகளில் வெறிபிடித்த இலட்சியவாதிகள் என்றுஇவர்களில் சிலர் மாறி விடுவார்கள்.

இவர்களது வருமானம் உயரஉயரச் செலவும் அதிகமாகிக் கொண்டே வரும். எனவே, செலவுசெய்வதில் நிதானம் தேவை. இவர்கள் மக்களை நிர்வகிக்கும்வித்தையை அறிந்தவர்கள். இதனால் போலீஸ், மேலாளர் போன்றதொழில்களில் சிறந்து விளங்குவார்கள்.

உடல் ஆரோக்கியம்

இந்த நான்கு எண்காரர்கள் நடுத்தரமான உயரம் உடையவர்கள்.வட்ட வடிவமான முகத்தோற்றமும், சற்றுப் பருமனான உடல்அமைப்பும் உண்டு. ஆழ்ந்த கண்கள் இருக்கும். தலைமுடிகருமையாகவும், அதே சமயம் அழுத்தமாகப் படியாமல், சற்றுச்சுருண்டும் காணப்படும். அதிகமான நோய்கள் இவர்களை அணுகாது.உணவு விஷயத்தில் மட்டும் கட்டுப்பாட்டுன் நடந்து கொண்டால்,ஆரோக்கியம் உறுதி!

அதிர்ஷ்ட தினங்கள்

ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19 ஆகிய தினங்களும், கூட்டு எண் 1வரும் தினங்களும் மிகவும் அதிர்ஷ்டமானவே. 28-ந் தேதிநடுத்தரமான பலன்களையே கொடுக்கும். அதேபோன்று 9, 18, 27ஆகிய தேதிக்கும். கூட்டு எண் 9 வரும் தினங்களும் நல்லபலன்களையே கொடுக்கும்.
அதே போன்று 4, 13, 22, 31 ஆகிய தேதிகள் தாமாகவே நல்லபலன்களைக் கொடுக்கும். ஆனால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டால்தோல்வியே மிஞ்சும். அதே போன்று 8, 17, 26 ஆகிய தேதிகளும்கூட்டு எண் 8 வரும் தினங்களும் துரதிருஷ்டமானவை. 7, 16, 25ஆகிய தேதிகளும் துரதிருஷ்டமானவைதான்.

அதிர்ஷ்ட இரத்தினம்

கோமேதகம் அணிவது மிகவும் சிறப்பைத் தரும். இரத்தினக் கற்களில்மர நிறமுடைய கற்களை அணிய வேண்டும். நீலநிறம் கற்களும்அணியலாம்.

அதிர்ஷட நிறங்கள்

நீலநிறம் மிகவும் சிறந்தது. நீலக்கோடுகள் குறைந்தபட்சம்இருக்கவேண்டும். மஞ்சள் நிறமும் அதிர்ஷ்டமானது. இலேசானபச்சை, நீலம் உடைகளும் நல்லதுதான். கருப்பு நிற ஆடைகளைத்தவிர்க்கவேண்டும்.

முக்கியக் குறிப்பு

சர்வ வல்லமை படைத்த இராகுவானவர். எந்த ஒரு நிகழ்ச்சியானாலும்சரி, தன்னுடைய இஷ்டப்படியேதான் நடத்துவார். எனவே 4ந் தேதிபிறந்த அன்பர்கள் தங்களுடைய வாழ்க்கையில், எதிர்பாராதமாற்றங்களை சந்திக்க வேண்டியது வரும். அந்த மாற்றங்களைஎல்லாம் நன்மைக்கே என்று மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுசெயல்பட்டால், அதிர்ஷ்டங்கள் பின்பு தாமே வந்து சேரும்.

4 ஆம் தேதி பிறந்தவர்கள்

இவர்கள் கரகரப்பாகப் பேசுவார்கள். கண்டிப்பும், அதிகாரமும்நிறைந்து பேசுவார்கள். இவர்களுக்குத் துணிச்சலும், பலமும் அதிகம்.போலீஸ், போர் வீரர்கள் போன்று உடல்வாகு அமையும். அடிக்கடிஇவர்களுக்குச் சோதனைகள் ஏற்படும். அதைக் கண் கலங்காமல்,செயல்பட்டு வெற்றி அடைவார்கள். இளமையிலேயே திருமணம்நடக்க வாய்ப்பு உள்ளது! குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டியசூழ்நிலைகள் ஏற்படும். கணவன் மனைவி அன்யோன்யம் உண்டு!தெய்வ பக்தியும் இருக்கும்.

13 ஆம் தேதி பிறந்தவர்கள்

இவர்கள் துன்பங்களையே அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்பார்கள்.உண்மை அதுவன்று! சோதனை இல்லையேல் சாதனை இல்லை.இவர்களது இளமைக் காலப்போராட்டங்கள் எல்லாம் பிற்காலத்துவசதியான வாழ்விற்கு அடித்தளமாக அமைந்துவிடும்.காரணமில்லாமல் பலருடைய எதிர்ப்பையும், விரோதத்தையும்சம்பாதிக்க வேண்டியது வரும். இவர்கள் யாருக்கு உதவுகிறார்களோ,அவரே இவர்களுக்குத் துரோகம் செய்வார்கள்.

கடலில் அலைஓய்வதில்லை. அதைப்போன்றுதான் இவர்களது பிரச்சினைகளும்.இருப்பினும் தங்களின் கடும் உழைப்பால் பேரும் புகழும்,பெருஞ்செல்வமும், மிகச் சிறப்பாகத் தேடிக் கொள்வார்கள்.எதிர்பாராமல் வரும் துன்பங்களெல்லாம் எதிர்பாராமலேயே விலகிஓடும். ஆணவம் கொண்டு செயலாற்றினால் துன்பம் நிச்சயம்.நேர்மையும், கடுமையான உழைப்புமே இவர்களை உயர்த்தி விடும்.

22 ஆம் தேதி பிறந்தவர்கள்

அதிக நண்பர்களும், நல்ல பேச்சு சாமர்த்தியமும் உண்டு. நிர்வாகத்திறமையும், பிடிவாதமும் உண்டு. எப்படியாவது பணம் சம்பாதிக்கவேண்டும் என்று குறுக்கு வழியில் துணிந்து இறங்கி விடுவார்கள்.பின்பு அதனால் பிரச்சினைக்குள்ளாவார்கள். இவர்கள் எப்போதும்விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் இவரைச்சேர்ந்தவர்களே கவிழ்த்து விடுவார்கள். வீம்புக்காகச் சில செயல்களில்ஈடுபட்டால். தோல்விகளே மிஞ்சும். அரசியல், சினிமா, போட்டி,பந்தயங்களில் அதிர்ஷ்டங்கள் உண்டு. தீய நண்பர்களைத் தெரிந்துஅவர்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

31 ஆம் தேதி பிறந்தவர்கள்

சுய திருப்தியே இவர்களுக்கு முக்கியமாக இருக்கும். பணம்இவர்களைத் தேடி வர வேண்டுமே தவிர, இவர்கள் பணத்தைத்தேடினால் கிடைக்காது. தீவிரத் தன்மையும் அதிகாரம் செய்வதும்இவர்கள் குணம். உலக சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்றுவிரும்புவார்கள். மனோசக்தி மிகுந்தவர்கள். ஆன்மிகம், சோதிடம்,வேதாந்த ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உண்டு. எதிரிகளைத் துணிவுடன்சந்திப்பார்கள். உலகத்தில் உள்ள பல விஷயங்களையும், இவர்கள்அறிந்து வைத்திருப்பார்கள். மற்ற மனிதர்களை உடனே எடைபோடும் சாமர்த்தியம் உண்டு. அரசியலில் ஈடுபட்டால் நல்ல பதவிகள்கிடைக்கும்.

எண்(4) இராகுவிற்கான தொழில்கள்

இவர்களும் மனோ வேகம் நிறைந்தவர்களே! உடப்பயிற்சி, சர்க்கஸ்போன்ற உடல் சம்பந்தமான தொழிலும் ஒத்து வரும். தொழில்கள் ,ஊர் சுற்றிச் செய்யப்படும் தொழில்கள், யந்திரங்கள் மூலம்பொருள்கள் உற்பத்தி செய்தல், மெக்கானிக், மரத் தொடர்பானகைத்தொழில்கள், கால்நடைகள், நாய் போன்ற நாற்கால்பிராணிகளில் வியாபாரம் நன்கு அமையும்.

பேச்சில் சமர்த்தர்கள். பெரிய பேச்சாளர்களாகவும், அரசியலில்ஈடுபாடு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். கட்டிடம் கட்டுதல்,ஆட்களை விரட்டி வேலை வாங்குதல் தொழில்களும் இவர்களுக்குஒத்து வரும். .. மற்றும் அனைத்து வாகனங்கள் ஓட்டுதல் இவர்களுக்குமிகவும் பிடிக்கும்.
மக்களுக்கு தினமும் தேவைப்படும் தொழில்கள், இன்சினியரிங்தொழிலாளர்கள், பத்திரிக்கைத் தொழில், ஆகியவையும் ஒத்து வரும்.ரெயில்வே, பஸ், விமான நிலையங்கள் ஆகியவற்றில்வேலைவாய்ப்புகள் அமையும். வீடு, வாகனம் புரோக்கர்கள்,வக்கீல்கள், ஹாஸ்டல், ஹோட்டல் நிர்வாகிகளாகவும், மதுபானங்கள்விற்பனை, தாதா போன்ற வழியில் ஈடுபடுதல் (சிலர்) ஆகியவையும்அமையும்.

மீன், இறைச்சி வியாபாரம் மின்சாரம், இலக்கியம்தொடர்பான வேலைகள், மாந்தரீகத் தொழில்கள், ஆடு,மாடு, கோழிபோன்றவற்றை அறுக்கும் தொழில், விஷ வைத்தியம் செய்தல்,வித்தைகள் செய்து சம்பாதித்தல் போன்றவையும் அமையும். சிலர்சட்டத்திற்குப் புறம்பான தொழில்களிலும் ஈடுபடுவார்கள். எண்ணின்பலம் குறையும் போது மற்றவர்களை விரட்டிப் பிழைக்கவும்,ஏமாற்றவும் தயங்கமாட்டார்கள்

நவக்கிரக மந்திரங்கள் – ராகு

ராகு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ராகு தசை அல்லது ராகுஅந்தர் தசையின் போது: ராகவின் கடவுளான பைரவர் அல்லதுசிவனைத் தினமும் வழிபடவேண்டும். தினசரி காலபைரவர் அஸ்டகம்படிக்க வேண்டும்.

ராகு மூல மந்திர ஜபம்:

“ஓம் ஃப்ரம் ஃப்ரீம் ஃப்ரௌம் ஷக் ராகவே நமஹ”,

40 நாட்களில் 18000 முறை சொல்ல வேண்டும்.

ராகு ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
அர்த்தகாயம் மஹாவீர்யம்
சந்தராதித்ய விமர்தனம்!
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராஹீம் ப்ரணமாம் யஹம்!!

தமிழில்,

அரவெனும் ராகு அய்யனே போற்றி!
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி!
ராகுக்கனியே ரம்மியா போற்றி!!

தொண்டு: சனிக்கிழமை ன்று நன்கொடையாக உளுத்தம் பருப்புஅல்லது தேங்காய் கொடுக்கவேண்டும்.

நோன்பு நாள்: சனிக்கிழமை.

பூஜை: பைரவர் அல்லது சிவன் அல்லது சாண்டி பூஜை, துர்க்கை பூஜை.

ருத்ராட்சம்: 8 மற்றும் 4 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

ராகு காயத்ரி மந்திரம்
நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி|
தந்நோ ராஹு: ப்ரசோதயாத்||

ராகு தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தின், 75 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
அனைத்து ராகு தொடர்பான பிரச்சனைக்கும் துர்கா சப்தசதி ஒருசிறந்த தீர்வாக உள்ளது.

ஸ்ரீ துர்கா ஸப்தச்லோகி (எதிரிகளை வெல்ல)

ஓம் அஸ்ய துர்க்கா ஸப்தச்லோகீ ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
நாராயணரிஷி: அனுஷ்ட்டுப் ஆதீனி சந்தாம்ஸீனு
ஸ்ரீ மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹா ஸரஸ்வத்யோ தேவதா:
ஸ்ரீ ஜகதம்பாப்ரீத்யர் தே ஜபே (பாடே) விநியோக: னுனு

க்ஞாநினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸானு
பலதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி
துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம்ததாஸி

தாரித்ர்ய து: க்கபயஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா
ஸர்வா மங்கள மாங்கள்யே, சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே தர்யம்பகே தேவி நாராயணி நமோ(அ)ஸ்துதே

சரணாகத தீநார்த்த பரித்ராணபராயணே
ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்துதே
ஸர்வஸ்வரூபே ஸர்வவேசே ஸர்வசக்தி ஸமன்விதே
பயேப்யஸ்த்ராஹி நோ தேவி துர்க்கேதேவிநமோ(அ)ஸ்துதே

ரோகாநசே ஷாநபஹம்ஸி துஷ்டா
ருஷ்டாது காமான் ஸகலானபீஷ்டான்
த்வாமாச்ரிதானாம் ந விபந்நராணாம்
த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ரயாந்தி

ஸர்வா பாதா ப்ரசமனம், த்ரைலோக்யஸ்யாகிலேச்வரி
ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத்வைரி விநாசனம்
(இதை பாராயணம் செய்வதால் ஆயுள்,
ஆரோக்கியம், ஐச்வர்யம், தனதான்ய ஸம்ருத்தி,

ஸந்தானபாக்யம், ஜ்ஞானம் முதலியன உண்டாகும்)

சங்கீத முமூர்த்திகளில் ஓருவரும், வேத விற்பன்னருமான ஸ்ரீ மான் முத்துசாமி தக்ஷிதர் அருளியது.

ராகு பகவான் கீர்தனைகளை ராமப்ரியா ராகத்திலும்.
ராகு பகவான் கீர்த்தனம் – பல்லவி
ஸம்ராம்யஹம் ஸதா ராஹூம் –
ஸூர்ய சந்த்ர வீக்ஷ்யம் விக்ருததேமஹம் ஸ்மராமி

அனு பல்லவி
ஸூராஸூரம் ரோகஹரம் ஸர்பாதி பீதிஹரம்
ஸூர்ப்பாஸன ஸூகரம் ஸூலாயுததரகரம் – ஸ்மராமி
சரணம்
கராளவதனம் கடினம் கயாநார்ண கருணார்த்தரா பாங்கம்
சதுர்புஜம் கட்க கேடாதி தரணம் சர்மாதி நீல வஸ்த்ரம்
கோமேதாகபரணம்ஸனி சூக்ர மித்ர குருகுஹ ஸந்தோஷ கரணம் -ஸ்மராமி

சந்த்ர, சூர்ய கிரகண காலங்களில் காணப்படுபவரும், விகாரமானஉடலை கொண்டவரும், அசுரனாய் இருந்து பின்னர் சூரனாய்ஆனவரும், நோய்களை தீர்ப்பவரும், விஷ பயம் அகற்றுபவரும், முறம்போன்ற ஆசனத்தை கொண்டுள்ளவரும், சூலாயுதம் தரித்து பயங்கரமுகம் கொண்டவரும், கடினமானவரும், கயாந மந்திரம் உள்ளவரும்,கருணை கடலானவரும், நான்கு கரங்கள் கொண்டவரும், கத்தி,கேடயம் போன்ற ஆயுதங்களை ஏந்தியவரும், தோல் முதலிய கறுப்புவஸ்திரம் அணிந்துள்ளவரும், கோமேதக, ரத்ன ஆபரணங்களைஅணிந்துள்ளவரும், சனி, சுக்ரனுக்கு நண்பருமான ராகு பகவானைதுதிப்போம்.

ராகு பகவானுக்கு மிகவும் பிரீத்தியானவை.

ராகு பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்

ராசி    அதிபதித்துவமற்றது
திக்கு தென்மேற்கு
அதி தேவதை பசு
ப்ரத்யதி தேவதை பாம்பு
தலம் காளத்தி,திருநாகேஸ்வரம்
வாகனம் நீலச்சிம்மம்
நிறம் கருமை
உலோகம் கருங்கல்
தானியம் உளுந்து மலர் மந்தாரை
வஸ்திரம் நீல நிறம்
ரத்தினம் கோமேதகம்
நைவேத்யம் உளுந்து பொடி அன்னம்
சமித்து அருகம் புல்

11 ஞாயிற்று கிழமைகள் துர்க்கைக்கு எலுமிச்சம் பழ தோலில்ஏற்றப்படும் நெய் தீபம் சிறந்த ராகு தோஷ பரிகாரமாகும். ராகு காலவேளைகளில் துர்க்கை வழிபாடு மிகச் சிறந்தது. அபிஷேக,ஆராதனைகள் முடித்த பின்னர் நவக்கிரக பீடத்தில் உள்ள ராகுபகவானை வலம் வர வேண்டும். கோமேதகம் கொண்டஆபரணங்களை அணிந்து கொள்ளலாம்.

வெள்ளியாலானசர்ப்பத்தையும், உளுந்து தானியத்தையும், கருப்பு வண்ணஆடைகளையும் தானம் கொடுக்கலாம். நீல நிற ஆடை அணிந்து,ராகு பகவானுக்கு நீல நிற ஆடை அணிவித்தும், உளுந்து பொடிகொண்ட அன்னத்தை நைவேத்யம் செய்தும், மந்தார மலர்கள்கொண்டு அர்ச்சனை செய்தும், அருக்கு சமித்து தூபம் காணபித்தும்,நெய் விளக்கு ஏற்றியும் ராகு பகவானை வழிபட வேண்டும். அருக்கம்புல்லினால் விநாயகருக்கு செய்யப்படும் அர்ச்சனைகளும், ராகுவின்அதி தேவதைகளான காளி, பசு, பாம்பு வழிபாடும் ராகு பகவானுக்குமிகவும் பிரீத்தியானவை.

சிறப்பு.

ராகு கால வேளைகளில் செய்யப்படும் பாலாபிஷேகம் ராகு, கேது,நாக தோஷங்களுக்கு சிறந்ததொரு பரிகாரமாகும். தேவாரம் பாடியமூவராலும் பாடப்பெற்ற திருத்தலம் இது.

செண்பகாரண்யம் என்றுஅழைக்கப்படும் இத் தலத்தின் இறைவன் நாகநாதரான நாகேஸ்வரர், இறைவி பிறையணிவாள்நுதல் அம்மை மற்றும் கிரிகுஜாம்பாள்.செண்பக விநாயகர், முருகன், லஷ்மி, அறுபத்து மூவர், நடராஜர்,சோமஸ்கந்தர், சண்முகன், சேக்கிழார், சமயக் குரவர் நால்வர் போன்றபரிவார மூர்த்திகளும் உள்ளனர். நாற்புரமும் தேரோடும் வீதிகளுடன்,மூன்று பிரகாரங்களையும், இரண்டு ஐந்து நிலை கோபுரங்களும்கொண்டு மிகப் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் இத் தலத்தின் தலவிருட்சம் செண்பக மரம். இங்கு கணப்படும் சூரிய தீர்த்தத்துடம்மேலும் 11 தீர்த்தங்கள் உள்ளதாக ஐதீகம்.

தோஷ நிவர்த்திகளுக்கான தீப எண்ணிக்கைகள்
தோஷங்கள் தீப எண்ணிக்கைகள் தோஷங்கள் தீப எண்ணிக்கைகள்
ராகு தோஷம்நீங்க 21 தீபங்கள் திருமண தோஷம் நீங்க 27 தீபங்கள்
புத்திர தோஷம்நீங்க 51 தீபங்கள் சர்ப தோஷம் நீங்க 48 தீபங்கள்
களத்திர தோஷம்நீங்க 108 தீபங்கள் சனி தோஷம் நீங்க 19 தீபங்கள்
குரு தோஷம் நீங்க 33 தீபங்கள் செவ்வாய் தோஷம்நீங்க 18 தீபங்கள்
ஈஸ்வரனைவழிபடுவதற்கு 11 தீபங்கள் துர்க்கையை
வழிபடுவதற்கு

36 தீபங்கள்
ராகு தோஷ பரிகார வழிபாடு
ராகு பகவான் ஒரு சிறந்த சிவ பக்தர். ராமேஸ்வரம், காளகஸ்தி,திருக்களர் ஆகிய திருத் தலங்களில் ராகு சிறப்பானவர் எனினும்திருநகேஸ்வரத்தில் மட்டுமே, தனது தேவியர் இருவருடன் தனிக்கோயில் கொண்டு அருள்பாளிக்கிறார். இத் தலத்தில் செய்யப்படும்பால் அபிஷேகம் மிகச் சிறந்த ராகு தோஷ நிவர்த்தியாகும்.

அர்ச்சனை, ஆராதனைகள் கூடுதல் சிறப்பு. 11 ஞாயிற்று கிழமைகள்துர்க்கைக்கு எலுமிச்சம் பழ தோலில் ஏற்றப்படும் நெய் தீபம் சிறந்தராகு தோஷ பரிகாரமாகும். ராகு கால வேளைகளில் துர்க்கைவழிபாடு மிகச் சிறந்தது. அபிஷேக, ஆராதனைகள் முடித்த பின்னர்நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை வலம் வர வேண்டும்.கோமேதகம் கொண்ட ஆபரணங்களை அணிந்து கொள்ளலாம்.
வெள்ளியாலான சர்ப்பத்தையும், உளுந்து தானியத்தையும், கருப்புவண்ண ஆடைகளையும் தானம் கொடுக்கலாம். நீல நிற ஆடைஅணிந்து, ராகு பகவானுக்கு நீல நிற ஆடை அணிவித்தும், உளுந்துபொடி கொண்ட அன்னத்தை நைவேத்யம் செய்தும், மந்தார மலர்கள்கொண்டு அர்ச்சனை செய்தும், அருக்கு சமித்து தூபம் காணபித்தும், நெய் விளக்கு ஏற்றியும் ராகு பகவானை வழிபட வேண்டும். அருக்கம்புல்லினால் விநாயகருக்கு செய்யப்படும் அர்ச்சனைகளும், ராகுவின்அதி தேவதைகளான காளி, பசு, பாம்பு வழிபாடும் ராகு பகவானுக்குமிகவும் பிரீத்தியானவை.

ராகு பகவான் தோஷங்கள் நீங்கிட

ராகு பகவானுக்கு, ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்து, நீலவஸ்திரம் உடுத்தி, கோமேதக ஆபரணங்கள், நீல மந்தாரை,இலுப்பைப் பூ மலர்களால் அலங்கரித்து, அருகம்புல்லால் யாஹத்தீயிட்டு, ராகுக்குரிய மந்திரங்கள் ஓதி, உளுந்து பருப்புப் பொடிஅன்னம் நைவேத்யம் வைத்து, ராமப்ரியா ராகத்தில் ராகுக்குரியகீர்த்தனைகளை பாடி தீப தூபம் காட்டி வழிபட வேண்டும்.
பிதாமகா காரகனான ராகு பகவான் வேடத் தொழில், பரதேச வாசம்,புத்திர தோஷம், விஷ பயம், குஷ்டம், வெட்டுக் காயம், ஜல கண்டம்,பிரதாபம் போன்றவற்றை நீச்சத்தில் அளிப்பவர். ராகு காலவேளைகளில் துர்க்கையை எலுமிச்சம் பழ மூடியில் தீபமேற்றிவழிபடுவதும், திருநாகேஸ்வரம் சென்று தனி சந்நதியில் உள்ளராகுவை வழிபடுவதும், கோமேதகம் அணிவதும், நாகராஜனைவழிபடுவதும், உளுந்து தானம் செய்வதும் ராகு தோஷ நிவர்த்தி தரும்.

சிறப்பான சில குறிப்புகள்

எண் : 4

எண்ணுக்குறிய கிரஹம் : ராகு

அதிர்ஷ்ட தேதிகள் : 1,10,19,28,2,11,20,29,3,16,25

அதிர்ஷ்ட கிழமை : ஞாயிறு, செவ்வாய்

அதிர்ஷ்ட மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, ஜுலை, அக்டோபர்,நவம்பர்

அதிர்ஷ்ட ரத்தினங்கள் : கோமேதகம், வெளிர்நீலக்கல்

அதிஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட நிறங்கள் : சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட தெய்வங்கள் : துர்கை, காளி, மாரியம்மன், ஷர்ப்பம்

அதிர்ஷ்ட மலர்கள் : மந்தாரை மற்றும் நீல நிற மலர்கள்

அதிர்ஷ்ட தூப, தீபம் : மருதாணி, குங்குல்யம் கலந்த தூப, தீபம்

அதிர்ஷ்ட சின்னங்கள : ஆடு, சூலம், நாகத்துடன் சேர்ந்தஅம்மன்,

அதிர்ஷ்ட மூலிகைகள் : மந்தாரை, மரிக்கொழுந்து

அதிர்ஷ்ட யந்திரங்கள் : சூலினி யந்திரம், சர்ப்ப யந்திரம்

அதிர்ஷ்ட எண் : 1

ஆகாத எண் மற்றும் கூட்டுத்தொகை : 8

ஆகாத தேதிகள் : 8,17,26

No comments:

Post a Comment