கோடி புண்ணியம் தரும் எள் தானம்
எள், ஸ்ரீவிஷ்ணு பகவானின் வியர்வையில் இருந்து உருவானது. அதனால், எள் தானம் செய்தால் பல புண்ணியங்கள் கிட்டும். அதனால்தான், பித்ருக்களுக்கு பிண்டம் கொடுக்கும்போது எள்ளையும் கலந்தே தருகிறோம். தர்பைப் புல் ஆதியில் ஆகாயத்தில் உருவானது என்கிறது கருட புராணம்.
அதனால், பல தேவர்களின் அருளாசியும், தெய்வங்களின் அருளாசியும் தர்பைக்கு இருக்கிறது. ரேடியோ அலைகளை பெற ஆண்டனா உதவுவதை போல, நாம் சொல்லும் மந்திரங்கள், மிக வேகமாக அந்தந்த தெய்வங்களை சென்றடைய தர்ப்பை உதவுகிறது.
இப்படி சக்தி வாய்ந்த தர்ப்பையை கையில் வைத்துக்கொண்டு பித்ருக்களுக்கு பிண்டம் படைத்தால் அவை பித்ருகளை எளிதாக சென்றடைந்து அதன் பலனாக பல தோஷங்கள் நீங்கும்.
பூஜை முறைகள் கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து, பித்ருக்களின் படங்கள் இருந்தால், அதில் துளசி மாலையோ அல்லது துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும். முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது.
அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும். தோஷத்தையும் சாபத்தையும், அதனால் ஏற்படும் சுப தடைகளை நீக்கி நன்மைகளை அள்ளி தர பித்ருக்கள் காத்திருக்கிறார்கள். அதனால் பித்ருக்களுக்கு மரியாதை தந்து, அவர்களின் பசியை போக்க தை அமாவாசை அன்று பிண்டம் படைத்து பூஜை செய்ய வேண்டும். மறவாதீர்கள். நாம் தரும் பிண்டம்தான் ஆத்ம ரூபமாக உள்ள முன்னோர்களின் பசியை தீர்க்கும் உணவாகும்.
விசேஷமான தை அமாவாசையில், பித்ருக்களின் பசியை போக்கி அவர்களின் ஆசியையும், இறைவனின் அருளையும் பெற்று சுபிக்ஷங்களை தடையின்றி பெறுவோம்.!
No comments:
Post a Comment