கணவன் மனைவி ஒற்றுமைக்கும் மகிழ்ச்சியான வாழ்விற்கும் உதவும் ஆன்மீக ரகசியங்கள்
தம்பதிகள் ஒற்றுமைக்கு உதவும் பொதுவான மற்றும் குறிப்பிட்ட தேவைகளுக்கான சில ஆன்மீக ரகசியங்கள் உள்ளன.இவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது தேவையான ஒன்றைப் பின்பற்றி மகிழ்ச்சியான வாழ்வு வாழுங்கள்.
1.திருமணம் ஆனதும் தம்பதிகள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வ ஆலயங்களுக்குச் செல்லும் முன் முதலில் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்திற்குச் சென்று வணங்குவது தம்பதிகளுக்குள் அன்யோன்யத்தையும் அன்பையும் வளர்க்கும்.
2.மனைவியின் அன்பைப் பெற திங்கட்கிழமை அன்று ஏதாவது வெள்ளை நிறமுடைய பொருட்களை அன்பளிப்பாக (GIFT) அளிக்கலாம்.
3.நீங்கள் ஒழுக்கமாக நடந்து கொண்டாலும் உங்கள் மனைவி உங்களுக்கு வேறு ஒருவருடன் தவறான தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்து வந்தால் வெள்ளிக்கிழமை தோறும் பசுவுக்குப் புல் வாங்கிக் கொடுத்து வர உங்கள் மனைவியின் மனம் மாறி உங்கள் மீது அன்பு ஏற்படும்.
4.வளர்பிறை அஷ்டமி அன்று மனைவியின் நெற்றி மற்றும் வகிட்டில் கணவர் செந்தூரம் அல்லது குங்குமம் இட்டு வரத் தம்பதிகளுக்குள் அன்யோன்யம் பெருகும்.
5.கௌரி ஷங்கர் ருத்ராக்ஷம் ( இயற்கையாக இணைந்த ருத்ராக்ஷம் ) வீடு அல்லது அலுவலகத்தில் வைத்துப் பூஜித்து அணிந்து வர தம்பதிகளுக்குள் அன்யோன்யத்தையும் ஏற்படும்.
No comments:
Post a Comment