ஜடை பின்னலாக பரவி இருக்கும் 72,000 நரம்புகள்
மனித உடலில் உள்ள எல்லா பாகங்களும் சரியான முறையில் இயங்குவதற்கு 72,000 நரம்புகள்தான் உதவுகின்றன.
இவைகளில் ஏதாவது ஓர் நரம்பு பாதித்தால் அந்த நரம்பு எந்த பகுதிக்கு செல்கிறதோ அந்த பகுதியும், அதை சார்ந்த உறுப்பும் பாதிக்கும்.
பின்பு இதன் துணை உறுப்பு பாதிக்கும்.
மனித உடல் முழுவதும் நரம்புகள் வலைப்பின்னல் போல பரவி இருப்பதால் உடலில் எந்த இடத்தில் அடியோ அல்லது தாக்குதலே ஏற்பட்டால், அந்த பாதிப்பானது நரம்பு மண்டலத்தையே பாதிக்கிறது.
இந்த நரம்புகள் எல்லாமே எலும்பு போர்வையின் இடுக்குகள் மற்றும் சந்து பொந்துகளின் வழியாக உடல் முழுவதும் செல்கின்றன.
மனித உடலில் உள்ள கால்களில் நரம்பு எப்படி உள்ளது என்றால், பெண்கள் தலைமுடியை சடை பின்னுவது போல் அமைந்திருக்கின்றன.
72,000 நரம்புகளும் வலை பின்னல் போலவும், சடை பின்னல் போலவும் உள்ளன.
நரம்புகளில் எந்த இடத்தில் ரத்த ஓட்டம் இல்லையோ அந்த இடத்தில் ரத்த ஓட்டத்தை சீரான நிலைக்கு கொண்டு செல்ல கூடியது வர்மகலை மருத்துவமே.
இவ்வாறான சிறப்பு இந்த வர்ம கலை மருத்துவத்துக்கு மட்டுமே உள்ளது.
மனித உடலில் இருக்கும் 72,000 நரம்புகள்.
எந்த இடத்தில் எத்தனை எத்தனை உள்ளன என்பவை வருமாறு:
தலை உச்சியில் - 7000,
காதுகளில் - 3000,
கண்களில் - 4000,
மூக்கில் - 3300, கன்னத்தில் - 5000, பிடரிக்குக்கீழே தோள்வரை - 6000, கழுத்தில் - 1000,
கையில் - 3000,
தோளுக்கும், தொப்புளுக்கும்
இடையில் - 9016,
பிடரியின் கீழ் - 8000,
விலாவில் - 3000,
இடுப்பு மற்றும் சிறுநீர் பாதை வழியே உள்ள நரம்புகள் - 7000,
மூலாதாரத்தில் - 2000,
பாதங்களில் - 1500,
இடுப்பு முதல் பாதம் வரை - 9154
என மொத்தம் 72,000 நரம்புகள் பரவி உள்ளன.
இவ்வறாக மனித உடம்பை 72,000 நரம்புகள் இயக்குகின்றன.
விலா எலும்புகளில் உள்ள முண்டல் வர்ம புள்ளி பாதிக்கப்பட்டால் தொடர் இருமல், அடிக்கடி காய்ச்சல் ஏற்படும்.
இந்த வர்ம புள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள பள்ள வர்மம் பாதித்தால் அல்சர், ஜீரண கோளாறு, முதுகு எலும்புகளில் வலிகள் ஏற்படும்.
No comments:
Post a Comment