மேஷ ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள் :-
இந்த நூல் வடஇந்தியாவில் பலருக்கும் மிகப் பிரசித்தம்.இந்திய ஜோதிட மற்றும் கைரேகை சாஸ்திரத்தைப் பற்றிய பண்டைய நூலான இதில் சில எளிய மற்றும் சிறந்த பலன்களைத் தரும் பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.
இவற்றிற்கு தீக்ஷை எதுவும் தேவை இல்லை .இந்திய மட்டுமின்றி பாகிஸ்தான்,பங்களாதேஷ் மற்றும் ஹிந்துக்கள் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி மக்களும் பின்பற்றிப் பலன் பெறுகின்றனர்..
மேஷ ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள் :-
1.எந்தப் பொருளையும் இலவசமாக வான்காதேர்கள்.ஒரு சிறு தொகையாவது கொடுத்தே வாங்குங்கள் .
2.சிகப்பு நிற கர்ச்சிப் பயன்படுத்துவது அதிர்ஷ்டமாகும்.
3.பின்னமில்லாத டிசைன் இல்லாத வெள்ளிக் காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள வாழ்வில் நன்மைகள் பெருகும்.பெண்கள் வெள்ளியில் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.
4.ஸ்வீட் அல்லது மிட்டாய் செய்பவராக ஸ்வீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்யக்கூடாது .இது அதிர்ஷ்டத்தைக் கெடுக்கும்.
5. வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்கக் கூடாது.
6.தாய்,குரு மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள்,ஞானிகளுக்குமுடிந்த உதவி , சேவை செய்தல் வேண்டும்.
7.உறங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.அந்த நீரைக் காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு ஊற்றி வரவும்.
No comments:
Post a Comment