விதியால் பிரிந்த அன்பு நிறைந்த தம்பதியர், நேசிப்போர் ஒன்று சேர
செவ்வாய் கிழமையில் அசோக மரத்து இலை ஒன்றை எடுத்து ஓடும் நீரில் ( குழாய் நீரிலும்) கழுவி ,மனம் ஒன்றி பிரிந்தோர் ஒன்று சேர வேண்டுதல் வைத்து, சிகப்பு சந்தனத்தால் அசோக மரத்து குச்சி கொண்டு சிறியதாக 'சீதாராம்' என இலையை சுற்றிலும் ஒன்பது முறை எழுதி, நடுவில் தம்பதியர் இருவர் பெயரையும் எழுதி, பூஜை அறையில் வைக்கவும்.
இவ்வாறாக ஒன்பது செவ்வாய்கிழமைகள் புதிய இலையில் எழுதவும். நேரம், திசை போன்றவை பார்க்க அவசியமில்லை. எழுதிய ஒன்பது இலைகளையும், ஒன்பதாம் செவ்வாய் அன்று, நுனியை ஒன்று சேர சிகப்பு நூலால் கட்டி, ஹனுமன் சன்னதி சென்று ஏதேனும் ஓர் கால் படாத இடத்தில வைத்து விட்டு, ஹனுமனை தியானித்து விட்டு வரவும்.
மிக சக்தி வாய்ந்த இந்த முறை, விரைவில் தம்பதியரை ஒன்று சேர்க்கும். இருவரில் யார் ஒருவர் வேண்டுமானாலும் செய்யலாம்.
is it possible ?
ReplyDelete