கனவில் தீர்வுகள் சொல்லும் ஸ்ரீ ஸ்வப்ன சக்ரேஸ்வரி மந்திரம்
அமாவாசை அன்று ஜெபிக்கத் தொடங்கவும்.ஒரு புது விளக்கு வாங்கி (அகல் விளக்கு அல்லது எந்த விளக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.) அதில் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்றி இம்மந்திரத்தை வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வரவும். குறைந்தது 108 தடவை அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.
மந்திர ஜெபத்தின் எண்ணிக்கை கூடக்கூடச் சிறப்பான பலன் கிடைக்கும். 90 நாட்கள் ஜெபித்து வரவும்.ஜெபம் செய்யும் முன் விளக்கின் அருகில் ஒரு செம்பில் கொஞ்சம் பச்சைக்கற்பூரம் அல்லது ஒரு ஏலக்காய் போட்டு நீர் வைக்கவும்.ஜபம் முடிந்ததும் அந்த நீரைக் குடித்து விடவும்.
அவரவரது பூர்வ ஜென்ம புண்ணிய பலனைப் பொருத்துச் சிலருக்கு முன் பின்னாகப் பலிக்கும்.
முதல் நாள் பச்சைக் கற்பூரம், தேங்காய்த் துருவல்,ஏலக்காய் போட்டுக் காய்ச்சிய பால், வெற்றிலை,பாக்கு, பழங்கள், பலகாரங்கள் வைத்து ஜெபிக்கவும். மல்லிகை,பிச்சி அல்லது தாமரை இதழ்களால் மந்திரத்தை 27 தடவை ஜெபித்து விளக்கின் பாதத்தில் பூவைச் சமர்ப்பிக்கவும்.
அடுத்து வரும் நாட்களில் வாழைப்பழம், கற்கண்டு மட்டுமாவது படைக்கவும்.
அசைவம் தவிர்க்கவும்.
முதல் நாளைப் போல் 90 வது நாளும் சிறப்பாக நைவேத்யம் படைத்து பூஜிக்கவும்.
ஸ்ரீ ஸ்வப்ன சக்ரேஸ்வரி தேவி மந்திரம் :-
ஓம் நம ஸ்வப்ன சக்ரேஸ்வரி |
ஸ்வப்னே அவதர அவதர |
கதம் வர்த்தமானம் கதய ஸ்வாஹா ||
No comments:
Post a Comment