Sunday, 17 January 2016

பிரிந்த தம்பதி சேர வழி

பிரிந்த தம்பதி சேர வழி :-

இதிகாசரத்தினம் என்று சிறப்பிக்கப்படும் ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பகுதி மிகவும் புனிதமானது. சுந்தரம் என்பதற்கு "அழகு' என்பது பொருள்.

சீதாதேவியைப் பிரிந்த ராமபிரானுக்கு அனுமன் மூலம்,"கண்டேன் சீதையை' என்ற நல்ல செய்தி கிடைத்தது இதில் தான். அசோகவனத்தில் சோகமே உருவாக அமர்ந்திருந்த சீதைக்கு நம்பிக்கை ஒளியாக அனுமன் தோன்றி ராமனின் வரவிருப்பதை எடுத்துச் சொன்னதும் இப்பகுதியே.

கிரக தோஷத்தினால், பல்வேறு சோதனைகளில் சிக்கி செய்வதறியாது திகைப்பவர்கள், திருமணமாகாத கன்னியர்கள் மிகச் சிறந்த பரிகாரமாக சுந்தர காண்ட பாராயணத்தை அருளாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர இதை விடச் சிறந்த பரிகாரம் வேறு இல்லை. காயத்ரிமந்திரம் ஜெபித்த பலனை சுந்தரகாண்டத்தின் மூலம் பெறமுடியும்.

சுந்தரகாண்டத்தில் 68சர்க்கங்கள்(பகுதிகள்) உள்ளன. வளர்பிறையில் நல்லநாளில் தொடங்கி, தொடர்ந்து ஒருநாளைக்கு ஒரு சர்க்கம் வீதம் 68 நாட்கள் பாராயணம் செய்யவேண்டும். 68வது நாளில் ராம பட்டாபிஷேக சர்க்கத்தையும் சேர்த்து படித்து நிறைவு செய்யவேண்டும்.

தினமும் ராமர் படத்தின் முன் பால் அல்லது பழம் படைத்து வழிபடவேண்டும். உலகமே கைவிட்டாலும் உத்தமனான ராமன் சோதனைக்குள்ளானவர்களை கைவிடமாட்டான். சொல்லின் செல்வனான அனுமன் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யும் இடத்தில் சூட்சுமவடிவில் எழுந்தருள்வான் என்பது ஐதீகம்.

சுந்தரகாண்டம் நீங்கலாக "ஸ்ரீராமஜெயம்' மந்திரத்தை 108 முறை எழுதுவதோ, ஜெபிப்பதும் இதற்குரிய பரிகாரமே.

No comments:

Post a Comment