ஜீவசமாதிலிருந்து ஸ்ரீ ராகவேந்திரர் பேசிய முதல் வரி
இப்படத்தில் உள்ளவர் அப்பண்ணாச்சாரியார் இவர் குரு ராகவேந்திர சுவாமிகளின் சீடர். குரு மேல் அளவிலா பக்தி கொண்டவர். தான் ஜீவ சமாதி அடையும் செய்தியை ஊர் மக்களுக்கு அறிவிக்க அனுப்ப இருப்பார். அப்போது குரு அவர்கள் கூறினார் "அப்பண்ணா, நீ திரும்பி வருகையில் காணகிடைக்காத காட்சியை காண்பாய் " என ஆசீர்வதித்து அனுப்பினார்.
அதுபோலவே அப்பண்ணாச்சாரியார் ஊர் மக்களுக்கு செய்தி சொல்லி திரும்பும் வேளையில் குரு ராகவேந்திர சுவாமிகள் ஜீவசமாதிக்குள் அமர்ந்து பிருந்தாவனம் முழுமையாக எழுப்பபட்டு இருந்தது. முதல் தீபஆராதனை செய்யும் நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார் அப்பண்ணாச்சாரியார். அப்போது ஜீவசமாதியில் இருக்கும் குருவை நோக்கி பாடிய ஸ்லோகமே "ராகவேந்திர ஸ்தோத்திரம் ".
இந்த ஸ்தோத்திரத்தின் முடிவில் குருவை காண முடியாமல் நா தழுதழுத்த அப்பண்ணாச்சாரியை தேற்ற, ஜீவ சமாதியில் இருந்து ஸ்தோத்திரத்தின் கடைசி வரியை குரு ராகவேந்திர சுவாமிகள் தன் குரலால் நிறைவு செய்தார்.
அந்த வரிகள்
"சாக்ஷி ஹயா சூத்திரஹி ".
இதன் பொருள் இதுவரை அப்பண்ணாச்சாரியார் பாடிய அனைத்து ஸ்தோத்திர வரிகளுக்கு அந்த ஹக்ரீவரே சாட்சி என்பதாகும்.
அதனால் குரு ராகவேந்திர சுவாமிகளின் ஸ்தோத்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. காரணம் கடைசி வரிகள் குருவே தன் குரலால் ஸ்தோத்திரத்தை நிறைவு செய்ததால் ஆகும்.
குருவே சரணம்!!!
No comments:
Post a Comment