விருச்சிக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.வீட்டில் மண்ணால் செய்யப்பட பாத்திரத்தில் தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டம் உண்டாக்கும்.
2.தினமும் காலையில் கொஞ்சம் தேன் சாப்பிடுவது நலம் தரும்.
3.அரச மரம் மற்றும் முட்செடிகளை வெட்டக் கூடாது.
4.செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.
5.சிகப்பு நிற கர்ச்சீப் ,டை அதிர்ஷ்டம் தரும்.
6.பால் காய்ச்சும் பொழுது பொங்கி வடியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
7.இனிப்பு ரொட்டி செய்து சாதுக்கள்,மகான்களுக்கு வழங்கலாம்.
8.யாரிடம் இருந்தும் எந்தப் பொருளும் இலவசமாகப் பெறாதீர்கள்.அப்படிப் பெற்றால் அதற்குப் பதில் ஒரு பொருளேனும் கொடுத்து விடவும்.
9.செவ்வாய்க்கிழமை அன்று தேன், குங்குமம் சிகப்பு ரோஜா இவற்றை ஓடும் நீர் அல்லது கடலில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
10.செவ்வாய்க் கிழமைகளில் இஷ்ட தெய்வத்திற்குச் சிகப்பு பூந்தி படைத்து வழிபட்டு வருவது வாழ்வில் வளம் சேர்க்கும்.
11.சகோதர்களின் மனைவியுடன் சண்டை இல்லமால் பார்த்துக் கொள்ளுங்கள்.
12.மூத்த சகோதரரிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் .
13.செவ்வாய்க் கிழமைகளில் ஹனுமனுக்கு செந்தூரம் மற்றும் ஆடை சாற்றி வழிபட வறுமை,கடன்,நோய்கள் நீங்கிய நல்வாழ்வு கிட்டும்.
No comments:
Post a Comment