பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் பரிகாரங்கள்.
ஒருவர் ஜாதகத்தில், சனி, குரு இணைந்தோ, ஒருவரை ஒருவர், பார்த்து இருந்தாலோ 99 % அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதாக அர்த்தம். நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும், இது பொருந்தும்.
ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால், ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள்.
* பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுபத்து, திருமணம் செய்யாமல் இருத்தல்
* பலரின் உழைப்பை உறிஞ்சி, அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது
* குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது
* குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுவது
* வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது
* சென்ற பிறவிகளில், ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல்
* உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும், அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)
பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?
* வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்
* தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்
* மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய் வரும்
* தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்
* திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது
* குழந்தைப் பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்
பரிகாரம்:
தமிழ்நாடு, கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று, பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து, ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல். அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல். இதுவே மிகவும் சிறந்த பரிகாரமாகும். இதனை செய்தால் 6 மாதத்திற்குள் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
No comments:
Post a Comment