தேமல் மறைய சில வழிகள் !!!
# 1ஆரஞ்சு தோலை பொடி செய்து தினமும் தேயத்து குளித்து வந்தால் தேமல் குறையும்.
#2மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை தேமல் உள்ள பகுதிகளில் தேய்த்தால் தேமல் மறையும்.
#3மலைவேம்பு இலைகளை அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு குறையும்.
#4துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.
#5கீழாநெல்லி இலை, கொத்தமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து தேமல் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல் குறையும்.
#6வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்துவர தேமல் குறையும்.
#7தேமல் மறைய சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்
#8முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.
#9ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.
#10தொட்டாற்சுருங்கி இலையை நன்கு அரைத்து அதன் சாற்றை தேமல் உள்ள இடங்களில் காலையிலும் மாலையிலும் தடவிவந்தால் ஐந்தே நாட்களில் தேமல் பறந்து போய்விடும்.
#வேப்பிலைகளை அரைத்துத் தேமல் மீது தடவிவர தேமல் குறையும்
#குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.
#தேமல் மறைய சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்
#கை, மார்பு, தொடைப் பகுதிகளில் ஆங்காங்கே தேமல் இருக்கிறதா? மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து உடம்பில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர தேமல் மறைய தொடங்கும்
குறிப்பு: தேமல் உள்ளவர்கள் சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.
No comments:
Post a Comment