Wednesday, 13 January 2016

நவகிரகங்களுக்குரிய தாந்திரீக மந்திரங்கள்

நவகிரகங்களுக்குரிய தாந்திரீக மந்திரங்கள்

சூரியன்
         
“ஓம்  ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ சூர்யாய நமஹ”

இந்த மந்திரத்தை 7000 தடவை ஜெபிக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமை சூரிய உதயத்திற்கும் முன் எழுந்து நீராடி சுத்தமான ஆடைகளை உடுத்தி, சூரியனை நமஸ்காரம் செய்த பின் இம்மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். சூரியனை சிவந்த மலர்கள், சிவந்த சந்தனம் இவைகளை கொண்டு பூஜிக்க வேண்டும்.

சந்திரன்

           
”ஓம்  ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ சந்த்ரமஸே  நமஹ”

இந்த மந்திரத்தை ௧௧௦௦௦ தடவை ஜெபிக்க வேண்டும். திங்கள் கிழமை மாலையில் சந்திரதரிசனம் செய்து சந்திர பகவானை வெண்ணிற மலர்களாலும், சந்தனத்தாலும் பூஜிக்க வேண்டும்.

செவ்வாய்

          
”ஓம்  ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ பௌமாய  நமஹ”

இம்மந்திரத்தை 10000  தடவை ஜெபிக்க வேண்டும். செவ்வாய் கிழமை சூரிய உதயத்தில், செவ்வாயை சிவந்த மலர்களாலும், சிவந்த சந்தனத்தாலும், பூஜிக்க வேண்டும்.

புதன்

            
”ஓம்  ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ புதாய நமஹ”

இம்மந்திரத்தை 9000 தடவை ஜெபிக்க வேண்டும். புதன்கிழமை சூரிய அஸ்தமனமாகும் நேரத்தில் புதனை பலவிதமான மலர்களை கொண்டு பூஜிக்க வேண்டும்.

குரு
              
”ஓம்  ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ குருவே  நமஹ”

இம்மந்திரத்தை 19000 தடவை ஜெபிக்க வேண்டும். வியாழகிழமை மாலை நேரத்தில் குருபகவானை மஞ்சள் நிறப் பூக்களை கொண்டு பூஜிக்க வேண்டும்.

சுக்கிரன்
               
”ஓம்  ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ சுக்ரயா  நமஹ”

இம்மந்திரத்தை 16000 தடவை ஜெபிக்க வேண்டும். வெள்ளிகிழமை சூரியோதயத்தில் வெள்ளை மலர்களாலும், சந்தனத்தாலும் சுக்கிரனை பூஜிக்க வேண்டும்.

சனி
                 
”ஓம்  ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ சனியே  நமஹ”

இம்மந்திரத்தை 24000 தடவை ஜெபிக்க வேண்டும். சனிகிழமை நண்பகல் நேரத்தில் சனிபகவான் சன்னிதியில் நல்லெண்ணெய் விளகேற்றி  வைத்து நீலமலர்களால் சனி பகவனை பூஜிக்க வேண்டும்.

ராகு
                 
”ஓம்  ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ ராகுவே  நமஹ”

இம்மந்திரத்தை 18000 தடவை ஜெபிக்க வேண்டும். இரவு நேரத்தில் மந்திர ஜெபம் செய்ய வேண்டும். புதன் கிழமை நடுஇரவில் ராகுவிற்கு பூஜை செய்ய வேண்டும்.

கேது
                    
”ஓம்  ஹ்ரைங், ஹ்ரீங், ஹ்ருங்சஹ கேது  நமஹ”

இம்மந்திரத்தை 1800 தடவை ஜெபிக்க வேண்டும். ஞாயிற்று கிழமை காலையில் அரளி மலர்களால் கேது பகவனை பூஜிக்க வேண்டும்.

No comments:

Post a Comment