Thursday, 3 December 2015

திருமணத் தடை மற்றும் கண்டங்கள் நீங்கிட!

திருமணத் தடை மற்றும் கண்டங்கள் நீங்கிட!

சீர்காழியில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் தரங்கம்பாடி சாலையில் உள்ளது திருவெள்ளக் குளம்.

இத் திருத்தலத்தினை தென் திருப்பதி எனவும் அண்ணன் தலம் என்ற சிறப்பு பெயரும் கொண்ட அற்புதமான வாழுங்காலத்தில் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இதுவாகும்.

தன்னிடமிருந்து உருவான அக்னியைக் கொண்டு தான் உருவாக்கிய உயிரினங்களை அழித்து, பூமாதாவின் பாரம் குறைக்க பிரம்மன் கட்டளையிட்டார். அக்னி உலகை அழிக்க, சங்கரன் அத்தீயை தடுத்திட்டார். தடுத்திட்ட தீ மறுபடியும் ஒன்று சேர்ந்து ஒரு பெண் தேவதையாய் ஆனது. (ம்ருத்யூ). பிரம்மன் மீண்டும் உலகை அழிக்க ஆணையிட்டார். பெண் தேவதை பாவச் செயல் செய்ய மறுத்திடவே, பெண்ணின் முன் பெண்ணாகவும், ஆணின் முன் ஆணாகவும் , கண்களிலிருந்து பலவித நோய்க்கிருமிகள் தோன்றிடவும், அந் நோய் கண்டவர் இறப்பர் என்றும் அத்தேவதைக்கு கட்டளையிட்டார்.

யமனின் தேவதையாகி, தமக்கிட்ட கட்டளையை கடமையாய் செய்யும் போது பாவம் உண்டாகாது என தெளிந்து , பற்பல நோய்களை உயிர்களுக்கு உண்டாக்கி பூமாதாவின் பாரம் குறைக்கலானார்.

இத் தலத்தில், விதிப்படி தீரா நோய் தீர்த்திட வேண்டியும், விதிப்படி நேர வேண்டிய கண்டங்களை (விபத்துக் கண்டங்கள்), பரிகார முறைப்படி , இறைவனுக்கு அர்ச்சனை செய்து, கருடாழ்வார் முன்பாக ஐந்து நெய் அகல் தீபங்கள் ஏற்றி, ஆலய வலம் வந்து வணங்க வேண்டும்.

அருகில், வில்வ மரம் ஒன்று உள்ளது. அங்கு அமர்ந்து ம்ருத்யுஞ்ச மந்திரத்தினை மனதினை ஒருமுகப் படுத்தி, ஜபித்திடுதல் வேண்டும்.

மும்முறை மந்திரத்தினை படித்து, இறைவனை மானசீகமாக வணங்கிடுதல் வேண்டும். அதன் பின்னர், கால பைரவருக்குத் தயிர் அன்னம் ஒரு இலையில் வைத்து வைக்க வேண்டும். கால பைரவர் ( நாய் ) அன்னமெடுத்திட வேண்டுமென்றால், முழுமனதுடன் வேண்டிட வேண்டும். குறைகள் இருந்திட்டால், பைரவர் அன்னமெடுக்காது.

பிற உயிரினங்கள் ஆடு, மாடு பைரவருக்கு வைக்கும் அன்னத்தினை உண்ணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தயிரன்னம் ( தயிர்சாதம்) பைரவர் உண்ட பிறகு, பிச்சையிடாமல் இல்லம் திரும்பி, சூரனை வென்ற திருக்குமரன் போட்டோவின் முன்பாக ஒரு நெய் அகல் தீபமேற்றி வழிபட்டு பரிகாரம் நிறைவு செய்யவும்.

தீரா நோய் மற்றும் கண்டங்கள் நீக்கும் தலம் மட்டுமல்ல ;
திருமணத்தடை மற்றும் புத்திர பாக்கியமின்மை ஆகிய குறைகளையும் களையும் தலம் இதுவாகும்.

திருமணத் தடைக்கு பரிகாரம் செய்வோர் துளசி மாலை மஞ்சள் தூள் இவற்றினை அர்ச்சனைப் பொருட்களுடன் கொடுத்து அர்ச்சனை செய்திடவேண்டும். மஞ்சள் தூளினை, ஆலயம் வருவோருக்கு வழங்க அர்ச்சகரிடம் சொல்லி கொடுத்திட வேண்டும். வழிபாடு - பரிகார முறைப்படி செய்யவும்.

No comments:

Post a Comment