Monday 28 December 2015

சரீரமே ( இந்த உடலே) சிவம்

சிவமயம் சிவாயநம

சரீரமே ( இந்த உடலே) சிவம் என்பது பற்றிப் பார்ப்போம்

ஷடாதார சக்ரஸ்தலம்

1. மூலாதாரசக்ரம்
ஸ்ரீகாமாக்ஷியம்பா ஸமேத ஏகாம்பரநாதம்

2.ஸ்வாதிஷ்டாணம்
திருஆணைக்கா
ஸ்ரீ அகிலாண்டேச்வரியம்பா ஸமேத ஜம்புகேச்வரம்

3. மணிபூரகம் திருவண்ணாமலை
ஸ்ரீஅபீதகுசாம்பாள் ஸமேத அருணாசலேச்வரம்.

4.அநாஹதம் சிதம்பரம்
ஸ்ரீ உமையம்பா ஸமேத த்ரிமூலநாதம்

5. விசுத்தி சிதம்பரம்
ஸ்ரீசிவகாமியம்பா ஸமேத ஆநந்த நடராஜம்

6.ஆக்ஞை காசி
ஸ்ரீவிசாலாக்ஷியம்பா ஸமேத விஸ்வநாதம்

ஆதாரச்கரங்கள் ஆறு இதன் உச்சியானது ப்ரும்ஹரந்த்ரம்

7.ப்ரும்ஹரந்தம் மதுரை
ஸ்ரீமீனாக்ஷியம்பா ஸமேத ஸோமஸுந்தரேச்வரம்

நமது உடலில் குண்டலினி தத்வம் என்பது அடிமுதுகின் கீழ் பாகத்தில் பாம்புபோல் சுருண்டு கிடக்கும் . ப்ராணாயாம யோகத்தால் அதை எழுப்பி மேற் ச்சொன்ன ஆறு ஆதாரங்களையும் கடந்து ப்ரும்ஹரந்த்ரம் எனப்படும்  உச்சந்தலையிலிருக்கும்  ஸஹரஸ்ர இதழ் தாமரைக்குள்ளிருக்கும் சிவத்தோடு இணைக்கவேண்டும்

இந்த ஆறு ஆதாரங்களை ஒன்றன்பின் ஒன்றாக கடக்கும் போது குண்டலியின் நடை மாறி நர்த்தனமாகிறது.ஆறு விதமான நர்த்தனங்களை 7 க்ஷேத்ரங்களில் ஸப்தவிடங்கக்ஷேத்ரச்களில் ஈஸ்வரன் நடத்துகிறார்.

ஸப்த விடங்கம்

1. மூலாதாரம்     திருவாரூர்
அஜபா தாண்டவம்
ஸ்ரீகமலாம்பிகா ஸமேத த்யாகராஜம்
வீதி விடங்கம்

2.ஸ்வாதிஷ்டாணம்
திருக்காராயில்
குக்குடதாண்டவம்
ஸ்ரீ கைலாஸ நாயகியம்பா ஸமேத ஸஹஸ்ராக்ஷநாதம்
ஆதிவிடங்கம்

3.மணிபூரகம் திருநாகை
வீசீ தாண்டவம்
ஸ்ரீநீலாயதாக்ஷியம்பா ஸமேத காயாரோகணேச்வரம்
ஸுந்தரவிடங்கம்

4.அநாஹதம் திருநள்ளாறு
உன்மத்த தாண்டவம்
ஸ்ரீப்ராணேச்வரியம்பா ஸமேத தர்ப்பாரண்யேச்வரம்
நக விடங்கம்

5.விசுத்தி திருக்குவளை
ப்ருங்க தாண்டவம்
ஸ்ரீமதுகரவேண்யம்பா ஸமேத ப்ரும்ஹபுரீச்வரம்
அவனிவிடங்கம்

6.ஆக்ஞா திருவாய்மூர்
கமல தாண்டவம்
ஸ்ரீக்ஷீரவாஸிண்யம்பா ஸமேத முகமொழிசம்
நீலவிடங்கம்

7.ப்ரும்ஹரந்த்ரம் திருமறைக்காடு/வேதாரண்யம்
ஹம்ஸதாண்டவம்
ஸ்ரீ வீணாவாத்ய விதூஷ்ண்யம்பா ஸமேத வேதாரண்யேச்வரம்.
புவன விடங்கம்
மேற்கூறப்பட்ட க்ஷேத்ரங்கள் நம் உடலில் மூலாதாராதி 6 ஆதாரங்களில் குண்டலினி பயணம் செய்த்து எல்லாச்சக்ரங்களை பேதித்து ப்ரும்ஹரந்தரம் வரை செல்லும் போது ஓர்இடத்திலிருந்து மற்ற ஆதாரத்தை நோக்கி பயணிக்கும் போது 6விதமான நர்த்தனங்களும் ப்ரும்ஹரந்த்ரம் வந்ததும் ஹம்ஸபக்ஷிபோல் நர்த்தனமும் நிகழ்கிறது.
இதை உணர்த்தும் விதமாய்த்தான் ஸப்தவிடங்க க்ஷேத்ரத்தில் பரமேஸ்வரன் அவ்வகை நர்த்தனங்களை ஆடுகிறான்.

இந்த ஸப்த ஸ்தலங்கள் நம் உடலோடு மிகமிக நெருக்கமானவை.

சிவயோக சாதனைப்படி நம் உடலில் குண்டலினி யோகமார்க்கத்தில்  ப்ரேவசிக்கும் போது முதலில் ஏகமுகமாக த்யானம் கூட வேண்டும். அதற்காதரமான மந்தரங்கள் சித்திக்க வேண்டும். முதல் க்ஷேத்ரமான திருவாரூர் ஸ்ரீகமலாம்பிகை மந்த்ரபீடத்தில் கோமுகாசனத்திலமர்ந்திருப்பாள் ஸ்ரீகமலாம்பா ஸமேத ஸ்ரீத்யாகராஜரை த்யானித்தால் மனம் ஓர்முகப்பட்டு, குண்டலினியானது மூலாதாரத்திலிருந்து அஜபையாக கிளம்பும்

1.மூலாதாரம் toஸ்வாதிஷ்டாணம்  திருவாரூர் அஜபா நடனம். பாம்பு ஊர்வதுபோல்.அங்கு பரமேஸ்வரனின் தாண்டவம் அஜபா தாண்டவம். புரிகிறதல்லவா !நமக்குள் நடப்பதை எம்பெருமான்  அந்த நடையை ஏற்று அருளுகிறார்.
அடுத்து,குண்டலியானது அடுத்த பயணமான ஸ்வாதிஷ்டாணம் நோக்கிச்செல்லவேண்டும்

2.ஸ்வாதிஷ்டாணம் toமணிபூரகம். திருக்காராயில் குக்குட தாண்டவம். நம் உடலில் குண்டலினி மூலாதரத்திலிருந்து கிளம்பியபின் சுருண்ட வடிவத்திலிருந்து பாம்புபோல் ஊர்ந்து அங்கே வலம் வந்து பின் அடுத்த நிலை நோக்கி பயணிக்கும்போது நடைமாற்றுகிறது எப்படி! குக்குடம் கோழிபோல்! கோழிபோல் தத்தி தத்தி நடக்கிறது.இப்போது ஊர்தலைவிட நடை சற்று அதிகமாகி கோழிபோல் போகிறது அடுத்த க்ஷேத்ரமான திருக்காராயில் ஈஸ்வரன் குக்குட நடனமாடுகிறார்

3.மணிப்பூரகம் to அநாஹதம். திருநாகை வீசி தரங்க தாண்டவம் கடலலைபோல் முதலில் வேகமாக போவதும் திரும்புகையில் நிதானமாகவும் அஃதாவது போக்குவரத்தில் முன்னேறுதல் வேகமடைகிறது! ஆதலால் நாகை காயாரோகணர் வீசி தாண்டவமாடுகிறார்.இங்கே பாருங்கள் ஆச்சர்யம்! நாகை என்பது  கடற்கரை !ஆண்டவனின்
நடனம் கடலலை போன்று!நம் உடலில் இந்த நிலையை அடையும் போது, வலக்காதில் அலையோசை கேட்குமென்பர்.அண்டத்திற்கும் பிண்டத்திற்குமான தொடர்பு அப்பட்டமாக தெரிகிறதல்லவா!

4.அநாஹதம் toவிசுத்தி
திருநள்ளாறு உன்மத்த தாண்டவம்
இங்கே திருநள்ளாற்று பிரான் உன்மத்தம் பீடீத்தவர் போலாடுகிறார்.அதில் ஓர் ஆக்ரோஷம் இருக்கும். கத்தி வீசுதல் போல் வீச்சமிருக்கும் .இதே உணர்வு நமக்குமிருக்கும் அதிகமான வேகம் கோபமிருக்கும் பைத்தியநிலை சிலருக்கு ஏற்படும் பாதி நபர்கள் இங்கே வீழ்ந்துவிடுவர்!அப்படி வீழாமலிருக்க க்ஷேத்ரநாயகியான ஸ்ரீப்ராணேச்வரியை த்யானிக்கவேண்டும்.அப்படி த்யானிக்கும்போது உன்மத்தம் சற்றே மட்டுப்பட்டு சாந்தமாகி மேல்நோக்கி பயணப்படும். இப்போதுதான் அதிக அளவில் ப்ராணாயாமம் செய்து மௌனம் காத்து, மனக்கட்டு, உணவுகட்டு இவைகளை மேற்கொண்டு தாமஸகாரியங்களை குறிப்பாக கர்வம் தவிர்க்கவேண்டும்.

5. விசுத்திtoஆக்ஞை
திருக்குவளை ப்ருங்க நடனம்!
இங்கே ஆடல்வல்லனான எம்பெருமான் ப்ருங்க நடனமாடுகிறார்.ப்ருங்கம் என்றால் வண்டு. வண்டிற்கு ஷட்பதம் என்ற பெயருண்டல்லவா! நம் யோக சாதனையில் அதி முக்யமான இடம் ஆக்கினை திறத்தல்! லேசில் திறக்காது. நாம் வண்டின் கால்களான காமாதி ஷட்ரிபுக்களை அடக்கிவிட்டால்,தேனெடுக்கலாம். பலவித அதிசயங்கள் நிகழுமிடம். க்ஷேத்தரத்தின் பெயரிலேயே என்ன பொருத்தம் பாரீர்.

திருக்குவளை. குவளைமலர் மொட்டாக இருக்கயில் மிக சிறியதாவும் மலர்ந்தவுடன் இதழ்கள் பெரியதாகவுமிருக்கும். அம்மலரில் தேனதிகம். ஸ்ரீஆண்டாளும் தன் திருப்பாவையில் சூக்ஷ்மமாக சொல்கிறாள் பாரீர்.பூங்குவளை போதில் பொறி வண்டு கண்படுப்ப! அதிகாலை மலரும் குவளைமலர்.அதேபோல் அதிகாலை த்யானம்தான் நமக்கு சித்தி தரும். குவளைநாதரை த்யானித்தால் நம் குவளை மலரும். ஆக்ஞை திறக்கும்போது அநேக வித தடங்கல் ஏற்படும்.முன் சொன்னபடி ஆறுவிதமான பகைவரை ஜெயிக்க வேண்டும்.இது திறக்க ஷண்முகத்யானம் அதிகம் செய்தல் நலமாம்.வண்டான நம் மனம் ஆக்ஞை என்ற தேனில் மூழ்கி நிரந்தர எதிரிகளான காமக்ரோதாதிகளை உதிர்த்து, தேனிலேயே சுற்றி சுற்றி திளைத்தல் வேண்டியே ஈஸ்வரன் அங்கே வண்டுபோல் சுற்றி சுற்றி நடமிடுகிறார். நினைக்கையில் சிலிர்க்கிறதல்லவா!

இவையெல்லாம் நமக்குள் நடந்தால்! சிவம் யார்? நாம்தான்!
ஆறுவிதமான அசுரர்களை இங்கே அழிப்பதால் இடியோசை கேட்கும் நமக்குள்.மின்னல் கீற்று தெரியும்.இங்கே முக்யமாக நம் ஸத்குரு நாதன் துணை அதி அவசியமாகிறது. அவரின் சாதனையால் நமக்கு இவைகளை தாங்கிக்கொள்ள தகுதி ஏற்படுகிறது. இதைத்தான் சிவனார் நெற்றிக்கண்ணாக காட்டுகிறார். நாம் யோகத்தால் நம் நெற்றிக்கண் திறத்தலை காண இயலும்.கண்டுவிட்டால் சித்தித்வம் வந்துவிடும்

நம் குருநாதன் நம் கைபிடித்து அங்கே பிளந்துக்கொண்டு மேல் நோக்கி நகர்த்தி பரம சிவத்தோடு இணைப்பர், என்பது ஐதீகம். சாதனை செய்தால் கண்டிப்பாக உணரமுடியும்.

6.ஆக்ஞை to ப்ரும்ஹரந்த்ரம்.
திருவாய்மூர்
கமல நடனம்.
ஆக்ஞை திறத்தலையும் அதற்குமுன் நமக்குள் நிகழ்தலையும் காட்டுதலே அம்ருத மதனம் எனப்படும்.தேவாசுரர்கள் இணைந்து அமிர்தம் கடைகையில் முதலில் வந்தது ஆலகாலவிஷம் தானே!அந்த ஆலகால விஷத்தை எம்பெருமான் ஏற்க!அது தாக்கமலிருக்கும் பொருட்டு,தேவியான கண்டத்திலேயே நிறுத்தினாள்.காம்யார்த்த பலன்களாக அஷ்டசித்திகளின் வடிவம் தான் காமதேனு,  கற்பகவிருக்ஷம்,  உச்சைச்வரம்  ,ஐராவதம்,  சிந்தாமணி, சந்த்ரன், போன்றவைகள் . உண்மையான செல்வமான மஹாலக்ஷ்மி வருகிறாள்.எப்படி!கமலமாக!    கமலத்திலிருந்து கமலமாக, கையில் கமலமேந்தி , கமலம் போல் அசைந்து அசைந்து வருகிறாள்.இதையேத்தான் திருவாய்மூரில் கமலநடனம் அழகாக நடைபெறுகிறது.அட்டமாசித்தி வேண்டுமென அதிலிறங்கி விட்டால் சிவத்தை காண இயலாது!அதையும் அடக்கி அதையே சாதனமாக்கிவிட்டால் சிவத்தை நெருங்கிவிடலாம்!

கமலமாக அதாவது தாமரைபோல் அசைந்து நளிணமாக,தண்ணீர்க்குள்ளிருந்தாலும் கொஞ்சமும் தன்னிடம் தண்ணியின் இணைப்பில்லாமல்,மிளிர்கிறது நறுமணத்துடன்.

நாமும் ஸம்ஸாரத்திலேயே இருந்தாலும் அதில் ஒட்டாமலிருக்கவேண்டுமென புரிகிறதல்லவா!

அடுத்து
7.ஆக்ஞைtoப்ரும்ஹரந்த்ரம்
திருமறைக்காடு /வேதாரண்யம்.
ஹம்ஸநடனம்

ஆக்ஞா சக்ரத்தை ஸ்ரீஅம்பாளின் அனுக்ரஹத்தால் பேதித்து  அதன்மூலம் ஸகலஞானத்தையும் பெற்றபின் என்ன செய்யவேண்டும்! ஹம்ஸம் போல் பாலையும் நீரையும் பிரிப்பது போல் நாம் யார் எங்கிருந்து வந்தோம்?
எங்குபோகவேண்டுமென்பது,தெள்ளிய பால் போல புரியும்

பரமசிவம் யார்!

எப்படி பரமசிவமாகலாம்?
சிவயோக சாதனைபடி பஞ்சாக்ஷரம் ஓதி, ஆதியும் அந்தமுமில்லாத அருட்பெருஞ்ஜோதியை த்யாணித்து,ப்ராணாயமத்தால் அருட்சக்தியான குண்டலினியை எழுப்பி, மேற்சொன்ன சாதனைகளை செய்து சித்திபெற்றால் பரமஹம்ஸமெனும் பரமசிவம் நாம்தாம் என உணரமுடியும்!

அண்டமும் பிண்டமும் இணைந்தே இருக்கின்றன!பெருவெளியில் நடப்பதெல்லாம் நம் தேகத்திலும் நடக்கிறது!இதை உணர்ந்தவர்கள் சித்தர்களாகின்றனர்இதை  உணர மறுப்பவர்கள் மனிதமாகவே ( மனிதனாகவே)  இருக்கின்றனர்

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment