Sunday 27 December 2015

தேகம், காயகற்பம் பற்றி சித்தர்கள்

தேகம், காயகற்பம்  பற்றி சித்தர்கள்

நவ்விரண்டு காலதாய் நவின்ற மவ்வயிறதாய் சிவ்விரண்டு தோள தாய்சிறந்த வவ்வுவாய தாய்
யவ்விரண்டு கண்ணதாயெழுந்து நின்ற நீர்மையிற்
செவ்வையொத்து நின்றதே
சிவயமஞ்செழுத்துமே
தேகம் பஞ்சாட்சர சொரூபம். தூலசிருட்டி கூறப்பட்டுள்ளது.

ந- கால்கள்,
ம-வயிறு,
சி-தோள்கள்,
வ-வாய்,
ய-கண்கள்.

நவ்வெழுத்தே பிரமனுகு மதில்...
நாரணன் மவ்வெழுத்தானுனே...
சிவ்வெழுத்தே தெய்வவுருத்திரனுஞ்...
செப்புவன் கேளடி ஞானப்பெண்ணே
செப்பவே வவ்வுமகேசுரனும்வட்டஞ்...
சேர்ந்த யகாரஞ் சதாசிவனும்...
தப்பிலாத வைந்தெழுத்தாலேசராசரந்
தங்கியிருந்தது ஞானப்பெண்ணே
ந பிரமன் சிருட்டி
ம விஷ்ணு திதி
சி உருத்திரன் சங்காரம்
வ மகேசுரன் மறைப்பு
ய சதாசிவன் அருளல்
'நமசிவய' என்னும் பஞ்சாட்சரமே
சீவேசுரர்களுடைய தோற்றத்திற்குக்
காரணமானது. சூக்கும சிருட்டிமுறை
கூறப்பட்டிருக்கின்றது.

சிர வலமுனையாம் ஓமின் முதற் சுழியாம் சரணம் சிர இடமுனையாம் ஓமின் மறு சுழியாம் சரணம்
நெற்றி வகிடாம் ஓமின் கீழ் சுழியாம் சரணம் உச்சிக்குழியாம் ஓமின் மையப் பிந்தாம் சரணம் சிரமேலிரு முனையும் உச்சிக்குழியும் நெற்றி வகிடும்
இணைந்து அமைந்த ஓம் எனும் எழுத்தே சரணம்

1. தலையின் வலது முனை- முதற்சுழி
2. தலையின் இடது முனை- மறு சுழி
3. நெற்றி வகிடு- கீழ் சுழி .

இவ்வாறு ஓம் என்ற எழத்தே
(தலையெழுத்தாக) தலையில் இருக்கின்றது என்பதை இவ்வரிகள் அருளுகின்றன.

உச்சிக் குழியாம் சகஸ்ராரத் தலமாம் சரணம் உச்சிக் குழியாம் மகாமேரு கயிலாய நாதனாம் சரணம்
கண்டமாம் மத்தெனும் மகாமேரு மத்தியாம் சரணம் சுழுமுனை நாகமாம் கடையும் கயிறாம் வாசுகியே சரணம்
விசுத்தியான கண்டத்தில் கீழுடல் பாற்கடலாம் சரணம் கண்டமாகிய மகாமேரு மத்தியில் சுற்றிக்
கொண்டு விசுத்திக்கு கீழுடலான பாற்கடல் தயிரை கடைந்த போது
இம்மனோ வாக்கு காயத்தால் செய்த பாவங்கள் சுழுமுனை நாகத்தால் ஆலகாலவிஷமாக கக்கப்பட
இப்பக்தனின் பாப விஷத்தையும் உண்டு மேலும் இதுவை இல்லை, இந்த என்னை பரிசுத்தமாக்கிய சிவனே சரணம் தொடர் மீண்டும் கடைய வந்த அமிர்தமாகிய மோரெனும் சுவர பானமாகிய தித்திக்கும் உமிழ்நீரே சரணம் நெய்யெனும் சோமபானமாகிய இனிக்கும் நுங்கு(மூளை) சளியே சரணம் இரண்டும் உண்டு வளர்ந்த வளர்த்த தெளிவான ஞானத்தை
நம்புவர், நம்பாதவர் என நாடுவர் யாவர்க்கும் இந்த அனந்த சிவபோதம் ஆகியவினா அக உரை
அருள உதவிய இரவிச்சந்திரனே சரணம்.

விசுத்தி சேர் சிரமேலிரு முனையும்
உச்சிக்குழி இணையாது கூடிய விசுத்தியுடன் முடிந்த முதுகுத் தண்டாகிய முருக சேனாபதி
வீரபாகு நட்சத்திர காவல் படைவீரர்களே சரணம் இப்படையே பிரம தண்டமாம் சரணம் சரணம்
விசுத்தி சேர் சிரமெலிரு முனையும்
உச்சிக்குழி இணைந்து கூடிய
முதுகுத்தண்டாகிய சிவ சக்தி சூலாதயுதமே சரணம் சரணம்
இரு செவி சேர் உச்சிக்குழியுடன் விசுத்தி சேர் இரு செவிமுனையும் கூடிய முதுகுத் தண்டாகிய முருக வேலே சரணம் சரணம் இச்சிவ சக்தி சூலாயுதம் மற்றும் முருகவேல்
மற்றும் பிரமதண்டமானது நம்
உடலினுள்ளேயே இருக்கின்றது.

இதைத்தான் எடுக்க எடுக்க குறையாத அம்புகளான பாசுபதாஸ்திரம் என்று கூறுகின்றனர். இவை நாம் உடலோடு உள்ள காலம் மட்டும் குறையாது. நம் கண்முன் தெரியும் அச்சோதி
சொரூபம் வழி இவ்வம்புகளை காரண காரியம் முன்னிட்டு பயன்படுத்தலாம். இதை அர்ச்சுணன் சிவ பெருமானிடம் வரமாக பெற்றான்.

காயகற்பம்
------------
காயம் என்பது உடல். கற்பம் என்பது பிரமனின் ஒரு பகற்பொழுது ஆகும். பிரமனின் ஒரு பகற்பொழுது கிட்டத்தட்ட 432 கோடி ஆண்டுகள் ஆகும். ஆக நம் உடலானது 432
கோடி ஆண்டுகளாக சிதையாது அழியாது எந்நிலையிலிருந்தாலும் எம்மாறுதலடைந்தாலும் அப்படியே இருக்க வைக்க எடுக்கும்
முயற்சியும் முயற்சியே பயிற்சியும் ஆகும்.

ஆனாலும் வெளிப்பொருள் கொண்டு காய கற்பமாக்கினால் கூட மேற்கூறிய
ஆண்டுகள்தான் உடல் கெடாது இருக்கும். ஆனால் உள்பொருள் கொண்டு உள்பொருள் உண்டு உள்பொருள் கண்டு இருப்பதற்கு
பரப்பிரகாயம் என்று பெயர். அதாவது ஒரு முடிவான முதலான நிலையை நம்முள் ஒன்றி அடைவதற்கு உதவுவது பரப்பிரகாயம் ஆகும்.

பத்தாம் வாசல்
--------------
பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் இந்த பத்தாம் வாசலான உச்சிக்குழியானது திறந்தே
இருக்கும். இந்த உச்சிக்குழியானது
மூடுவதற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்களாகும். அதாவது குழந்தைகளுக்கு எப்பொழுது ஆணவமாகிய நான், எனது என்ற தன்னிச்சையாக பிரித்துப்
பார்த்து பாகுபாடுகளை உணரும்போது, அந்த உச்சிக்குழியினை  சுற்றியுள்ள
மண்டையோட்டின் மேல்பகுதியானது
வளர்ந்து திடமாகி மூடிவிடும். அதுவரை
அக்குழந்தைகள் எந்நேரமும் விதவிதமான பீஜ நாதஸ்வரங்களை கேட்டு ரசித்துக் கொண்டே
இருக்கும்.

சில குறிப்பிட்ட கிரகங்கள் மற்றும்
நட்சத்திரங்கள் ஒளியுடன் கூடிய பீஜ நாத ஸ்வரங்களான அவ்வும், உம், ஊம்,
இம்,உஓம்.,.,, போன்றவை உச்சிக்குழி வழியாக இறங்கி குழந்தையின் ஸ்பரிசம் மற்றும் உணர்வுகளை தூண்டி உடல் பாகங்களை அசைய வைத்து மேற்கூறிய பீஜ நாதங்களில்
ஏதேனும் ஒன்றாக அல்லது ஒவ்வொன்றாக நேரடியாக வாய்வழியாக அந்நாதமானது
வெளியேறிவிடும். இதைத்தான் நாம் குழந்தை அழுகின்றது என்கின்றோம்.

இந்த உச்சிக்குழியானது தலையுச்சியின்
மையத்தில் ஒரு விரற்கிடை அளவு அகலத்தில் கீழ்நோக்கி இறங்கி நெற்றிவகிடு வரை நீளமாக இருக்கும். இந்த உச்சிக்குழியுடன்
இணைந்த பள்ளம் நெற்றிவகிடோடு
முடிந்திருந்தாலும் அதன் முடிவின் இரு
முனைகளிலிருந்து ஆரம்பித்து அதே ஒரு விரற்கிடை அளவு அகலத்தில் கீழ் இறங்கி புருவமத்திக்கு சற்று மேல்வரை பள்ள வரிகள் மட்டும் நாமத்தடம் போல் அமைந்திருக்கும்.

குழந்தைகளை பொறுத்தவரையில் அவ்வுச்சிக் குழியுடன் இணைந்த நீண்ட பள்ளத்தினை தொட்டுப்பார்த்தால் மெதுக் என்று பஞ்சு போல் அமுங்கும்.

இந்த உச்சிக்குழியானது இயற்கையாகவே ஒரு சிலருக்கு மூடாமலே இருந்து விடுவதுண்டு.
அப்படி மூடாமல் இருப்பவர்களுக்கு,
மனிதர்களுக்கு அப்பாற்பட்ட காட்சிகளும் சப்தங்களும் மிகப்பரிட்சயமாகி விடுகின்றன.

அவர்களிலும் ஒரு சிலர் சுந்தரர்,
இராமகிருஸ்ணர் போல் சிறுவயதிலிருந்தே ஆன்மீக நாட்டம் கண்டு விடுகின்றனர்,
மற்றவர்கள் ஆவிகளுடன் பேசும் மீடியமாக இருக்கின்றார்கள். இந்த பத்தாம் வாசல் திறக்க
உண்மையாக சத்தியத்தை கடைபிடித்து
வாழ்ந்து வந்தால் குருவின் தயவினாலோ அல்லது தெய்வத்தின் அருளினாலோ மீண்டும்
திறக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு தியானம் ஒரு சிறந்த வழி.

அஞ்சுதலை போக்க அஞ்சாவது தலை கிள்ளி அஞ்சுதலை போக்கி ஆறுதலை அளித்த ஆறுதலை கொண்டவன் தந்தையே சரணம் அஞ்சுதலை- பயத்தை அஞ்சாவது தலை- ஆணவம்
ஆறுதலை- அருளாசி ஐந்தாம் தலையை கொய்த பின்தான் உச்சிக்குழி திறந்தது ஆம்.

சா-வே-போ
--------
நம் உடலில் உந்தி, மார்பு மற்றும் நெற்றிக்கண் அல்லது புருவமத்தி என்ற மூன்று முக்கிய மூலங்கள் உள்ளன. ஒருவன் உடலின் விந்தை
வெளியிடாமலும், சுத்த உஷ்ணத்தை
அதிகப்படுத்தியும் வர வர உடலில்
அருவமதாய் உருவாகிய விந்தானது உடலின் வெம்மையை அதிகப்படுத்தி மூலத்தை முழிக்க வைத்து அவ்விந்து நீரானது நெருப்பாவியாகி உடல் முழுவதும் கலக்கின்றது. இவ்வாறு நம் விந்தானது எப்பொழுது சூடான ஆவியாக (ஆவியான வன்னி) மாறுகின்றதோ அதுவே போகாப்புனலாகும். அதாவது
அந்நெருப்பாவியே போகாப்புனலாகும்.

இதுவே சுழுமுனையில் கீழ்மேலாக
முதுகுத்தண்டு வடத்தின் மத்தியில் ஏறி
இறங்கும். இதுவே கிரந்திகள் என்றும்
அப்பாதையை கிரந்திப் பாதை அல்லது அட்சரப் பாதை என்றும் அழைக்கப்படு கின்றது. அனைத்தும் நாதஒலிகளாக வேதங்களாக ஒவ்வொரு மகானின் உள்ளே வந்து தங்குகின்றது. இதுவே இறக்கப்பட்ட வேதம் ஆகும்.

அடுத்து மூன்று மூலங்களில் மார்பாகிய
நெஞ்சு மத்தியான அனாகதக் கருவறையில் தான்  நாம் விட்ட இடமான ஆகாயவெளியானது இருக்கின்றது. இதை ஜீவாத்மா
என்றும் சித்தர்களால் வேகாத்தலை என்றும் அழைக்கப்படுகின்றது. சிதம்பரம் தில்லை கோவிலின் இடது பக்க ரகசியமும் இதுதானாகும். அடுத்தது நாம் தொட்ட இடமான உந்தியெனும் தொப்புளில்
குடியிருக்கும் வாசியாகிய பிராணனாகிய தீபமாகிய யோகமாகிய ஞானம் தொட்ட இடமாகிய வாசிவாய்வானது சாகாக்கால்
என்றழைக்கப்படுகின்றது. மூச்சானது நம் சரீரத்தில் உந்தியில்தான் குடியிருக்கின்றது.

வாசியின் இருப்பிடம் தொப்புள் ஆகும்(ஜனன மரண ரகசியம்). தபம், தியானம் செய்யும் தபசிகளுக்கு ஆதாரம் இவ்வாசியாகும்.
இவ்வாசியே பிராணனாகி பிராணனே தீபமாகி சோதியாகும். இவ்வாசியே மூல அனலாகும்.

சாகாக்கால், வேகாத்தலை, போகப்புனல் மற்றும் மணியாடும் கோணம் ஆகியன பற்றி
தக்க குருவின் அருகிலிருந்தால் அனுபவத்தில் வரும். மணியாடும் கோணம் என்பது போகாப்புனலாகிய நெருப்பாவி புருவமத்தியில் தங்கி பார்வைக்கு ஒளிப்புள்ளியாய் தெரியும். அதன் சாய்வு மற்றும் சுழற்சியையே மணியாடும் கோணம் என்பர். அச்சோதியையே பரமாத்மா, நந்தி,
அருட்பெருந்சோதி, வாலை என்று
பலபெயர்களில் அழைக்கப்படுகின்றது.

மேலும் கயிலாயம் என்னும் உச்சி சுழுமுனை வீட்டில் சதா ஓம் காரித்துக்கொண்டு தலையெழுத்தாக
இருப்பது நம் உணர்வு. இவ்வுணர்வானது அசையாதிருந்தால் சிவமாம், அசைந்தால் சீவனாம். இவற்றில் மூச்சாகவும் பேச்சாகவும்
சப்திப்பது சக்தியாகும். இவற்றில் சாகாக்கால் சிவமாம், வேகாத்தலை சீவனாம், போகாப்புனல் சக்தியாம். நாதமென்பது ஒருவகையில் நெருப்பாகி மனமாகின்றது.

விந்தென்பது வாசியாகும். தீயானது
வாசிமீதேறி விளையாடும். ஆகாய அம்சத்தில் உள்ள 10960000 விண்மீன்களும், அவற்றில்
ஒவ்வொரு விண்மீனிலும் உள்ள
ஒளிஒலிக்கதிர்கள் இணைந்து ஒரு உயிரனுவாக மாறி இவ்வாறு 10960000 உயிரனுக்களாக சேர்ந்து ஒரு துளி வித்தானது உருவாகின்றது.

ஒருவன் வெளிமுக நோக்கில்லாது
எப்பொழுதும் சதா உள்முக
நோக்குடையவனாக இருக்கின்றனோ
அவனுக்கு தசவித நாதங்களும்,
விண்ணிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு நாதஓசையும் விளங்கும். இதுவே நாதமாகும்.நாதமானது ஆகாயத்திலிருந்து உற்பத்தியாகின்றது. இந்த சத்தம் பிறந்து யார் காதில் ஒலிக்கின்றதோ அவனுக்குள் சகல
கலையும் உதிக்கும்.

அதே சமயம் விந்தானது உடலின்
வெம்மையை கூட்டி அதன் பலனாக ஆவியான வன்னியானது மேலேரும். அப்போது விண்ணிலிருந்து தலையில் பிரமரந்திரம் வழியாக நாதமானது (சுரோணிதம்) இறங்கும்.
இவ்வாறு விந்தானது நாதமான
சுரோணிதத்தில் கலப்பதையே உறவு
என்கின்றார்கள் சித்தர்கள்.

இவ்வுறவில் பிறக்கும் குழந்தை என்பது கண்பார்வைக்கு மத்தயில் தெரியும் சோதியாகும். இதையே அருணகிரிநாதர்  "நாதவிந்து கலாதி நமோநம"என பாடியுள்ளார்.

இவ்வாறு விந்தையேற்றி
தன்னுள் உள்ள சுரோணித நாதத்தில் கலந்து உறவு செய்து ஒளியாகிய குழந்தையை தன்முன் எப்போதும் அந்தரத்தில் வைப்பவன்
மட்டுமே தன் பெயருக்குமுன் ஸ்ரீ அல்லது திரு என்ற அட்சரத்தை போட்டுக் கொள்ள தகுதியுடையவன் ஆவான். இவனே திருமணம்
அல்லது ஸ்ரீ என்ற ஸ்திரியை புணர்ந்தவன் ஆவான்.

நாதம்=பாதம்=சுரோணிதம்=முதல் ஒலி.
விந்து=சுக்கிலம்= ஒலி முதல். பதம்=முதல்
ஒளி=வாலை.

பிரணவ நாதமான மோ, கூ, கீ, அங், மிங், வாசிவாகூஹா, மூ, மௌ, ஓம் போன்ற அட்சரங்களில் ஒன்றை மனதிலும் வெளியிலும் உருவேற்றி அதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி சதா ஆகாய அம்சமான நாதத்தை கேட்டு வந்தால் ஒருநாள் விண்ணில் ஒலிக்கும் நாதத்தை கொடுப்பவனாக
யாவருக்கும் வழங்குபவனாக மாறலாம்.

அதன்பின்தான் சூட்சம காரண சரீர சித்திகள் கிடைத்து அந்தி பகலில்லா ஒளியுலகை அடையலாம்.

No comments:

Post a Comment