அந்தரங்க மர்மம் - கோரக்கர்
----------------------------
பெண்ணுடன் உறவு கொள்ளும் போது விந்து விணாகாமல் இருக்கவும், உயிர்சத்தியை
தன்னுள் தக்க வைத்துக்கொள்ளவும்
சிறந்ததொரு முறையை அகத்தியர்
கூறியுள்ளார்.
இதே முறையை
மறைப்பில்லாமல் கோரக்கரும் தனது
சந்திரரேகை என்னும் நூலில் கூறியிருப்பது
ஆய்வுக்குரியதாகும்.
இன்று அறிவியல்
வளர்ச்சியின் காரணமாய் புணர்ச்சிக்கென்று
எத்தனையே மருந்துகள் வந்திருந்தாலும்
அவைகள் உறவு நேரத்தை அதிகரிக்குமே
தவிர விந்துவை நிறுத்தாது மேலும்
அவைகளால் உடலுக்கு பல கேடுகள்
உண்டாகும். எந்தவொரு பக்கவிளைவும்
இல்லாத வகையில் விந்துவை உள்நிறுத்தி
உயிர்சக்தியை தக்க வைத்துக்கொள்ள நமது
சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே சிறந்த முறைகளை
அருளியுள்ளனர்.
அதைப்பற்றிய அதை பற்றிய
ஓர் விளக்கம்.
கலவியல் தம்பனம்- அகத்தியர்
"காமப்பா கலவியிலே தம்பனத்தைக் கேளு
கட்டாக நிஷ்டைமுறை கருத்தில் வையே
வையப்பா வாசிதனை மூலத்தூட்டி
மகத்தான மூலமதால் ரேசகத்தை பற்றி
செய்யப்பா பூரகத்தில் கும்பகத்தில் நின்று
செபித்திடுவாய் வசியசிவ வென்று மாறி
பய்யப்பா பாவையர்மேல் ஆசைகொண்டால்
பதறாது விந்துவது செயமாய் நிற்கும்
மெய்யப்பா இம்மொழியை உலகத்தோர்க்கு
விள்ளாதே குற்றம்வரும் செயமாய் நில்லே".
- அகத்தியர்
கலைஞானம் 1200
பொருள்:
கலவியல் தம்பனத்தை சொல்கிறேன் கேள்,
மனதை ஓர் நிலைபடுத்தி புருவமையத்தில்
குவித்து முச்சை நன்கு இழுத்து
அடக்கிக்கொண்டு வசியசிவ என்பதை மாறி
செபிக்கவும் அதாவது "ஓம் சிவயவசி" என்று
100-உரு மனதினுள் செபித்து விட்டு பின்பு
பெண்களை புணர்ந்தால் விந்து விழாது
தம்பித்துக்கொள்ளும்.
இது உண்மை, இதை உலக மக்களுக்கு
சொல்லாதே ஏனென்றால் இதனை தவறான்
வழிக்கு பயன்படுத்தி விடுவார்கள் மேலும்
பல குற்றங்கள் இதனால் நடக்கும் என்கிறார்
அகத்தியர்.
அந்தரங்க மர்மம் - கோரக்கர்
"பித்தர்களே ஓதிடுவேன் பெருமை கேளீர்
பேய்போல திரியாதீர் பிதற்றல் வேண்டாம்
உத்தமியாள் தன்னுடனே புணரும் போது
உன்னுடைய இந்திரியம் விட்டேங்காதே
பத்தினியாள் இச்சைகாமம் பருகத் தாக்கி
மதனமிட்டு கொண்டிடுவாய் பாழ்போகாதே.
போகத்தில் இந்திரியம் பொங்கா துய்யா
புத்தியுடன் புகன்றிடுவேன் அறிந்து
கொள்வீர்
பாகமுடன் பரிஎன்ற வாசி பூட்டிப்
பக்குவமாய் ஓம்சிவய வசிஎன்றே
ஏகமனம் பேசாது நூறு செப்பி
எகராமல் கும்பித்துப் புணர்வாயானால்
தாகமுறும் மாமயில் ஆசை நீங்கும்
தங்கிவிடும் உன்விந்திந்த விதமுமாமே.
இந்தவித முலகோருக் கியல்பைக் காட்ட
எடுத்தணைத்தார் மூவர்களும்
பெண்ணைத்தானே
விந்து நிலையா மூட மாந்தர்
விபரிதமாய் வீண்பேச்சுப் பேசிக்கெட்டார்
அந்தரங்க மர்மமிதை யறியாமற்றான்
ஆருலகில் அரிவையரை ஆகாதென்றார்".
-கோரக்கர் சந்திரரேகை
பொருள்:
பித்தர்களே உங்களுக்கு ஒரு பெருமை மிகுந்த
முறையை சொல்கிறேன் கேளுங்கள், காம
எண்ணத்தோடு கண்ட பெண்களை தேடி
திரியாதீர்கள்,பெண்களை பார்த்து காம
புலம்பல் புலம்பாதீர்கள், உங்கள்
மனைவியிடம் மட்டும் உறவு கொள்ளுங்கள்,
அப்படி உறவு கொள்ளும் போது உங்கள்
விந்து சக்தியை இழந்து விட்டு ஏங்காதீர்கள்,
மனைவியாய் இருந்தாலும் அளவுக்கு மீறி
உறவு கொண்டு வாழ்க்கையை பாழாக்கி
விடாதீர்கள்.
போகத்தின்போது விந்து வெளியேறி
வீணாகாமல் இருப்பதற்க்காக ஓரு முறையை
சொல்கிறேன், இதை புத்தியுடன்
பின்பற்றுங்கள். எப்போதும் குதிரைபோல்
ஓடிக்கொண்டிருக்கும் மூச்சை மெதுவாக
இழுத்தடக்கிக் வைத்துக்கொண்டு
"ஓம் சிவயவசி" என்ற மந்திரத்தை மன
ஓர்நிலையோடு மனதினுள்
100- செபித்து விட்டு பின்னர் பெண்களுடன்
உறவு கொண்டால் அப்பெண்ணின்
காமஆசையும்,காம ஏக்கமும் எந்த அளவு
இருந்தாலும் அது தணியும். நீ எவ்வளவு
நேரம் உறவு கொண்டாலும் உன் விந்து
வெளியேறாது உள்ளேயே தங்கி விடும்.
இந்த முறையை உலகத்திற்கு காட்டவே
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவர்களும்
பெண்ணை அணைத்தபடி காட்சி
தருகிறார்கள்.அதாவது பெண்ணுடன் உறவு
கொண்டாலும் தெய்வதன்மையை இழக்காமல்
இருப்பதை இது காட்டும்.
விந்துவை அடக்கமுடியாத மூடமனிதர்கள்
வீண் பேச்சுக்களை பேசியே
கெட்டுப்போனார்கள், இந்த அந்தரங்க
மர்மத்தை அறியாமல்தான் இவர்கள்
பெண்களை ஆகாதவர்கள்
என்கிறார்கள்.என்கிறார் கோரக்கர்.
விந்திறங்கா வசியம்-கோரக்கர்
மெல்லியரை உம்-யம் மென்றுறைத்துச் சேர
மேவிய விந்திறங்கா வசியமாமே.
-சந்திர ரேகை
பொருள்:
பெண்களை சேரும் முன் உம்-யம்
என்று 108 முறை
எண்ணியவாறு முச்சை இழுத்தடக்கி
செபித்திவிட்டு பின்பு
புணர்தால் விந்து இறங்காது.இதனால்
ஆனந்தம் அடைந்த
பெண்கள் உன்னிடம் வசியமாவார்கள் .
No comments:
Post a Comment