ஆன்மீக முன்னேற்றத்திற்கு நாம் பின்பற்ற வேண்டிய உணவு விதிகள்.
நாம் உண்ணும் உணவும் நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு அல்லது பின்னடவிற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது;
சமையல் செய்யும் போது கோபம்,வெறுப்பு,குரோதம்,மனவருத்தம் அடைந்தால் அந்த எண்ணங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும்(கணவன்,குழந்தைகள்) உறுதியாகப் பிரதிபலிக்கும்;தினமும் கவனித்துப் பார்த்தால் உண்ணும் உணவே சமைத்தவரின் எண்ண ஓட்டங்களைத் தெரிவித்துவிடும்;
ஒவ்வொரு முறை உண்ணும் போதும்(காலை,மதியம்,இரவு) அந்த உணவில்
அறுசுவையும் இருப்பது முழு ஆரோக்கியத்தைத் தரும்;
ஒவ்வொரு முறையும் உணவு உண்பதற்கு முன்பு பழங்களைச் சாப்பிட்டுப் பழகுவது நன்று;(உண்டபின்னர் பழங்கள் சாப்பிடுவது தவறு)
குக்கரில் சமைக்கும் சாதத்தைத் தவிர்ப்பது அவசியம்;சாதத்தை வடித்து,அந்த வடிநீரை அருந்துவது நமது உடலுக்கு அளவற்ற நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்;
மட்டை அரிசி,பாலீஷ் செய்யாத அரிசியை வீட்டுச் சமையலுக்கு வாங்கிப் பழகுங்கள்;பூரண ஆரோக்கியம் உறுதியாகும்;
சாதாரண பாத்திரத்தில் சமைக்கப் பழகுவது அவசியம்;திறந்த பாத்திரத்தில் சமைத்துச் சாப்பிடுவதுதான் சிறப்பு;
திறந்த நிலையில் பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளும் அந்த உணவின் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன;இந்த சக்திகள் நமது கண்களுக்குப் புலப்படாது;
மிக்ஸியில் அரைக்கப்படும் சட்னியானது விரைவில் கெட்டுப்போய்விடுகிறது;சுவையும் அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை;ஆனால், ஆட்டு உரலில் அல்லது அம்மிக்கல்லில் அரைத்த சட்னியின் சுவை அற்புதமாகவும் நமது உடல் நலத்தை தொடர்ந்து பராமரிக்கும் விதமாகவும் இருக்கும்;
மிக்ஸியில் சட்னி அரைக்கும் போது ஜாரினுள் தேங்காய்த் துண்டுகள்,பொரிகடலை,மிளகாய், வெள்ளைப்பூண்டு, உப்பு போன்றவைகளை போட்டு மூடியை இறுக மூடிவிட்டு அரைக்கிறோம்;அப்போது அந்த மூடியினுள் இருக்கும் காற்றுடன் தேங்காய்த்துண்டுகள்,பொரிகடலை சிலநொடிகளில் அரைபட்டு திப்பி திப்பியாக நுரை நுரையாக வந்துவிடுகின்றன;
ஆனால்,அம்மிக்கல்லில் அரைக்கும்போது இரண்டு ராட்சத கற்கள் இவைகளை அரைக்கின்றன;திறந்தவெளியில் அரைக்கும் போது பிரபஞ்சத்தின் அத்தனை கதிர்களும் நமது கண்ணுக்குத் தெரியாமல் இத்துடன் கலந்துவிடுகின்றன; மேலும்,இதை அரைக்கும் நமது தாயின் பரிவு,பாசம்,விட்டுக்கொடுக்கும் தன்மை போன்ற எண்ணங்களும் ஊடுருவி நமது உணவாகிறது;ஆக,நாம் எங்கிருந்து வந்தோமோ, அந்த பிரபஞ்சத்தின் சத்துக்கள் சட்னியில் கலந்துவிடுகின்றன;
அனைத்துப் பருப்புகளையும் தோல் நீக்காமல் உண்ணப் பழகவேண்டும்;
புளிக்குப் பதிலாக எலுமிச்சையை பயன்படுத்தப் பழக வேண்டும்;
மிளகாய்க்குப் பதிலாக மிளகை உபயோகிக்கப் பழக வேண்டும்;
வெள்ளைச் சீனி நமது உடல் ஆரோக்கியக் கட்டமைப்பை மெதுவாகக் கொல்லும் ஸ்லோபாய்சன்; அதற்குப் பதிலாக கருப்பட்டி,பனைவெல்லம், பனங்கல்கண்டு,வெல்லம்,நாட்டுச் சர்க்கரை போன்றவைகளை பயன்படுத்தப் பழக வேண்டும்;
எள் எண்ணையில் வாரம் ஒருமுறையாவது குளிக்க வேண்டும்;வேக வைத்த உணவுகளைச் சாப்பிட்டுப் பழக வேண்டும்;
பொறித்த மேல்நாட்டு உணவுகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்,நோயை இலவசமாக வாங்குவதாக அர்த்தம்;
கொழுப்பு தரும் உணவுகளை அதிகம் சாப்பிடாமல் இருப்பது அவசியம்;
அதேபோல,பூமிக்குக் கீழே விளையும் கிழங்குகளை அதிகம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்;
ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு முறையும் சாப்பிடத் துவங்கும் முன்பு பிரார்த்தனை செய்துவிட்டு சாப்பிட வேண்டும்;இந்த பிரார்த்தனை நேரம் வீடு எனில் ஒரு நிமிடம் வரையிலும்,வெளியிடங்கள் எனில் சில நொடிகள் வரை இருக்கலாம்;
தினமும் புதிய காய்கறிகளையும்,கீரைகளையும் சாப்பிடப்பழக வேண்டும்;
சாப்பிடும் போது ஒருபோதும் புத்தகம் படிக்கக் கூடாது;
சாப்பிடும் போது ஒரு போதும் டிவி பார்க்கக் கூடாது;
சாப்பிடும் போது ஒருபோதும் போனிலோ,நேரிலோ பேசவே கூடாது;
சாப்பிடுவதற்கு முப்பது நிமிடங்கள் முன்பும்,பின்பும் தண்ணீர் அருந்தக் கூடாது;
பசி இல்லாத போது ஒருபோதும் சாப்பிடக்கூடாது; அதேசமயம்,பசி உணர்வு வந்த கொஞ்ச நேரத்திலேயே சாப்பிடப் போய்விட வேண்டும்; அதிகநேரம் பசி உணர்வுடன் இருக்கக்கூடாது;பசிக்கும் போது ஒரு போதும் காபி,டீ,பால்,வடை,குளிர்பானங்கள் சாப்பிடவே கூடாது;
நாம் உண்ணும் உணவில் கசப்பு சேர்ப்பதை ஒதுக்கிவிட்டோம்;அதனால் தான் உடலானது நோய்வாய்ப்படுகிறது;
சைவ உணவில் தானிய உணவு,பருப்பு வகை உணவு,காய்கறிகள் மற்றும் கிழங்குகள், கீரை வகைகள் என்று நான்கு வகைகள் இருக்கின்றன;இவைகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமது ஆரோக்கியமும் ஆன்மீக முன்னேற்றமும் உறுதிப்படும்;
புடலங்காய்,தேங்காய்,பிஞ்சாக இருக்கும் வெண்டைக்காய்,முருங்கைக்காய்,பீட்ரூட்,காரட் கிழங்கு,சேமைக்கிழங்கு,சேனைக்கிழங்கு,முள்ளங்கி,வெள்ளைப்பூண்டு,தூதுவளை, தண்டுக்கீரை,சிறுகீரை, கறிவேப்பிலை,பசலைக்கீரை,பொன்னாங்கண்ணிக்கீரை, வெங்காயம் சேர்த்த மசால்வடை,திராட்சைப் பழம்,மாதுளம்பழம்,காசினிக்கீரை,ரோஜாப்பூ,பிஸ்தாப் பருப்பு,சாதிக்காய்,கோரைக்கிழங்கு,லவங்கப்பட்டை,கிச்சிலிக்கிழங்கு,ஏலக்காய், அகிற்கட்டை, வெள்ளாட்டுப்பால்,வாதுமைப்பருப்பு,சுரைவிதை, நெல்லிக்காய்நாரத்தம்பழம்,இஞ்சி,சந்திஅனம், கஸ்தூரி,முத்து,புதினா இலை,மிளகு, நாவல்பழம்,குங்குமப்பூ மற்றும் சில உணவுப்பொருட்களே காலம் காலமாக நம்மையும்,நமது முன்னோர்களையும் ஆரோக்கியமாக வாழ வைத்து வருகின்றன;
உணவு உண்பதற்கான விதிகளை இங்கே தந்திருக்கிறோம்;இந்த விதிகளை முடிந்தவரையிலும் பின்பற்றுவதன் மூலமாக வளமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்;இந்த உணவு விதிகளைப் பின்பற்றுவதன் மூலமாக நமது ஆன்மீக முன்னேற்றம் ஒவ்வொரு நாளும் உறுதிப்படும்;
இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் தமிழ்நாடு முழுவதும் கிடைக்கின்றன;இவைகளை ஆர்கானிக் ஃபுட்ஸ் என்ற பெயரில் ஒவ்வொரு சிற்றூரிலும் கூட விற்பனை ஆகின்றன;சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை முடிவடைந்த 20,000 ஆண்டுகள் வரை இம்மாதிரியான உணவுகளையே நமது முன்னோர்கள் சாப்பிட்டுவந்துள்ளனர்;
டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள்,ரெடிமேட் உணவுகளை தவிர்க்கவும்;
ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக விளம்பரங்களில் வரும் எந்த பொருளையும் வாங்க வேண்டாம்;அந்த விளம்பரங்கள் மிகைப்படுத்தப் பட்டவை;
சிப்ஸ்,நொறுக்குத் தீனிகள்,எண்ணெய்ப்பலகாரங்கள் போன்றவற்றை நாமும் ஒதுக்க வேண்டும்;நமது குழந்தைகள் இந்த மாதிரியான உணவுப்பொருட்களுக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை;இவைகளுக்குப் பதிலாக ஆர்கானிக் பழங்கள்,கொட்டைகள்,பச்சைக்காய்கறிகளை உண்ணப் பழகவும்;குழந்தைகளுக்குப் பழக்கவும்;
இயந்திரங்களால் சமைக்கப்பட்ட உணவுகளை அறவே ஒதுக்கவும்;மனிதர்களால் சமைக்கப்படும் உணவில் இருக்கும் சுவையும் அக்கறையும் இயந்திரச் சமையலில் இராது;
அந்தந்தப் பருவகாலங்களில் விளைகின்ற பழங்கள்,காய்கறிகள்,கீரைகளை உண்ணவும்;
கோடையின் வெப்பத்தைத் தணிக்க டிவி விளம்பரங்களில் வரும் குளிர்பானங்களை அருந்த வேண்டாம்;மோர்,தர்ப்பூசணி,இளநீர்,செவ்விளநீர்,குல்கந்து(ரோஜாத் தேனூறல்),திராட்சைப்பழம்,திராட்சைப் பழச் சாறு,காரட்,காரட் சாறு போன்றவைகளே நமது உடலுக்கு குளிர்ச்சியைத் தருபவை;
ஆட்டுக்கறி,மாட்டுக்கறி போன்றவைகள் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடவும்;இவைகளை கடையில் வாங்கிச் சாப்பிடுவதையும் கைவிடவும்;
ஏனெனில்,இவைகளில் சேர்க்கப்படும் செயற்கைச் சுவையூட்டிகள் நமது உடலுக்குள் செல்லும் போது நோய்களை உருவாக்கக் காரணியாக அமைந்துவிடுகிறது;
உப்பு,சர்க்கரை,காரம் கலந்த உணவுகளை அளவோடு சாப்பிடப் பழகவும்; மருத்துவருக்கு கொடுப்பதை விட வாணிகனுக்குக் கொடு என்ற பழமொழியின் உள்கருத்து என்னவெனில்,ஆரோக்கியமான உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் நோய்கள் வராது என்பதே !!!
No comments:
Post a Comment