Wednesday, 30 December 2015

வசியத்திற்கு பயன் பெறும் இரண்டு அபூர்வ தாந்த்ரீக பொருட்கள்

வசியத்திற்கு பயன் பெறும் இரண்டு அபூர்வ தாந்த்ரீக பொருட்கள்

டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி மற்றும்  இவருக்கும் முன் இருந்து வந்த பல தாந்த்ரீகர்கள் உபயோகித்து வந்த  இரண்டு மிக அபூர்வ விசயங்கள்-

ஒன்று : குள்ள நரி கொம்பு "ஷீயார் சிங்கி" என அழைக்கப்படும் இது வீட்டில் இருக்க சொத்துக்கள் சேரும் மற்றும் பண விரயங்கள் நிற்கும். இயற்கையாக இறந்த குள்ள நரியின் சிறு கொம்பை-இது எல்லா குள்ள நரிக்கும் இருக்காது-ஆகவே உண்மையாக கிடைப்பது மிக கடினம்-ஆனால் பலர் உபயோகித்து வெற்றி கண்டது இது-குறிப்பாக வட நாட்டு தலைவர்கள் மற்றும் பெரும் தொழில் அதிபர்கள் அனைவர் வீட்டிலும் இது கட்டாயம் இருக்கும்-சில ஆண்டுகள் முன்பு வரை.

ஆனால் இப்போது வியாபார நோக்கத்தில் இதற்காக பல குள்ள நரிகள் கொல்லப்படுவதாலும், அரசாங்க கெடுபிடிகளினாலும் மற்றும் இதை எடுக்கத்தெரிந்தோர் மிக அபூர்வமாகிவிட்டதாலும் நிறைய போலிகள் உலவத்தொடங்கி விட்டதாக தகவல்.இதை எடுத்து நம் வீட்டு பணப்பெட்டியில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் சிகப்பு துணியால் முடிந்து வைத்து விட வேண்டும்.இதற்கு சாமானியர்கள் செய்யும் படியான வேறு எந்த பூஜை முறையும் இல்லை. சொத்துக்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், புதிய சொத்து சேர்க்க ஆசைப்படுபவர்களுக்கு இது பெரிய வரப்பிரசாதம்.

மேலும் இதை தலைமுறை தலைமுறையாக பத்திரப்படுத்தி நம் சந்ததி வளர உபயோகிக்கலாம். உண்மையானது கிடைக்கப்பெற்றோர், கண்டிப்பாக அதிர்ஷ்டசாலிகள் ஆவர். தனது புத்தகத்தில் இதன் மேன்மையை பற்றி சிலாகித்து எழுதி உள்ளார் டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி.

மற்றொன்று : "பில்லி கா ஜெர்" என அழைக்கப்படும் பூனையின் தொப்புள் கொடி  பொதுவாக நம் முன்னோர்கள் கூற்றுப்படி தலைச்சன் பிள்ளையின் தொப்புள் கொடியை தகப்பன் தாயத்தாக அணிந்து வரும் முறையை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். அது போல் பல மடங்கு தன ஆகர்ஷணம்  ெய்ய கூடியது "பில்லி கா ஜெர்". தனது புத்தகத்தில் 'அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒன்று இது என்று கூறியுள்ளார் டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி .

ஆனால் சாத்தியமே இல்லை. பூனையானது தனது குழந்தை பிறந்த உடன் அதன் நாபியை தின்று விடும். இதை எடுப்பது மிக மிக சிரமம். ஆனால் அந்த காலத்தில் பிரத்யேகமாக சிலரை இதற்கென்று வைத்திருப்பார் களாம். அவர்களுக்கு பூனை குட்டியிடும் முன்பு கொடுக்கும் சப்தங்கள் மூலம் அதன் பிரசவ நிலை தெரிந்து பின்பு குட்டிக்கும் தாய்க்கும் சிரமமில்லா வண்ணம் எடுத்து பக்குவப்படுத்துவார்களாம். இப்படி செய்பவர்கள் இப்போதும் சீனாவில் இருப்பதாக கேள்வி. திபெத், தாய்லாந்து போன்றவை மாந்திரீகம், தாந்த்ரீகம், செய்வினை போன்றவைகளுக்கு பிரசித்தம்.

No comments:

Post a Comment