Sunday, 27 December 2015

குண்டலினி

குண்டலினி

மெஞ்ஞானத்தை பற்றி விஞ்ஞானத்தால்
விளங்கி கொள்ளவோ விளக்கவோ முடியாத
இன்றைய சூழ்நிலையிலும், விஞ்ஞானதிற்கு
விளங்காத விஷயங்களையும் மெஞ்ஞானம்
விஞ்ஞானமுறையில் விளக்கி கொண்டுதான்
உள்ளது.

அதற்கு ஓர் உதாரணமே இப்பதிவு.
"அமானுஷ்ய இரகசியங்கள்" என்ற புத்தகம்
குண்டலினி சக்தியை பற்றி
விஞ்ஞானமுறையில் தெளிவாக
விளக்கியுள்ளது. அப்புத்தகத்தின் ஒரு
பகுதியை கொண்டே இப்பதிவின் ஓர் பகுதி
விளக்கப்பட உள்ளது.

குண்டலினி சக்தி நம்
முதுகுதண்டின் அடிப்பகுதியில்
குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் அங்கே என்ன?? உள்ளது என்று
பார்த்தால் தனிமங்களே!! அத்தனிமத்தின் பெயர்
வெண்பாஸ்பரஸ். இந்த வெண்பாஸ்பரஸ்
காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை
கொண்டது. அதேபோல் நம் உடலில்
உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்கு
கீழேயும் காற்று செல்வதில்லை. இங்கே ஒரு
சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை
வழியாக காற்றை மூலாதாரத்திற்கு கொண்டு
செல்லும்போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடு
வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல்
மேலே எழுகின்றது. இதுவே யோகமுறையில்
குண்டலினி விழிப்படைதல் ஆகும். நம்
உடலின் வெப்பத்தை உண்மையில்
மூலத்தில்தான் கண்டறிய முடியும். அந்த
வெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலே
எழுகின்றது.

அடுத்து அந்த அனல் மேலே எழும்பி
சுவாதிஷ்தானத்தை அடைகின்றது. அங்கே
உள்ள தனிமத்தின் பெயர் கார்பன். மேலே
எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும்
வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்ப
டுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலே
குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது.

இதனால் அனல் மேலும் மேலே எழுந்து
மணிபூரகத்தை அடைகின்றது. அங்கே அது
வினைபுரியும் தனிமத்தின் பெயர்
ஹைட்ரஜன். இந்த தனிமத்தின் இயற்கை
குணமே வெடிப்பதாகும்.

எனவே வெப்பநிலை
மேலும் அதிகரித்து அனாகதத்தை
அடைகின்றது. அனாகதத்தில் உள்ள
தனிமத்தின் பெயர் சுத்த ஆக்சிஜன். நாம்
சுவாசிக்கும் காற்று நைட்ரஜன் கலந்த
ஆக்சிஜனாகும். சுத்த ஆக்சிஜன்
எப்பொருளையும் விரைவாக எரித்துவிடும்.

எனவே இங்கேயும் வெப்பம் அதிகரித்து
விசுத்தியை அடைகின்றது.
ஐயோடின் என்பது விசுத்தியில் உள்ள
தனிமத்தின் பெயராகும். இங்கேயும்
வினைபுரிதலும் வெப்பம் அதிகமடைதலும்
நிகழ்ந்து மேலேறுகின்றது.

அடுத்ததாக உள்ள
சக்கரத்தின் பெயர் ஆக்கினை. அங்கே சுத்த
நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது. மேலே
எழுப்பிய அனல் இத்துடன் வினைபுரிவதோடு
அந்த புத்தகத்தில் முடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எழும்பிய குண்டலினி சகஸ்ரத்திற்கு
சென்றபின்புதான் புருவமத்தி பூட்டு திறந்து
கீழிறங்கி ஆக்கினையை அடையும். அப்படி
பூட்டு திறந்து அங்கே பார்த்தால் சுத்த
கந்தகம் இருக்கும்.

இது எப்படி உண்மை?
என்ற கேள்வி வரலாம்!! அதனால் தான்
முந்தைய பதிவில் சக்கரங்கள் என்று
குறிப்பிட்ட இடங்களில் எண்ணென்ன சுரப்பிகள்
உள்ளன என்பதை விவரிக்கப்பட்டது. அந்த
சுரப்பிகளையும் அதன் இயக்கத்தில்
சுரக்கப்படும் வேதிபொருட்களையும்
ஆராய்ந்தால் மேற்கண்ட தனிமங்களே
இருக்கும். முடிந்தால் அந்த புத்தகத்தை
வாங்கி ஒருமுறையாவது படிக்கவும். ஆன்மீக
சம்பந்தமான உங்கள் பார்வை சிலமணி நேரம்
விஞ்ஞானத்திற்குள்ளும் சென்று வரும் என்பது
உறுதி.

சித்தர்களை ஏன் விஞ்ஞானிகள் என்று
அழைத்தனர் என்பதும் புரியும்!!
இந்த மூலஅனல் எழுவதற்கு எந்த யோகம்
சிறந்தது? இதற்கு குரு அவசியமா? இதில்
ஆபத்து எதாவது உள்ளதா? என்ற கேள்விகள்
வரலாம்!

உண்மையில் இந்த மூலஅனல் எழுவதற்கு
எந்த ஒரு யோகமும் தேவையே இல்லை!!
என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு!!
உண்மையான தேடுதல் உள்ளவனுக்கோ
அல்லது பக்குவிக்கோ அவர்களை அறியாமலே
குண்டலினி விழிப்படைந்து எழுந்துவிடுகின்
றது.
குண்டலினி
எழுப்புவது மிகவும் ஆபத்தான ஒன்று என்று
பலர் கூறுவது உண்டு. அவர்கள் காட்டும்
உதாரணம் கூட தவறான முறைகள் அல்லது
சித்து அல்லது சக்திகள் பெற அலைந்த
சுயநலக்காரர்களின் முடிவை தானே தவிர,
உண்மையான தேடுதல் அல்லது பக்குவியை
அவர்கள் பார்த்ததில்லை என்பது தான்
உண்மை. இயற்கையும் இறைவனும் எந்த ஒரு
காலத்திலும் யாருக்கும் தீங்கு நினைப்பதே
இல்லை.
அப்படி தேடுதல் உள்ளவர்களுக்கே அவர்களை
அறியாமல் எழுந்துவிடுகின்றது என்றால்,
இவர்களுக்கு மட்டும் எப்படி அது தெரியும்.
ஆன்மீகத்தில் குரு என்பவர் ஒரு விளக்கை
ஏற்ற உதவும் தீக்குச்சியை போன்றவர்.
விளக்கை ஏற்றும் வரைக்கும் தான் அவருக்கு
வேலை.

ஆனால் அப்படிபட்டவர் உங்களை
தேடி அவரே தான் வருவாரே தவிர, நம்மால்
அவர்களுக்கு ஆவதற்கு ஒன்றுமில்லை.
ஒரு சிலருக்கு எழவைத்து பின்
இறக்கி புருவபூட்டை திறந்தும்,
இயற்கையாகவே எழுந்த ஒரு சிலருக்கு இறக்கி
புருவபூட்டை திறந்து வைப்பதும் இவர்களே!

அப்படி செய்வதும் கூட அவர்களுக்கு
தெரிந்துதான் செய்ய வேண்டும் என்ற
அவசியமில்லை. அதுவும் தெரியாமலே
நடந்துவிடும். தன்னை வெளிக்காட்டி கொள்ள
வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.
ஏதாவது எதிர்பார்ப்பு இருந்தால் தானே, வெளி
காட்ட வேண்டும். மொத்தத்தில் குரு என்பவர்
அவசியம்.

ஆனால் அவர் வெளி தெரிய
வேண்டும் என்ற அவசியமில்லை. அனைத்தும்
ஒரு சில நொடிகளிலேயே நடந்து
முடிந்துவிடலாம். ஒரு குருவின்
பெருமைகளை வெறும் வார்த்தைகளால்
விவரிக்க முடியாது. அவருக்கு நிகர் இந்த
பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. அது உங்கள்
அனுபவத்திற்கு வரும்போது நன்கு விளங்கும்.

"சிரம் முட்டும் பொழுதில்
வரம் தட்டும் குருவே
தரம் பார்த் துன்னை
பரம் ஆக்கிடு வான்"
ஆக்ஞா சக்கரத்தின் புருவமத்தி வாசல்
திறந்தலே வெற்றிட பூஜ்ஜிய
பரமநிலையாகும். பிரமநிலைக்கு மணிபூரக
சக்கரம் விழிப்படைதலே காரணம். பக்தி
நிலைக்கு அனாகத சக்கரம் விழிப்படைதலும்,
முக்தி நிலைக்கு சகஸ்ராரம் விழிப்படைதலும்,
யோக நிலைக்கு சுவாதிஷ்டானமும்,
ஞானத்தேடலுக்கு மூலாதாரம்
விழிப்படைதலும் காரணமாகும். நாதத்தின்
மீயோலி வெம்மையால் அமிர்தம் சுரப்பதற்கு
விசுத்தி விழிப்படைதலே காரணமாகும்.

மேலும் நாம் தியானத்தில் அமரும் போது
குண்டலினியானது புருவமத்தி அல்லது
சகஸ்ராரத்திலும், தூங்கும் போது
விசுத்தியிலும் தங்கும். அந்த அமிர்தமும்
விசுத்தியை தாண்டி கீழிறங்காது. அதாவது
விசுத்திதான் உறைவிடம்(உறையும் இடம்).
குண்டலினி எழும்பியபின் முதலில் நரம்பு
முடிச்சுகள் அவிழ்ந்து ஒவ்வொரு சக்கரமாய்
விழிப்படையும். இதில் உடலில் மாறுபாடாக
அடையாளமாக காண்பது விந்தின்
வெம்மையால் சகஸ்ராரத்தின் கீழ் உள்ள
மூளையின் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து
வெம்மையானது நெருப்பாறாக மாறி
வரிவரியாக தடம் இருக்கும். மேலும் உடலில்
நிரந்தரமாக காணப்படும் அடையாளமாக
புருவமத்திக்கு மேல் நெற்றி வகிடுக்கு கீழ்
விந்தின் வெம்மையால் ஒரு பிறைவடிவ "U"
நாமத்தடம் விழும். இத்தடமானது இப்பூமியில்
உடல் விடும் வரை இருக்கும். கை விரலால்
தடவி பார்த்து நெற்றியில் இந்நாமத்
தடத்தினையும், கபாலத்தில் வரிவரியாக
நெருப்பாற்றின் தடத்தினையும் காணலாம்.
சகஸ்ராரத்திலிருந்து நெருப்பாற்று தடத்தின்
வழியாக அமிர்தமானது பிறை வடிவ
நாமத்தடம் நீர் வடியும் விளிம்பாக மாறி அதன்
வழி புருவமத்தி உட்வாசலான குதம் சென்று
பின் அங்கிருந்தே உண்ணாக்கு வழி விசுத்தி
சென்று உறைவிடமாய் கொள்கிறது. மேலும்
பொன்னை உரசினாற் போல் மேனியுடைய
தேமலானது உடலில் அதிகம் காணலாம்.
அடுத்ததாக இந்திரியம், இரத்தம் வழியாக
உடல் முழுவதும் கலந்ததன் அடையாளமாகிய
உடலில் நறுமணமும், சிறுநீர் மற்றும்
வியர்வையில் கூட இந்திரியத்தின் மணமோடு
கூடிய ஓர் பழ வாசனையை அறியலாம்.
உடல் அடையாளமாக சாதாரணமாகவே
உழிழ்நீரானது அதிகமாக சுரப்பதும் மற்றும்
புருவமத்தி உள் வாசலான குதம் உறுத்தலும்,
மேலும் விசுத்தி சக்கரம்தான் அமிர்தமானது
உறையும் இடமாதலால் தொண்டை மத்தியில்
ஏதோ ஒன்று கட்டியாக ஒரு சிறு
உருண்டையாக இருந்துகொண்டு எதையும்
நாம் சாதாரணமாக விழுங்கும் போது அங்கு
உறுத்தல் ஏற்படும்.

மற்றபடி காலை ஆறு
மணி முதல் மாலை ஆறு மணி வரை இருக்கும்
இடத்திற்கு சற்று மேலே ஊர்க்குருவிகள்
தட்டுப்படும். மாலை 6 மணி தாண்டி காலை 6
மணி வரை அமிர்தத்தின் மீயொலி நாதத்தின்
ஈர்ப்பால் இருக்கும் இடம் மற்றும் செல்லும்
இடம் எல்லாம் வௌவால்கள் கண்ணில்
தட்டுப்படும்.

குண்டலினி சக்தி என்பது உங்களுக்குள்
இருக்கும் ‘வெளிப்படாதசக்தி’. அதாவது அது
தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வரை,
அப்படியொரு சக்தி உங்களுக்குள் இருப்பதைக்
கூட நீங்கள் அறியமாட்டீர்கள். ஆம், ‘அசையாத
வரை’ இல்லாதது போல் இருக்கும், ஆனால்
அது எழுச்சியுற்று, வெளிப்பட
ஆரம்பித்துவிட்டாலோ, இத்தனை சக்தியும்
உங்களுக்குள் தான் இருந்ததா என்று நீங்கள்
மலைத்துப் போவீர்கள். இக்காரணத்தினால்தான்
இந்த சக்தியை ‘சுருண்டு கிடக்கும் பாம்பாக’
குறித்தார்கள். சுருண்டு கிடக்கும் பாம்பு நகர
ஆரம்பிக்கும் வரை, யார் கண்ணிலும் படாது.
அதேபோல் தான் உங்களுள் அமிழ்ந்திருக்கும்
இந்த சக்தி எழுச்சியுற்று நகரும் வரை, அதை
நீங்கள் உணரமாட்டீர்கள்.இந்த சக்தி
எழுச்சியுறும் போது, நீங்கள் கற்பனையில்
கூட நினைத்திடாதஅதிசயங்கள் உங்களுக்குள்
நடக்கத் துவங்கும். முற்றிலும் புதுவிதமான,
அபரிமிதமான சக்தியோட்டம் உங்களுக்குள்
நிகழ, அனைத்துமே வேறு வகையில்
இயங்கும்.

குண்டலினியை எளிமையாக விளக்க உங்கள்
வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் (plug point)
இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை
உருவாக்குவதில்லை. எங்கோ ஓரிடத்தில் ஒரு
பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம்
இருக்கிறது, அதுதான் மின்சாரத்தை
உருவாக்குகிறது,ஆனால் அது உங்களுக்கு
நேரடியாக மின்சாரத்தை வழங்க
முடியாது.இந்த பிளக் பாயிண்ட்தான்
உங்களுக்குமின்சாரத்தைக் கொடுக்க முடியும்.
பெரும்பாலானவர்கள் அந்த மின்நிலையத்தை
நினைத்துக்கூட பார்ப்பதில்லை, இல்லையா?

அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்று
தெரியாமல் இருந்தாலும், ஒரு மின்சாதனத்தை
இந்த பிளக் பாயிண்டோடு இணைத்துவிட்டால்,
அந்த சாதனம் வேலை செய்யும் என்பது
மட்டும் தெரிந்திருக்கிறது. இந்தக்
குண்டலினியும் ஒரு பிளக் பாயிண்ட்
போலத்தான், அதுவே ஒரு மின்நிலையம்
அல்ல. இது 3 பின்களைக் (pin) கொண்ட பிளக்
பாயிண்ட் அல்ல. 5 பின்களைக் கொண்ட பிளக்
பாயிண்ட்.

இதை இப்படிப் பார்க்கலாம். உடலில்
இருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள்
கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் மூலாதார
சக்கரம், அடிப்படை அல்லது ஆதாரமாக
இருக்கும் சக்கரம். இது ஒரு பிளக் பாயிண்டைப்
போலவும் அடுத்த 5 சக்கரங்கள் சேர்ந்து 5 பின்கள் கொண்ட ஒரு பிளக் போலவும்
இருக்கிறது.ஏழாவது சக்கரம் ஒரு பல்பைப்
(bulb) போன்றது. இப்போது பிளக்கை பிளக்
பாயிண்ட்டில் சொருகினால், உங்களைப் பற்றிய
அனைத்தும் ஒளிவிடுகின்றன. இப்போது
உங்களைப் பற்றிய அனைத்தையும் படிக்க
முடியும். இப்படி உங்களுடைய பிளக்
அதற்கான பிளக் பாயிண்டில் சரியாக
சொருகப்பட்டு விட்டால், பிறகு விளக்குகள்
இருபத்தி நான்கு மணி நேரமும்
பிரச்சனையின்றி தொடர்ந்து எரியும். பேட்டரி
தீர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டிய
அவசியம் கிடையாது. எனவே, உங்களில், பிளக்
சரியாக பிளக் பாயிண்டில் இணைக்கப்பட்டிருக்கும்போது, நீங்கள் எல்லையில்லாத
சக்தியின் மூலத்தோடு தொடர்பு
கொள்கிறீர்கள். அதுதான் குண்டலினி.
யோகா செய்வதன் அடிப்படையே
அவர்களுக்குள் ஒரு சமநிலையை
ஏற்படுத்துவதுதான். அந்த சமநிலை
வந்துவிட்டால், பிறகு ப்ளக்கை பிளக்
பாயிண்டில் சரியாக சொருகி விடுவீர்கள்.
அப்படிச் சரியாக தொடர்பு கொள்ளும்போது,
எல்லையில்லாத சக்தியுடன் தொடர்ந்து
தொடர்பில் இருப்பீர்கள்.

குண்டலினியும் அதனை உணர்தலும்
சக்தி நிலை கூடுகிறது என்றால் உங்கள்
‘ஆழ்ந்து உணரும்’ ஆற்றலும் கூடுகிறது.
யோக விஞ்ஞானம் முழுவதுமே உங்களின்
இந்த நுண்ணுணர்வை அதிகரிக்க
உருவாக்கப்பட்டவை தான். ஆன்மீக
செயல்முறை என்றாலே உங்களின் உணரும்
திறனை அதிகரிப்பதற்குத்தான் ஏனெனில்
உங்கள் அறிவின் சாரம், நீங்கள் அறிபவை
எல்லாம் நீங்கள் உணர்வதை சார்ந்தே
இருக்கிறது. சிவன் பாம்புடன்
காட்சியளிப்பதும் கூட இதனால் தான்.
சிவனின் சக்தி அதன் உச்சத்தை எட்டியதால்,
அவரின் உணரும் திறனும் உச்சத்தில்
இருக்கிறது. அதனால் அவரின்
நெற்றிக்கண்ணும்திறந்துவிட்டது.

குண்டலினியும் நெற்றிக் கண்ணும்:---

மூன்றாவது கண் என்றால் ஒருவருடைய
நெற்றி பிளந்து, அங்கே இன்னொரு கண்
தோன்றிவிட்டது என்று அர்த்தமல்ல. இது ஒரு
குறியீடு… முற்றிலும் புதுவிதமான
பரிமாணத்தில் உணரும் திறன் வந்துவிட்டது
என்பதைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படும்
ஒரு குறியீடு… அவ்வளவே! இந்த இரண்டு
கண்களால் பொருள்நிலையில் உள்ளவற்றை
மட்டுமே பார்க்க முடியும். உதாரணத்திற்கு,
இந்தக் கண்களை கைகளால் மூடினால்,
அவற்றால் எதையும் பார்க்க முடியாது. அதன்
திறன் அவ்வளவு தான். பொருள்நிலைக்கு
உட்பட்டே அது செயல்படுகிறது.

ஆனால்
‘நெற்றிக்கண் திறந்துவிட்டது’என்று
சொன்னால், அது உள்நோக்கிப் பார்ப்பது.
வாழ்கையை முற்றிலும் வேறு விதமாக
உணரும் பரிமாணம் திறந்து
கொண்டுவிட்டதால், இவ்வுலகில்
எதையெல்லாம் உணரவேண்டுமோ, அவை
அனைத்தையுமே உணர்ந்துகொள்வது.

குண்டலினி யோகா -

“குண்டலினி” என்ற வார்த்தையை உச்சரிக்க
வேண்டும் என்றாலும் கூட, மிக்க
கவனத்துடன், விழிப்புணர்வோடு,
மரியாதையோடு தான் உச்சரிக்கவேண்டும்.
ஏனெனில் அந்த வார்த்தையே அத்தனைப்
பெரிது. உங்கள் உடல், மனம், உணர்வுகள்
அனைத்தையும் தேவையான அளவிற்கு தயார்
செய்து கொண்ட பின்னரே, குண்டலினியை
எழச்செய்ய முயற்சிகள் மேற்கொள்ள
வேண்டும். ஏனெனில் இந்த அளவிற்கு
சக்தியை தாங்கிக்கொள்ள முடியாத உடலில்
அதைச் செலுத்தினால், ‘ஹை
வோல்டேஜ்ஜால்’ செயலிழக்கும் எந்திரங்கள்
போல், உங்கள் உடலும் சமனற்றோ,
செயலிழந்தோ போகும். தேவையான
வழிநடத்துதலும்,துணையும் இன்றி செய்தல்
ஆகாது-
குண்டலினி யோகா தான் இருப்பதிலேயே மிக
அபாயகரமான யோகமுறை. அபாயம் என்பது
அதுதான் இருப்பதிலேயே மிகவும் வீரியம்
வாய்ந்த செயல்முறை என்பதால்! எது
சக்திவாய்ந்ததோ,அதைத்தவறாகப்
பயன்படுத்தினால், அது பேராபத்தாய்
முடிந்துவிடும்.உதாரணத்திற்கு மின்சாரத்தை
உற்பத்தி செய்ய பல வழிகள் இருக்கிறது.
அதில் ஒன்று அணுஉலை வாயிலாக உற்பத்தி
செய்வது. மின்சாரம் உற்பத்தி செய்ய நாம்
அறிந்தருக்கும் எல்லா வழிகளிலும் இதுதான்
சிறந்த வழி… என்றாலும், இதுதான் மிகவும்
ஆபத்தான வழியும் கூட. நிஜம் தானே?
எல்லாம் சரியாக நடக்கும்போது
மிகச்சிறப்பான வழியாய் இருப்பது, தவறாகிப்
போனால் சரிசெய்ய முடியாத அளவிற்கு
பெரும் பிரச்சினைகளை உருவாக்கிவிடுகிறது.
அதேபோல் தான் குண்டலினி யோகாவும்.

அனைத்திலும் சிறந்த வழி… அதே நேரத்தில்
மிகவும் ஆபத்தானதும் கூட. தேவையான
முன்னேற்பாடுகளோடு, அதைப் பற்றி
முழுமையாய் அறிந்தவரின்
தொடர்வழிகாட்டுதல் மற்றும்
மேற்பார்வையில் மட்டுமே இதை நாம் பயிற்சி
செய்யவேண்டும். இல்லையெனில்இதை
செய்யாதிருப்பதே நல்லது..இதனால்
குண்டலினி யோகா செய்வது தவறு என்று
இல்லை. முறையாய் செய்தால் அது போன்ற
ஒரு அருமையான வழியில்லை,
ஆனால்பிரச்சினை என்னவெனில், ‘சக்தி’க்கு
என்று தனியாய் பிரித்தறியும் திறன்
கிடையாது. அதை வைத்து உங்கள் வாழ்வை
உருவாக்கவும் செய்யலாம், அழித்தும்
கொள்ளலாம், இன்று மின்சாரம் தான் உங்கள்
வாழ்வை பல வழிகளிலும் உருவாக்கிக்
கொண்டிருக்கிறது… ஆனால் அதுவே மின்சாரக்
கம்பியை கைகளால் தொட்டால், என்னாகும்
என்று உங்களுக்கே தெரியும்!

No comments:

Post a Comment