Wednesday, 23 December 2015

பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள்..

பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள்..

லக்கினத்தில் கேது

ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான்.
பொதுவாக அமைதியானவன். காரியவாதி. உள்மன அறிவு மிக்கவர்கள் சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும் மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள்
சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை
மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும்

இரண்டில் கேது!.

ஜாதகன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன். படிப்பைப் பாதியில் விட்டவன் அல்லது படிக்காதவனாக இருப்பான். குறுகிய கண்ணோட்டம் உடையவனாக இருப்பான்.
குடும்ப வாழ்க்கை 32 வயதிற்கு மேல்தான் உண்டாகும்
சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், படித்தவர்களாக இருப்பார்கள் மற்றவர்களுடைய சொத்திற்கு ஆசைப் படுபவர்களாக இருப்பார்கள்.

மூன்றில் கேது.

ஜாதகன் உயர்ந்தகுடியில் பிறந்தவனாக இருப்பான். அதாவது உயர்ந்த குடும்பத்தில்
பிறந்தவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவன்.துணிச்சல் மிக்கவன். சாதனைகளைச் செய்யக்கூடியவன். எதிரிகளை ஒழித்துக் கட்டக்கூடியவன்.
செல்வத்தை அனுபவிக்கக் கூடியவன்.வளம் பெறக்கூடியவன். எல்லாவிதமான
சுகங்களையும் அனுபவிக்கக் கூடியவன்.இருப்பான்.

நான்கில் கேது.

இந்த இடம் கேதுவிற்கு உகந்த இடம் அல்ல. மாற்றிச் சொன்னால் ஜாதகனுக்கு உகந்தது அல்ல!
நான்காம் வீடு இருதயத்திற்கான இடம். இங்கே கேது அமர்ந்தால் ஜாதகனுக்கு
இதய நோய்கள்  வரலாம். வரும் என்று அடித்துச் சொல்லாமல், வரலாம்
என்று சொல்வதற்குக் காரணம், இந்த வீட்டில் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் வராது.
ஜாதகனுக்கு மகிழ்ச்சி, சொத்துக்கள், சொந்தங்கள், வண்டி வாகனங்கள் என்று எல்லாம் மறுக்கப்பட்டிருக்கும். உறவுகளே பகையாக மறிவிடும்.
சிலருக்குத் தாயன்பு என்பதே இல்லாமல் போய்விடும்..

ஐந்தில் கேது

ஜாதகன் கடினமான ஆசாமி. மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியாதவனாக ஜாதகன்
இருப்பான். ஜாதகனுக்கு சந்ததி இருக்காது. இருந்தாலும் பிரச்சினைக்கு உரியதாக
இருக்கும். அஜீரணக்கோளாறுகள் இருக்கும். அதனால் மேலும் பல நோய்கள் உண்டாகி வாட்டும். பாவச் செயல்களில் ஈடுபாடு இருக்கும். மகிழ்ச்சி இருக்காது. இந்த அமைப்பை சந்நியாச யோகம் என்பார்கள். அதுவே சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் மிக நன்று

ஆறில் கேது

அவனுடைய இனத்தில் அல்லது அவனுடைய சமூகத்தில்
தலைவனாக இருப்பான். உயர்கல்வி பெற்றிருப்பான். தர்மசிந்தனை உடையவனாக இருப்பான். சொந்த பந்தங்களை நேசிப்பான். பல பெருமைகளுக்கு உரியவனாக இருப்பான். பலதுறைகளிலும் அறிவு உள்ளவனாக இருப்பான். பெருந்தன்மை
உடையவனாக இருப்பான். கேதுவிற்கு இந்த இடம் மிகவும் உகந்ததாகும்.
வயிற்றுக் கோளாறுகள் உண்டு.

ஏழில் கேது

ஜாதகனுக்கு, அவனுடைய மனைவியால் மகிழ்ச்சி கிடைக்காது. நடத்தை சரியில்லாத
பெண்களுடன் ஜாதகனுக்கு நட்பு அல்லது உறவு இருக்கும். அவர்களுக்காக ஜாதகன் உருகக்கூடியவன். வாழ்க்கையில் வளமை இருக்காது. மன அழுத்தங்களை உடையவன். பயணிப்பதில் ஆர்வமுள்ளவன்.
அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கக்கூடியவன்
இந்த அமைப்பை உடைய சில ஜாதகர்களுக்கு நோய்வாய்ப்பட்ட மனைவி அல்லது
கணவன் அமையக்கூடும்

எட்டில் கேது

புத்திசாலி. மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடியவன்
சிலருக்கு ஆயுதங்களால் விபத்துக்கள் நேரிடும். சிலர் குறைந்த ஆண்டுகளே
உயிர் வாழ்வார்கள். பொதுவாக எட்டில் கேது இருந்தால் ஆயுள்தோஷம். அடுத்தவன் சொத்தை அபகரிக்கும் ஆசை இருக்கும். சிலர் கஞ்சனாக இருப்பார்கள். சிலருக்குப் புகழும் தலைமை ஏற்கும் தகுதியும் இருக்கும்.

ஒன்பதில் கேது

ஆன்மிகவாதி..தந்தைக்கு தோசம்.
ஜாதகன் பல பாவச்செயல்களைச் செய்யகூடியவன், பெற்றவர்களின் அன்பு, பாசம், பரிவு போன்றவைகள் கிடைக்காது. காம இச்சைகள் மிகுந்தவன். சிலர் ஆன்மிகம், மத உணர்வு, தர்ம நியாயங்கள் இவற்றை எல்லாம் உதறி விடுவார்கள். அப்படி உயர்ந்த சிந்தனைகள் உடையவர்களைக் குறை கூறுவதில்
ஜாதகன் ஆர்வமுடையவனாக செயல்படுபவனாக ஜாதகன் இருப்பான்.

பத்தில் கேது.

மக்கள் அனைவரையும் நேசிக்கும் மனது அல்லது பக்குவம் ஜாதகனுக்கு இருக்கும்.
சமூகக் காவலனாக ஜாதகன் இருப்பான். அல்லது அந்த நிலைக்குச் ஜாதகன் உயர்வான்.
ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். வாழ்க்கை முறைகள், வாழ்க்கைத் தத்துவங்கள் ஆகியவற்றை அறிந்தவனாக இருப்பான்.
திறமைசாலியாக இருப்பான். செய்யும் தொழிகளில் நுட்பம் அறிந்தவனாக இருப்பான். கேது இந்த இடத்தில் இருப்பது ஒருவனின் தொழில் மேன்மைக்கு உகந்ததாகும்.

பதினொன்றில் கேது.

ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது அந்த நிலைக்கு உயர்வான். அதிகம்
படித்தவனாக இருப்பான். கல்வியாளர்கள் மத்தியில் பெருமைக்கும் புகழுக்கும்
உரியவனாகத் திகள்வான். மகிழ்ச்சியில் திளைப்பான்
பல நல்ல குணாம்சங்கள் இருக்கும். பெருந்தன்மையும், நல்ல நோக்கங்களும்
உடையவனாக ஜாதகன் இருப்பான். அவன் தன்னுடைய செயல்களால் பலரிடமும்
நல்ல மதிப்பைபயும் மரியாதையையும் பெறுவான்.

பன்னிரெண்டில் கேது

இந்த இடத்தில் கேது இருந்தால் ஜாதகனுக்கு அடுத்த பிறவி கிடையாது. வீடு பேற்றை அடைந்து விடுவான்.
ஜாதகன் அடிக்கடி மாறக்கூடியவன். காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு என்றிருக்கும். நிலையில்லாதவன்ஊர்சுற்றி, சிலருக்கு, கண்கள் பாதிப்பிற்குள்ளாகும்
பாவங்களைச் செய்துவிட்டு மறைக்கக் கூடியவன். துன்பங்களில் உழல்பவன்.
சிலர் மாய, ஜால வேலைகளில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்
சிலர் தனிமையை விருபுவார்கள். தனிமைப்பட்டும் வாழ்வார்கள்..

No comments:

Post a Comment