உலகியல் ஜோதிடத்தில் ராகு-கேதுக்களின் பங்கு
ஒரு பொருளை அல்லது ஒரு உயிரை இல்லாமல் செய்துவிடுவது ராகுவின் குணமாகும். ஒரு பொருளை அனுபவிக்க விடாமல் தடை செய்வது கேதுவின் குணமாகும்.
ராகு -கேதுக்கள் இரண்டுமே பிரிவினை மற்றும் தடைகளை உண்டாக்கும் கிரகங்களாகும்.
ராகு எந்த ராசியில் சஞ்சரிக்கிறானோ , அந்த ராசியின் காரகங்களையும் ,அந்த ராசி நாதனின் காரகங்களையும் அழிப்பான்.
கேது எந்த ராசியில் சஞ்சரிக்கிறானோ அந்த ராசியின் காரகங்களையும், அந்த ராசி நாதனின் காரகங்களையும் தடை செய்வான்.
ராகு,கேதுக்களுக்கு கேந்திரத்தில் (1-4-7-10ல்) எந்த கிரகம் சஞ்சரிக்கிறதோ அந்த கிரகத்தின் காரக தன்மைகள் நிச்சயமாக பாதிப்படையும். இந்த பொது விதிகளை அடிப்படையாகக்கொண்டு நாட்டு நடப்புகளை எளிதாக கூறிவிடலாம்.
1. சிம்மம்-கும்பத்தில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க சிம்ம ராசிக்கு கேந்திரத்தில் (சிம்மத்திற்கு 1-4-7-10ல்) சூரியன் வரும் காலங்களில் உலகம் முழுவதும் அரசியல் குழப்பங்கள் ஏற்படும். ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்.ஆட்சியாளர்களுக்கு பல விதமான பிரச்சினைகள் உண்டாகும்.
2. மேசம்-துலாத்தில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க (மேசத்திற்கு 1-4-7-10ல்) சூரியன் வரும் காலங்களில் உலகம் முழுவதும் அரசியல் குழப்பங்கள் ஏற்படும். ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்.ஆட்சியாளர்களுக்கு பல விதமான பிரச்சினைகள் உண்டாகும்.
3.ராகு நின்ற ராசிக்கு திரிகோணத்தில் (1-5-9ல்) சூரியன் வரும் காலங்களில் அரசியல் தலைவர் ஒருவருக்கு கண்டமோ அல்லது மரணமோ.
4. கேது நின்ற ராசிக்கு திரிகோணத்தில் (1-5-9ல்) சூரியன் வரும் காலங்களில் அரசியல் கட்சிகளில் பிளவு ஏற்படும்.
5. சிம்மம்-கும்பத்தில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க கும்ப ராசிக்கு கேந்திரத்தில் (கும்பத்திற்கு 1-4-7-10ல்) சனி வரும் காலங்களில் விமான விபத்துகள் (வானூர்திகள்) அதிகமாக நிகழும். நிலக்கரி சுரங்கங்கள், கச்சா எண்ணெய் சுரங்கங்களில் விபத்துக்கள் உண்டாகும். ஜென நாயக நாடுகளில் பிளவு உண்டாகும்.
6. மேசம்-துலாத்தில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க துலாம் ராசிக்கு கேந்திரத்தில் (துலாத்திற்கு 1-4-7-10ல்) சனி வரும் காலங்களில் விமான விபத்துகள் (வானூர்திகள்) அதிகமாக நிகழும். நிலக்கரி சுரங்கங்கள், கச்சா எண்ணெய் சுரங்களில் விபத்துக்கள் உண்டாகும். ஜென நாயக நாடுகளில் பிளவு.
7. கடகம்- மகரத்தில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க கடக ராசிக்கு கேந்திரத்தில் (கடகத்திற்கு 1-4-7-10ல்) சந்திரன் வரும் காலங்களில் உயர் பதவிகளில் உள்ள பெண்களுக்கு பலவிதமான பிரச்சினைகள் வரும். மன நோயாளிகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
8. கடகம்- மகரத்தில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க மகர ராசிக்கு கேந்திரத்தில் (மகரத்திற்கு 1-4-7-10ல்) செவ்வாய் வரும் காலங்களில் காவல் துறை, ராணுவம், விளையாட்டு போன்ற துறைகளில் குழப்பங்கள் வரும். உள் நாட்டு கலவரங்கள் அதிகமாக இருக்கும்.
9. ரிசபம்-விருச்சிகத்தில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க ரிசப ராசிக்கு கேந்திரத்தில் (ரிசபத்திற்கு 1-4-7-10ல்) சந்திரன் வரும் காலங்களில் மன நோயாளிகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
10. கடகம்- மகரத்தில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க மகர ராசிக்கு கேந்திரத்தில் (மகரத்திற்கு 1-4-7-10ல்) சனி வரும் காலங்களில் பல தொழில் நிறுவனங்கள் பிளவு படும். நாடு ,நகரங்களில் பிளவு உண்டாகும். பொது மக்களிடையே ஒற்றுமை இல்லாமல் பிரிவினை வாதம் தோன்றும்.
11. மேசம்-துலாம் ராசிகளில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க துலாம் ராசிக்கு கேந்திரத்தில் (துலாத்திற்கு 1-4-7-10ல்) சனி வரும் காலங்களில் ஜென நாயக நாடுகளில் பிளவு உண்டாகும்.பல தொழில் நிறுவனங்கள் பிளவு படும். நாடு ,நகரங்களில் பிளவு உண்டாகும். பொது மக்களிடையே ஒற்றுமை இல்லாமல் பிரிவினை வாதம் தோன்றும்.விமான விபத்துகள் (வானூர்திகள்) அதிகமாக நிகழும். நிலக்கரி சுரங்கங்கள், கச்சா எண்ணெய் சுரங்களில் விபத்துக்கள் உண்டாகும்.
12. மேசம்-துலாம் ராசிகளில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க மேச ராசிக்கு கேந்திரத்தில் (மேசத்திற்கு 1-4-7-10ல்) செவ்வாய் வரும் காலங்களில் காவல் துறை, ராணுவம், விளையாட்டு போன்ற துறைகளில் குழப்பங்கள் வரும். உள் நாட்டு கலவரங்கள் அதிகமாக இருக்கும்.
13. ரிசபம்-விருச்சிகத்தில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க விருச்சிக ராசிக்கு கேந்திரத்தில் (விருச்சிகத்திற்கு 1-4-7-10ல்) செவ்வாய் வரும் காலங்களில் காவல் துறை, ராணுவம், விளையாட்டு போன்ற துறைகளில் குழப்பங்கள் வரும். உள் நாட்டு கலவரங்கள் அதிகமாக இருக்கும்.
14. .மேசம்-துலாம் ராசிகளில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க துலாம் ராசிக்கு கேந்திரத்தில் (துலாத்திற்கு 1-4-7-10ல்) சுக்கிரன் வரும் காலங்களில் நிதி நிறுவனங்களுக்கு பிரச்சினைகள் உண்டாகும். கலைத்துறையினருக்கு பிரச்சினைகள் உண்டாகும்.
15. ரிசபம்-விருச்சிகத்தில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க ரிசப ராசிக்கு கேந்திரத்தில் (ரிசபத்திற்கு 1-4-7-10ல்) சுக்கிரன் வரும் காலங்களில் நிதி நிறுவனங்களுக்கு பிரச்சினைகள் உண்டாகும். கலைத்துறையினருக்கு பிரச்சினைகள் உண்டாகும்.
16. கன்னி-மீனத்தில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க மீன ராசிக்கு கேந்திரத்தில் (மீனத்திற்கு 1-4-7-10ல்) சுக்கிரன் வரும் காலங்களில் நிதி நிறுவனங்களுக்கு பிரச்சினைகள் உண்டாகும். கலைத்துறையினருக்கு பிரச்சினைகள் உண்டாகும்.
17. கன்னி-மீனத்தில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க மீன ராசிக்கு கேந்திரத்தில் (மீனத்திற்கு 1-4-7-10ல்) குரு வரும் காலங்களில் மதம் சம்பந்தமான சர்ச்சைகள் உருவாகும், மதங்களில் பிளவு உண்டாகும். மத வாதிகளிடையே கருத்து வேற்றுமை உண்டாகும்.
18. மிதுனம்-தனுசு ராசிகளில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க தனுசு ராசிக்கு கேந்திரத்தில் (தனுசு ராசிக்கு 1-4-7-10ல்) குரு வரும் காலங்களில் மதம் சம்பந்தமான சர்ச்சைகள் உருவாகும், மதங்களில் பிளவு உண்டாகும். மத வாதிகளிடையே கருத்து வேற்றுமை உண்டாகும்.
19. கடகம்-மகரத்தில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க கடக ராசிக்கு கேந்திரத்தில் (கடகத்திற்கு 1-4-7-10ல்) குரு வரும் காலங்களில் மதம் சம்பந்தமான சர்ச்சைகள் உருவாகும், மதங்களில் பிளவு உண்டாகும். மத வாதிகளிடையே கருத்து வேற்றுமை உண்டாகும்.
20. கன்னி-மீனத்தில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க கன்னி ராசிக்கு கேந்திரத்தில் (கன்னிக்கு 1-4-7-10ல்) புதன் வரும் காலங்களில் கல்வித்துறைக்கு பல சோதனைகள் வரும். கல்வி நிறுவனங்கள் மூடப்படும். பல வர்த்தக நிறுவனங்கள் செயலிழக்கும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சோதனையான காலம்.
21. மிதுனம்-தனுசு ராசிகளில் ராகு,கேதுக்கள் நின்றிருக்க மிதுன ராசிக்கு கேந்திரத்தில் (மிதுன ராசிக்கு 1-4-7-10ல்) புதன் வரும் காலங்களில் கல்வித்துறைக்கு பல சோதனைகள் வரும். கல்வி நிறுவனங்கள் மூடப்படும். பல வர்த்தக நிறுவனங்கள் செயலிழக்கும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சோதனையான காலம்.
No comments:
Post a Comment