குழந்தை பாக்கியம் தரும் பரிகார தலங்கள்
1 மகப்பேறு உண்டாகாமல் இருப்பதற்கு முன் வினையே காரணம் என்று கருடபுராணம் தெரிவிக்கிறது.
2. ஏழைக் குழந்தைகளுக்கு உடைகள், விளையாட்டு பொருட்கள், நூல்கள் வாங்கி கொடுத்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.
3. பாயாசம் செய்து நிவேதனப் பொருளாக வைத்துக் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.
4. பூஜை அறையில் ராமர் படம் இருப்பது சிறப்புடையது ஆகும்.
5. ராகு தோஷத்தினால் பிடிக்கப்பட்டுப் புத்திரபாக்கியம் இல்லாத தம்பதியினர் திருமணஞ்சேரித் தலத்திற்குச் சென்று அங்குள்ள சப்ர சாகர தீர்த்த்தில் நீராடி, அங்கு கோயில் கொண்டிருக்கும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து வழிபட்டால் ராகுவின் அருள்கிட்டும். நிவேதனத்தைச் சிறிது அருந்தினால் ராகு தோஷம் நீங்கப் பெற்றுப் புத்திரப்பேறு பெறுவர்.
6. `புத்ரதா' என்றழைக்கப்படும் தை மாத சுக்ல பட்ச ஏகாதசியன்று உபவாசம் இருந்து நாராயணனை வழிபட்டு மறுநாள் துவாதசி அன்று துவாதசிப் பாரணை செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.
7. புத்திர தோஷம் விரைவில் அகல குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியமாகும்.
8. சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வந்தால் குழந்தை பாக்கியம் வரும்.
9. வெள்ளியினால் செய்த நாகத்தைத் தானம் செய்தாலும் பலன் உண்டு.
10. கிருத்திகை விரதம் இடைவிடாது இருந்தால் புத்திரதோஷ நிவர்த்தி ஏற்பட்டு, புத்திர பாக்கியம் உண்டாகும்.
11. சஷ்டி, கிருத்திகை, செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை பக்தியுடன் பூஜை செய்ய புத்திர பாக்கியம் உண்டாகும்.
12. ஹரித்துவார் சென்று கங்கையில் நீராடி ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் புத்திர பாக்கியம் கைகூடும்.
13. ஒருமுறை காசிக்கு சென்று கங்கையில் நீராடி, உங்கள் கைகளினாலேயே கங்கை நீரைத் கொண்டு, காசி விஸ்வநாதருக்கு வில்வம் சேர்த்து கங்கா தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
14. தங்கள் மனைவியருடன் அமைந்துள்ள நவக்கிரக மூர்த்திகளை வழிபட்டால் திருமணம் கைகூடி உரிய காலத்தில் புத்திர பாக்கியம் ஏற்பட்டு இல்லற வாழ்க்கை இனி தாய் அமையும்.
15. பசு வளர்த்து அதற்கு சேவை செய்து வந்தால் உடனடியாக குழந்தை பாக்கியம் உண்டாகும்.
16. திருவாரூரில் இருந்து 24 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ராஜகோபாலப் பெருமாள் ஆலயம். இந்த பெருமாள் குழந்தை வடிவில் உள்ளதால் இவரை வழிப்பட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
17. சமயபுரம் மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். குழந்தை இல்லாதவர்கள் அங்கு சென்று சமயபுரத்தாளை வழிபட்டால் பலன் கிடைக்கும்.
18. மதுரை ராமநாதபுரம் சாலையில் உள்ள மடப்புரம் காளிக்கோயிலில் குழந்தை இல்லாத பெண்கள் தங்கள் சேலையைக் கிழித்து தொட்டில் கட்டினால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
19. ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமிக்கு அர்ச்சனை செய்து குழந்தை பாக்கியம் வேண்டும் என்று கேட்டு வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
20. குழந்தை இல்லாத குறையை நீக்க அரச மரமும், வேம்பும் சேர்ந்துள்ள ஆலயத்திற்கு காலை 7 மணிக்குள் சென்று 108 முறை 48 நாட்கள் சுற்றி வர குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த 48 நாளும் நல்லெண்ணை திரி போட்டு விளக்கு ஏற்றி வரவும்.
21. அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யாதவர்களுக்கு சந்ததிகள் உண்டாகாது. புத்திர தோஷம் ஏற்படும்.
22. வைகாசி விசாக நட்சத்திரத்து அன்று, பகல் உணவு அருந்தி, மாலை கோவில்களுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபடுவதால் புத்திர தோஷம், புத்திர சோகம் நீங்கி புத்திர பாக்கியம் கிடைக்கும்.
23. காலை மூன்று மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரம்ம முகூர்த்தம் என்று கூறுவார்கள். இந்த நேரத்தில் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு உடலில் அணிந்திருக்கும் துணி காயும் முன் அரச மரத்தைச் சுற்றத் தொடங்க வேண்டும். ஆண்கள் வலது பக்க மாகவும் பெண்கள் இடது பக்கமாகசுற்ற வேண்டும்.
No comments:
Post a Comment