ஆந்திர அறுபடை வீடுகள்!
முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ததை கந்தபுராணம் விரிவாகக் கூறுகிறது.
இந்த புராணச் சம்பவத்தை விளக்கும் வகையில் திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருப்பரங்குன்றம், திருவாவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை என்று ஆறுபடைவீடுகள் இருக்கின்றன அல்லவா?
இதே போன்று முருகப்பெருமான் தாரகாசுரன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்ததைக் குறிக்கும் வகையில் ஆந்திரப் பிரதேசத்தில் ஆறு திருத்தலங்கள் இருக்கின்றன.
தாரகாசுரன் கொடியவனாக இருந்த போதிலும் ராவணனைப் போன்றே சிவபக்தியில் மிகுந்த ஈடுபாடுகொண்டவனாக இருந்தான் அவன் தனது தொண்டையிலேயே அபூர்வமான சிவலிங்கத்தை வைத்து சிரத்தையுடன் பூஜித்து வந்தான். முருகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தபோது வேலாயுதம் அவன் தொண்டையில் பட்டதால், அதில் இருந்த சிவலிங்கம் பல துண்டுகளாகச் சிதறி விழுந்தது. அப்படி விழுந்த துண்டுகளே திருத்தலங்களாகி ஆராமக் கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அந்த ஆறு துண்டுகளும் முருகப் பெருமானால் சிவலிங்கங்களாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவை
அமராவதியில் உள்ள அமரராமம்,
சாமல் கோட்டில் உள்ள பீமராமம்,
அருகில் உள்ள திராக்ஷாராமம்,
கோடிப் பள்ளியில் உள்ள குமாரராமம்,
பாலக்கொல்லுவில் உள்ள க்ஷீரராமம்,
பீமாவரத்தில் உள்ள சோமராமம்
ஆகியவை. இங்கெல்லாம் சிவபெருமானே மூலவராக இருந்தாலும், திருமுருகனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது
No comments:
Post a Comment