தர்ப்பணம், சிராத்தம் தகவல்கள் !
1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களைஅணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.
2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில்தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.
3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிராத்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும்ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.
5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமானபூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமானபூஜைகளைச் செய்ய வேண்டும்.
6. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும்என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
7. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்ததண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.
8. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்ததண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்துஅவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள்என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
9. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிராத்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது.அகவே தவறாது சிராத்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.
10. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிராத்தம் செய்யவேண்டும்.
11. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்குமகிழ்ச்சியைக் கொடுக்கும்.
12. மன்வாதி யுகாதி நாட்களில் செய்யப்படும் புண்ணிய நதி நீராடல், ஜெபம், ஹோமம் ஆகியவை கூடுதல் பித்ரு புண்ணியத்தைத் தரும்.
13. தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும்ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.
14. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதிநாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4,அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
15. இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்ய வேண்டி நாள்தான்.
16. துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத்தரும். ஆகவே அதிக புண்ணி யங்களைத் தரும் தந்தையரின் சிராத்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.
17. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிராத்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும்சிவனும் கூறியுள்ளனர்.
18. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிராத்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்றுவடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காககாத்துக் கொண்டிருக்குமாம்.
19. முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிராத்தத்துக்கு பார்வணசிராத்தம் என்று பெயர்.
20. ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிராத்தம் சங்கல்ப சிராத்தம்எனப்படும்.
21. ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும்,சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிராத்தம் ஆம சிராத்தம் எனப்படும்.
22. சிராத்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வதுஹிரண்ய சிராத்தம் எனப்படும்.
23. சிராத்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.
24. சிராத்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய்யும் நேரம், சிராத்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிராத்தத்தில்உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிராத்தத்துக்கு முக்கியமானவை. இவைகள் தூய்மையானவைகளாகஇருந்தால் சிராத்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.
25. பித்ருக்களை சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிராத்தம் செய்து அவர்களுக்குஉணவளித்து, அவர்களை திருப்தி செய்தால் அவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ், உடல் வலிமை,செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை தருகிறார்கள்.
26. நமது பித்ருக்களிடத்தில் சிராத்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிராத்தத்தில் வாங்கித்தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிராத்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பியபலன் கைகூடும்.
27. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிராத்த உணவு அவரவர்களின்பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான்மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும்தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.
28. பெற்றோர்களின் வருஷ சிராத்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷசிராத்தத்தைச் செய்ய வேண்டும்.
29. அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்தைசெய்ய வேண்டும்.
30. பெற்றோர்களின் வருஷாந்தர சிராத்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதிதர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.
31. தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிராத்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில்வருஷசிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.
32. தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிராத்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிராத்தம் செய்ய வேண்டும்.பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.
33. பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டுவிட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.
34. இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர்வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள்.
35. சிராத்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
36. உடல் நிலை சரியில்லா தவர்கள் அருகில் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு சிராத்தம் செய்ய வேண்டும்.
37. நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும்,செல்வமும் நமக்கு கிடைக்கும்.
38. மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெறவேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிராத்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால்பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.
39. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத் தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பாவகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள்.சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.
40. “மக்களுக்கு தொண்டாற்றி, சுயநலமின்றி அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ருலோகம் அடைகின்றனர் என்பதைகருடபுராணம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.
41. “நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம்,பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.”
42. கார்த்திகை மாதம் உத்திராயண புண்ணியகாலம் சுக்ல பட்சம், பவுர்ணமி திதியில் தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம்(தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம்.
43. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்தமரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.
44. பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்அளவும் சந்தேகம்கிடையாது.
45. ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும்போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமைமாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும்.
46. வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மைஅளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.
47. சாஸ்திரப்படி, சிராத்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக் கூடாது.
48. சிராத்தம் செய்யக்கூடியவர் முதல் நாள் முகச்சவரம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது, மனைவியுடன் சேர்ந்துஉறங்கக் கூடாது, பிரஷ் கொண்டு பல் தேய்ப்பதும், வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.
49. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக, மிகமுக்கியம்.
50. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.
51. திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம்,சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.
52. சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டுஇறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.
53. மஹாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை நினைத்து மனதார வணங்கினால் சகலசவுபாக்கியங்களும் தேடி வரும்.
54. மாகளாய பட்சத்தின் 16 நாட்களும் சிராத்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும்.
55. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அற்றை நன்குதெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
56. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்றுபலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும்.அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.
57. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மஹாளய சிராத்தம் செய்வது மிக முக்கியம்.
58. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.
59. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி,திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.
60. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாககருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஸ்ரார்த்தம் -சில விதிமுறைகள்
மிகவும் தேவையான ஒன்று!
உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு / ஸ்ரார்த்தம் செய்பவர்களுக்கு இந்த விதி முறைகளை அனுப்பவும்.
பலன் ஏற்படுத்திக் கொடுக்கலாமே! விதி முறைகள் தெரியாதவர் பலபேர் என்பதை நாம் உணர வேண்டும்!
ஸ்ரார்த்தம் - சில விதிமுறைகள்
ஸ்ரீ பரமாச்சாரியார் கூறியபடி - ஸ்ரார்த்தம் - சில விதிமுறைகள் -
இதோ உங்களுக்காக...
ஒவ்வொரு சாஸ்திரத்தை ஏற்படுத்தியவருக்கும் ஆச்சாரியர் என்று பெயர். ஆச்சாரியர் என்பவர் சாஸ்திர அர்த்தங்களை பிறருக்கு விளக்கிக் கூறி, தானும் அவைகளின்படி செயல்பட்டு மற்றவர்களையும் அந்த ஆசாரங்களில் நிலை நிற்கச் செய்பவர்.
ஸ்ரீ பரமாச்சாரியார் நம்முடைய கர்மாக்களைக் கடவுளுக்கு அர்பணம் செய்வதன் மூலம் சித்த சுத்தி ஏற்பட்டு, வாழ்க்கையின் ஒரே குறிக்கோளான கடவுளை அறிவதற்கு வழி காணலாம்.
முன்னோர்களுக்குக் குறிப்பிட்ட திதி, அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரையில் ஸ்ரார்த்தம் செய்வார்கள்.
காரணமில்லாமல் எந்த வழிபாட்டையும் நம் முன்னோர் உருவாக்கவில்லை.
இது ஸ்ரத்தை என்ற சொல்லில் இருந்து உருவானது.
தந்தையை நினைவுகூர்ந்து ஒரு மகன் இதைச் செய்கிறான்.
இதை அவனுடைய மகன் பார்க்கிறான்.
ஓ... நம் தந்தை அவரது தந்தையை இறந்த பிறகும் மதிக்கிறார்.
அப்படியானால் உயிரோடிருக்கும் இவரை எந்த அளவுக்கு மதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றும்.
இதனால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்.
சிரார்த்தம் என்ற வார்த்தைக்கு சிரத்தையுடன் மன ஒருமைப்பாட்டுடன் செய்யும் காரியம் என்பது பொருளாகும்.
சிரார்த்தம் என்பது முன்னொர்களை வழிபடல், முதியோரை மதித்தல், தன் பிறவிக்கும், வம்சத்திற்கும் முதல்வர்கள் ஆனவர்களைப் போற்றுதல் -- இது சிரார்த்தம் என்பதற்கான வெளிப்படையான பொருள்.
ஆர்வமில்லாமல் செய்யப்படும் எதுவும் அது தவமாக இருந்தாலும் கூட எந்தப் பயனும் இல்லை என்று கீதை சொல்லுவதும் சிரார்த்ததின் முக்கியதுவத்தை உணர்ந்தேயாகும்.
நன்மை தரக்கூடிய சிரார்த்தம் தர்பபணம் முதலிய பித்ரு காரியங்கள் யாரை உத்தேசித்து செய்கிறோமோ அவர் பித்ரு உலகில் இருக்கலாம்.
அல்லது தேவ உலகில் இருக்கலாம்.
ஏன் மனித உலகில் நமக்குப் பக்கத்திலலேயே கூட இருக்கலாம்.
அவர்களின் நிலை தாழ்ந்ததாகவோ உயர்ந்ததாகவோ இருக்கலாம்.
நமது முன்னோர்களான அவர்களுக்கு நம்மால் செய்யப்படும் சிரார்த்தம் அவர் உயர்ந்த நிலையில் இருந்தால் ஆசியாக நமக்குக் கிடைக்கும்.
தாழ்ந்த நிலையில் இருந்தால் அவரின் நிலை உயர உதவும்.
மறுபிறப்பு எடுத்திருந்தால் அவர்களின் இக உலகத் துன்பம் தீர உதவும்.
அதாவது, பித்ரு காரியங்களை ஒவ்வொருவரும் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறார்.
ஆயுள் முடிந்து போன நமது முன்னோர்கள் பரவுலகத்தில் அல்லது பித்ரு உலகத்தில் வாழ்கிறார்கள்.
அவர்கள் வசு மித்திரர்கள், ஆதித்யர்கள் என்ற பிரிவில் அடங்குவார்கள்.
உடல் அழிந்தாலும் பிரேத நிலையில் குறிப்பிட்ட காலம் இருந்து தங்களது வாரிசுகள் செய்யும் நற்கர்மங்களால் பிரேத தோஷம் நீங்கப் பெற்றுத் தங்களது பூரண அன்பையும் நம் மீது காட்டலாம்.
இறந்து போன ஒருவருக்காக அவரது மைந்தன், பேரன், சகோதரன் முதலானோர்களும் அவர்களின் சுய கோத்திரத்தில் பிறந்த ஏழு தலைமுறையினரும் கோத்திரம் மாறிய பெண்வழி வாரிசுகளும் சிரர்த்தம் செய்யலாம்.
நித்தியம், நைநித்தியம், காமிகம் என சிரார்த்தம் மூவகைப்படும். மாத அமாவாசையில் செய்கின்ற தர்ஸ்ர சிரார்த்தம், மகாளய பட்சத்தில் செய்யும் ஆத்திக, பிராத்தாதிக சிரார்த்தம், தினசரி செய்கின்ற பிரம்ம யக்ஷ தேவர்ஷ, பித்ருதர்ப்பண பித்ரு க்ரியம் முதலியவை நித்ய சிரார்த்த வகையாகும்.
மாதப் பிறப்பு, கிரகணம் முதலிய புண்ணிய காலங்களில் செய்கின்ற தர்ப்பணம், விவாகம் மற்றும் சுப காரியம் நிகழும் போது செய்யப்படும் மாத்திமுக சிரர்த்தம்,
சௌவுடிககரணத்தன்று செய்யும் ரகோத்தரம் பார்வன சிரார்த்தம்,
பூன மாசி, காணு மாசிகங்கள் சோத கும்பக முதலியவைகள் நைநித்திக சிரார்த்தம் ஆகும்.
வருடப்பிறப்பு, புனித யாத்திரை, புண்ணிய தீர்த்த கரைகள் போன்றவற்றில் செய்யப்படுவது காமிக சிரார்த்தமாகும்.
நாம் செய்யும் சிரார்த்தத்தின் ஆத்ம அர்ப்பணிப்பை அஷ்ட வசுக்கள் ஏகாதசருத்தரர்கள் துவாதச ஆதித்தர்கள் போன்ற தெய்வங்கள் நமது முன்னோர்களிடத்தில் கொண்டு சேர்க்கிறார்கள்.
சிரார்த்தம் செய்வதற்கு இறப்பு ஏற்பட்ட நேரத்தில் நடைமுறையில் இருந்த திதி மிகவும் முக்கியம்.
திதி மறந்து விட்டால் தேய்பிறை கால அஷ்டமி, ஏகாதசி, அமாவாஸ்யை போன்ற நேரங்களில் செய்யலாம்.
இல்லையென்றால் கன்னியாராசியில் சூரியன் முளையும் நேரத்தில் தேய்பிறைப் பொழுதை மகாளயபட்சம் என அழைக்கிறார்கள்.
அன்றும் செய்யலாம்.
இந்த நாளில் பிதுர் உலக வாசிகள் பூமிக்கு வருவதாக ஐதீகம் உள்ளது.
முறைப்படியான சிரர்த்தங்களை செய்து வந்தாலும் மகாளயபட்ச சிரார்த்தம் செய்வது மிகவும் சிறப்பாகும்.
பல காலச் சூழலால் புரோகிதர்களை வைத்து அந்தப் பொழுதில் சிரார்த்தம் செய்ய இயலாத நிலை இருந்தால் முன்னோர்களை ஆத்மார்த்தமாக மனதில் பிராத்தனை செய்து நீர்நிலைகளில் உள்ள மீன்களுக்கு அன்னமோ ஒரு படி பொரியோ அர்ப்பணித்தால் கூட அதை நமது தென்புலத்தாராகிய முன்னோர்கள் மனமகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால் செத்தவர்களை நினைத்து என்ன ஆகப் போகிறது என்று பலர் சிரார்த்தத்தை அசட்டைசெய்கிறார்கள்.
இது நன்றி கெட்டதனம்.
சிலர், தாத்தா சொத்து மட்டும் வேண்டும், ஆனால் ஸ்ரார்த்தம் செய்யமாட்டேன் என்கிறார்கள்.
அது தவறுதான்.
எப்படி ஒரு சாட்டிலைட் மூலமாக நாம் தொலைக்காட்சிப் பெட்டிகளின் அலைவரிசையை இயக்குவது போல் நாமும் முன்னோர்கள் என்ற சாட்டிலைட் மூலமாக நாம் நம் வம்சத்தை அழகாக டூன் செய்யும்போது எந்த வித பாதிப்பும் வராமல் இருக்கும் ஸ்ரார்த்தம் செய்யும்போது.
இதை மாசா மாசம் தர்ப்பணம், வருடத்திற்கு திவசம் செய்யும்போது நம் மனதும் அவர்களை நினைத்து வழிபடும்போது, அவர்கள் கூடவே இருப்பது போல் ஒரு உணர்வு ஏற்படும்.
இதை வியாபார நோக்கோடு செய்யாமல், உணர்வு சம்பந்தமானது என்று புரிந்து செயல் பட்டால் அதுவே நம் முன்னோர்களின் ஆசிர்வாதமாக இருக்கும்.
நம்மில் பெரும்பாலோர் ஒவ்வொரு வருஷமும் அவரவர்களுக்குச் சரி என்று தோன்றும் வகையில் ஸ்ரார்தத்தை விடாமல் செய்து வருகிறோம்.
இன்னும் சிலரோ மிகவும் உத்தமமான முறையில் ஸ்ரார்தத்தைக் கடைபிடித்து வருகிறார்கள்.
இருந்தாலும், பல காரணங்களினாலும், இன்றைய விபரீதமான சிந்தனைக் குவியலின் நடுவில் நாம் சிக்கிக் கொண்டிருப்பதினாலும், ஸ்ரார்தத்தில் பல விஷயங்கள் நம்மை விட்டு மறைந்திருக்கலாம்.
மறந்தும் இருக்கலாம்.
அவற்றை அப்பேர்பட்டவர்களுக்கு ஞாபகபடுத்தவே, இந்தத் தொகுப்பு.
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு Extracts from a Book:
பரலோகம், பித்ருலோகம், பித்ரு கர்மா நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
பரலோகம் உண்டு.
பித்ருலோகம் உண்டு.
அங்கு பித்ருக்கள் வசிக்கின்றனர்.
நம் முன்னோர்கள் உடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில காலம் இருந்து தங்கள் செய்த நற்கர்மங்களின் பயனாகவும், பின் சந்ததிகள் செய்யும் பித்ரு காரியங்களின் பயனாகவும் பிரேத நலை நீங்கியவராய் பித்ரு லோகத்தில் இடம் பெற்றவராக விளங்குகின்றனர்.
பித்ருக்களை உத்தேசித்து செய்யும் கர்மாவே ஸ்ரார்த்தம்.
நாம் செய்யும் முக்கியமான கர்மாக்களில் ஸ்ரார்த்தமும் ஒன்று.
நமது முன்னோர்கள் தெய்வங்களுக்குச் செய்யும் பூஜைகளை விட ஸ்ரார்தத்தை மிக பயபக்தியுடனும் ஆசாரத்துடனும் செய்து வந்திருக்கிறார்கள்.
மஞ்சள் துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்து விட்டுப் பிறகு நிதானமாக முடிந்த போது தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றலாம்.
ஆனால் ச்ரார்த்தம் அவ்வாறல்ல என்று ப்ருஹ்மஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் அடிக்கடி குறிப்பிடுவார்.
குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டபடி ச்ரார்த்தம் செய்தே ஆக வேண்டும்.
யாருக்கெல்லாம் திருப்தி? ஸ்ரார்த்தம் செய்வதினால்:
1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்.
2. அவர்களுக்குத் துணை வருகின்ற விஸ்வே-தேவர்கள் என்ற தேவப்பிரிவினர்.
3. ஹோமத்தில் பாகம் பெருகின்ற அக்னி பகவான்.
4. எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்றதேவர்கள்.
5. பிண்டப்ரதானத்தினாலும், விகிரான்னத்தினாலும் வேறு வழியில் திருப்தி பெறவாய்ப்பில்லாத நரகத்தில் இருப்பவர்களுக்கும்.
6. பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவரும்.
இவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் எனப் பலர் நாம் செய்யும் ஸ்ரார்த்ததில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர்.
பித்ருக்களின் அனுக்ரஹம் நமது பித்ருக்கள் இருந்தார்கள்.
செத்து விட்டார்கள்.
இப்பொழுது இல்லை என்று முடித்து விடாமல் அவர்கள் இப்போதும் இருக்கின்றனர்.
அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும்.
அவர்கள் தெய்வாம்சம் உடையவர்களாக இருப்பதால், நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியும்.
தேவர்களைப் போலவே அவர்கள் நமக்கு அனுக்ரஹம் செய்வார்கள்.
அவர்கள் எப்போதும் இனிமையானவர்கள்.
க்ரூரமானவர்கள் அல்ல.
தனது கோத்ரத்தில் வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள்.
பித்ருக்கள் திருப்தி அடைவதன் பயனாக ஸ்ரார்த்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்சவ்ருத்தி, ஆரோக்யம், ஞானம், இம்மை-மறுமையில் மேன்மை கிடைக்கின்றன.
பித்ரு சாபம் நாம் கடமையிலிருந்து தவறக் கூடாது.
வாத்தியாரைக் குறை சோல்லுவதும், சாக்குப்போக்குகளைத் தேடிக் கண்டுபிடிப்பதும் இப்போது அதிகமாகி வருகின்றது.
இதைக் கைவிட வேண்டும்.
யாரிடம்தான் குறையில்லை.
ச்ரார்தத்தை எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும்.
ச்ரார்தத்தை செய்யாதவன் நன்றி கெட்டவன்.
இதில் சந்தேகமே வேண்டாம்.
குதர்கக வாதம் கூடாது. ச்ரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக்கூற அபிப்ராயமில்லை.
சுருக்கமாக பித்ருசாபத்திற்கு அப்பேர்பட்டவர்கள் ஆளாகலாம் என்பதை மட்டுமாவது ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நல்லது.
பித்ருக்கள் சாபமிடுவார்களா என்று நினைக்க வேண்டாம்.
பித்ருக்கள் கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே, நமக்கு தோஷம் ஏற்படும்.
பெற்ற சீரையும் செல்வத்தையும் இழந்து துன்புறவும் நேரலாம். வம்சவிருத்தி பாதிக்கலாம்.
மந்திரங்கள் ஸ்ரார்த்தம் செய்யும்போது மந்திரங்களை சாஸ்திரிகள் அக்ஷர சுத்தத்துடனும், ஸ்வரத்துடனும் சொல்லி வைப்பது முக்கியம்.
அதே மாதிரி கர்த்தா கூடியமானவரையில, அப்யாசம் இல்லாவிட்டாலும், சரியாக திருப்பி சொல்ல முயற்சி செய்வதும் மிகவும் அவசியம்.
சிரத்தையுடன் ஸ்ரார்த்தம் செய்வதை முக்கிய கர்மாவாக வைதீக கர்மாக்களில் குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரார்த்த இறுதிக் கட்டத்தில் சிரார்த்த பிராஹ்மணர்களிடம் கர்த்தா மந்திர ரூபமாக வேண்டுவது என்ன தெரியுமா?
நாங்கள் ஒருவரையும் யாசியோம். யாசிப்பவர்களுக்கு நிறைய நாங்கள் தர வேண்டும்.
எங்களது ஸ்ரத்தை எங்களிடமிருந்து விலகக் கூடாது.
வேதமும், குலமும் எப்போதும் அறுபடாமல் பெருகட்டும்,
உணவு நிறைய கிடைக்க வேண்டும்.
அதிதிகளும் நிறைய எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று அவர்களிடம் கோரி ஆசி பெறுகின்றோம்.
இந்த மாதிரி அர்த்த புஷ்டியுள்ள மந்திரங்களை நாம் சரியாக உச்சரிப்பதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்க வாய்ப்புண்டு.
நினைத்துப் பாருங்கள்.
ஸ்ரார்த்த நியமம் இரண்டாவது ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் இறந்த அதே மாதம், திதி கூடிய தினத்தில் செய்வதே ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தம்.
ஸ்ரார்த்ததில் ஸ்ரத்தை மிகமிக முக்கியம். கர்த்தா ஸ்ரார்த்த மாதம் அலல்து ஸ்ரார்த்த பக்ஷம் முழுவதும் நிபமத்துடன் இருக்க வேண்டும்.
அதுவும் முடியாவிட்டால் குறைந்த பக்ஷம் முன் 3 நாளாவது நிபமத்துடன் இருக்க வேண்டும்.
நியமம் என்றால் அந்த நாட்களில் வெளியில் சாப்பிடுவதாக இருந்தால் சகோதரர், குரு, மாமா, மாமியார் வீட்டில் அல்லாது மற்ற இடங்களில் சாப்பிடக் கூடாது.
வபனம் [க்ஷவரம்] அப்யங்கம் [எண்ணை தேய்த்துக் குளித்தல்] ஸ்த்ரீ ஸங்கமம் முதலியவை கூடாது.
ஸ்ரார்த்தம் செய்யும் முறை இன்றைய நவீன ஆடம்பரமான சூழ்நிலையில் நாம் புதுப்புது வழக்கங்களுக்கும் நாகரீகம் என்ற பெயரில் புதுப்புது பழக்கங்களுக்கும், பல நேரங்களில் மற்றவர்களைப் பர்த்துப் பார்த்து நாமும் ஆகர்ஷணமாகி, நமக்குத் தேவையா என்று கேட்காமலேயே அவைகளுக்கு அடிமையாகி விடுகின்றோம்.
இதன் நடுவில் ஸ்ரார்த்ததிற்கு அவகாசம் பலருக்கு இருப்பதில்லை என்றாலும் மனமிருந்தால் மார்க்கம் கிடைக்கும்.
விதிப்படி, ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்.
வசதியும், சிரத்தையும் உள்ளவர்கள் ஸ்ரார்தத்தில் கீழ்க்கண்ட அம்சங்களைக் குறைந்தது கடைபிடிக்க வேண்டும்.
வசதி இருப்பது என்பது முக்கியமல்லவா?
குருடனைப் பார்த்து ராஜமுழி முழிக்க வேண்டும் என்றால் எவ்வாறு சாத்தியம்.
வசதி இல்லாதவர்களுக்கு எந்த தோஷமும் வராது.
சாதாரண உத்யோகத்தில் பணிபுரியும் ஒருவர் வருஷத்தில் இரண்டு ஸ்ரார்த்தம் செய்வதாக இருந்தால், குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய் செலவாகும்.
இது அப்பேர்ப்பட்டவர்க்கு ச்ரமம்தான்.
குறைவான வருமானத்தில் வாழ்பவர் ஸ்ரார்த்ததை சுறுக்கிச் செய்தால் தோஷம் ஏற்படாது.
எந்த வருமானமும் சரியாக இல்லாதவர்கள் ஹிரண்யமாகவும் ஸ்ரார்த்ததை செய்யலாம்.
[அரிசி, வாழைக்காய், தக்ஷணை மட்டும் அளிப்பது.
ஆனால் வசதி இருப்பவர்கள் ஸ்ரார்தத்தை ஏனோதானோ என்று செய்தால் தோஷம் ஏற்படும்.
சந்தேகமில்லை.
வசதி இருப்பவர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய அம்சங்களைக் கீழே பார்போம்:
1. பார்வணம் [ஹோமம்].
2. தூய்மையான, ருசியான, சூடான சமையல்.
3. ப்ராம்ஹணாளுக்கு ஆசாரியனுக்கும் வஸ்த்ரம்.
4. போஜனத்திற்குப் பிறகு ப்ராம்ஹணாளுக்கு தக்ஷிணை.
5. ஆசாரியனுக்கு [பண்ணிவைக்கும் சாஸ்திரிகளுக்கு] சம்பாவனை [அவருக்கும் எல்லா தானப் பொருட்களும்].
வெள்ளியில் ஏதாவது பொருளும், வெண்பட்டும் வழங்கினால் மிகவும் விசேஷம்.
வழங்கும் சாமான்கள் நல்லதகவும், தரமானதாகவும் இருத்தல் முக்கியமானது.
ஏனோதானோவென்று வழங்கக் கூடாது. [உதாரண்த்திற்கு வாழைக்காய் கொடுப்பதாக இருந்தாலும் அது பெரியதாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும்].
வசதியும், மனோபாவமும் உணவு தயாரிக்க இயலாத நிலையிலும் ஸங்கல்பம் செய்து பூர்ண உணவிற்குத் தேவையானதைவிட அதிகமான அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறி, வஸ்த்ரம், தக்ஷிணையுடன் தர வேண்டும் என்பது விதி.
இந்த மாதிரி செய்ய முடியாத போது, ஹிரண்ய ஸ்ரார்த்தமாகச் செய்யலாம்.
அதுவும் முடியாதவர்கள், பசுவிற்குப் புல் தரலாம்.
ஸ்நானம் செய்து முறைப்படி தர்ப்பணம் செய்யலாம்.
ஸ்ரார்த்த மந்திரங்களை ஜபிக்கலாம்.
அன்று முழுவதும் உபவாசமிருக்க வேண்டும்.
வசதி உள்ளவன் இந்த மாற்று முறைகளைச் செய்தால் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும்.
வினோதமான வாதம் ஒன்று இப்போது சிலரால் சொல்லப்பட்டு வருகின்றது.
நல்ல வசதி இருப்பவர்கள்கூட வஸ்திரம் வாங்குவது எங்கள் ஆத்து பழக்கமில்லை என்று கூறுவதுதான் அது முன்னோர்கள், பாவம் ஒரு வேளை வசதி இல்லாமல் வாங்காமல் இருக்கலாம்.
அதை நாம் இன்று கூறித் தப்பித்துக்கொள்வது அசட்டுத்தனம் அல்லவா?
டிவி, ஏசி, ஸ்கூட்டர், கார், கம்ப்யூட்டர், செல்போன் போன்றவைகளைக் கூடத்தான் முன்னோர்கள் உபயோகப்படுத்தவில்லை.
இவர்கள் இதையெல்லாம் எங்கள் ஆத்துப் பழக்கமிலை என்று விட்டு வைத்தார்களா? புதுப்புது பழக்கங்களும் வாழ்க்கை முறைகளுக்கும் தேவையா என்று யோசிக்காமலேயே மற்றவர்களைப் பார்த்து நாம் அவைகளுக்கு அடிமையாகி விடுகின்றோம்.
ஆசார நியமங்களுக்கும் அனுஷ்டானத்திற்கும் விதண்டாவாதம் கூடாது.
கூடியமான வரயில் சாஸ்த்ரங்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சற்றுக் காது கொடுத்துக் கேட்பது நல்லது.
அப்படிக் கேட்போமாகில் பிறகு பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்காது.
ஸ்த்ரீகள் இன்னொரு விஷயத்தையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.
கர்த்தாவின் மனைவியின் ஒத்துழைப்பு ஸ்ரார்த்தத்தில் மிகவும் அவசியம்.
இது இருந்துவிட்டால் கர்மா நன்கு நடக்குமென்பதில் சந்தேகமில்லை.
கர்மா சரிவர நடைபெற ஒத்துழைப்பதினால் அந்த ஸ்த்ரீகளுக்கும் பல சௌபாக்கியங்கள் ஏற்படுவதோடு இஹபர நன்மைகள் எண்ணற்றவை ஏற்படும்.
புருஷர்களிடம் ச்ரத்தை கம்மியாக இருந்தாலும், மனைவிகள் வற்புறுத்தத்தினால் ஸ்ரார்த்தம் நடைபெருவதையும் நாம் இல்லங்களில் பார்க்கின்றோம்.
மொத்ததில் எல்லா வதிக கர்மாக்களும் நன்கு நடைபெற வேண்டுமென்றால். புருஷர்கள் நினைத்தால் மட்டும் போதாது.
பொம்மானாட்டிகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். நமது தர்மத்தில் ஸ்திரீகளின் இடம் மகத்தானது.
புத்திரர்கள் சேர்ந்து செய்யலாமா? பங்கு பிரிக்கப்பட்டிருந்தாலும், பிரிக்கப்படாமல் தனித்தனியாகக் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாலும் தனித்தே ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்.
எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தால் தனித்தனி ஸ்ரார்த்தம் தேவையில்லை.
தனித்தனியே வாழ்ந்துகொண்டு ஸ்ரார்த்தத் தினத்தன்று ஒன்று சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக இருந்தால் அதே சிறப்பு.
No comments:
Post a Comment