Monday, 28 December 2015

சூரிய நமஸ்காரம்

# சூரிய நமஸ்காரம்:
------------------

எந்த ஒரு ஆசனம் செய்வதற்கு முன்பும் சூரிய
நமஸ்காரம் செய்வது மிகவும் முக்கியம்.

சூரிய நமஸ்காரம் என்பது மந்திரமும்
ஆசனமும் சேர்ந்த ஒரு அபூர்வ அதிசக்தி
அளிக்கும் படைப்பாகும். உடல் சிறப்புற
சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தில் 10
வகையில் உடல் நிலைகளை வைக்கும்
ஆசனங்கள் உள்ளன. சூரிய நமஸ்காரம்
செய்தபின் இயல்பான மூச்சு வரும் வரை
ஓய்வெடுக்க வேண்டும். அதன் பின்னரே மற்ற
ஆசனங்கள் செய்ய வேண்டும்.....

சூரிய நமஸ்காரம் செய்யும் முறை:

நிலை: 1
--------
சூரியனைப் பார்தபடி, பாதங்களும்
முழங்கால்களும் சேர்த்துப் படத்தில் உள்ளபடி
நிமிர்ந்து மார்பை சற்றே முன்னே தள்ளி,
வயிற்றை உள்ளுக்குள் இழுத்து நிற்கவும்.

இப்பொழுது உடல் முழுவதும் குறிப்பாக
இடுப்புப் பகுதியை விறைப்பாக வைத்து
முன்னோக்கிப் பார்த்தபடி இறுத்தல் வேண்டும்.

சுவாச நிலை: ஆழ்ந்த இயல்பான சுவாச
நிலை.

இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1. மார்பு நன்றாக விரிவடையும்.
2. கைகளை இறுக்கி அழுத்துவதால் கைகள்
உருண்டு தரளுகிறது.
3.பின் முதுகு இறுக்கம் பெருகிறது.

நிலை: 2
--------
செய்யும் முறை:
படத்தில் காட்டியவாறு இடுப்பை முடிந்த
அளவு வளைத்து நிற்க வேண்டும்.

சுவாச நிலை: கண்டிப்பாக மூச்சை நன்றாக
இழுத்து நிறுத்திய பின் இந்த நிலைக்கு
வரவேண்டும்.

இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.தோள்பட்டை வலிமைபெருகிறது.
2.இடுப்பு பகுதி கொழுப்புகள்
கரைக்கப்படுகிறது.
3.பின் முதுகு இறுக்கம் பெற்று
வலிமைபெருகிறது.
4. வயிற்பகுதி நன்கு விரிவடைவதால் வயிறு
தொங்குவது தடுக்கபடுகிறது.

நிலை: 3
--------
செய்யும் முறை:
படத்தில் காட்டியவாறு இடுப்பை முடிந்த
அளவு வளைத்து தரையை தொட
முயற்சிக்கவும். கையின் முழுபகுதி தரையில்
தொட்டு மூக்கு மெட்டியை தொடவேண்டும்.
(முடிந்த அளவு 1 அல்லது 2 முறை
முயற்சிக்கவும் நாளடைவில் எளிதாகி விடும்).

இந்த நிலையில் கையை எப்படி தரையை
தொட்டுளிர்களோ இதே நிலையில் கை கடைசி
( நிலை:10) வரை இறுக்க வேண்டும.

சுவாச நிலை:
கண்டிப்பாக மூச்சை முழுமையாக வெளியே
விட்ட பின் இந்த நிலைக்கு வரவேண்டும்.

இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.உடலின் நரம்புகள் நன்றாக
இழுக்கப்படுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
2.முன்கை (four arm) 3.பின்தொடை
4.முன்தொடை 5.ஆடுதசை (calf)
6.பின்முதுகு

நிலை: 4
---------
செய்யும் முறை:
படத்தில் காட்டியவாறு நிலை: 3 ல் இருந்து
கையை எடுக்காமல் ஒருகாலை மட்டும்
முடிந்த அளவு பின்னோக்கி தள்ளவேண்டும்.
தலையை நிமித்து வானத்தை பார்க்க
வேண்டும்.

சுவாச நிலை:
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து கொண்டு இந்த
நிலையை செய்யவேண்டும் (இந்த நிலையை
எளிதாக செய்பவர்கள் சாதாரண மூச்சை
விட்டுக்கொள்ளலாம்).

இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.வயிற்றிலிருந்து குதிக்கால் வரை உள்ள
அனைத்து பிரச்சனைகளும் போக்கும்.
2.தோள்பட்டை வலிமைபெருகிறது.
3.பின்தொடை 4.முன்தொடை

நிலை: 5
--------
செய்யும் முறை:
படத்தில் காட்டியவாறு நிலை: 4 ல்
மடிக்கப்பட்டிருக்கும் காலை மட்டும்
பின்னோக்கி தள்ளவேண்டும். அடுத்து
தலையை நிமித்து வானத்தை பார்க்க
வேண்டும்.

சுவாச நிலை:
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி கொள்ள
வேண்டும்.

இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.வயிற்றிலிருக்கும் தேவையற்ற கொழுப்புகள்
கரைக்கப்படுகிறது.
2. தொந்தி விழுவதை தடுக்கிறது.

நிலை: 6
--------
செய்யும் முறை:
படத்தில் காட்டியவாறு மார்பின் மேல்
முகவைக் கட்டை தொடும்படி இருக்க
வேண்டும். மார்பின் அடி பாகம் தரையை
தொட்டிருக்க வேண்டும். வயிறு தரையை
தொடக் கூடாது.இதில் 1.கால் விரல்கள்,
2.முழங்கால் முட்டிகள், 3.கைகள், 4.மார்பு,
5.மூக்கு, இவை மட்டுமே தரையை
தொட்டிருக்க வேண்டும்.

சுவாச நிலை:
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி கொள்ள
வேண்டும்.

இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.மார்பு நன்றாக விரிவடைகிறது.
2.தோள்பட்டை வலிமைபெருகிறது.
3.கையின் பின்புற(arm triceps)தோற்றம்
அழகு பெருகிறது
4.தொந்தி விழுவதை தடுக்கிறது

நிலை:7
-------
செய்யும் முறை:
படத்தில் காட்டியவாறு கைகளை அழுத்தி
இடுப்பின் மேல் உள்ள உடலை முடிந்த அளவு
பின்னோக்கி தள்ளவும். தலையை நிமித்து
வானத்தை பார்க்க வேண்டும்.

சுவாச நிலை:
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி கொள்ள
வேண்டும்.

இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.கையின் பின்புற(arm triceps)தோற்றம்
அழகு பெருகிறது.
2.மார்பு நன்றாக விரிவடைகிறது.
3.வயிறு உள்ளவர்களுக்கு முக்கியப் பயிற்சி
(தொந்தி விழுவதை தடுக்கிறது)
4.பின் முதுகு தோற்றம் அழகு பெருகிறது.

நிலை:8
--------
செய்யும் முறை:
படத்தில் காட்டியவாறு கைகளை அழுத்தி
இடுப்பின் மேல் உள்ள உடலை முடிந்த அளவு
மேல் நோக்கி இழுக்கவும். முழங்கால் முட்டி
பார்க்க வேண்டும்.

சுவாச நிலை:
மூச்சை முழுமையாக வெளியே விட்ட பின்
இந்த நிலைக்கு வரவேண்டும்.

இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.வயிற்றிலிருக்கும் தேவையற்ற கொழுப்புகள்
கரைக்கப்படுகிறது.
2.தோள்பட்டை வலிமைபெருகிறது.
3.பின்தொடை 4.முன்தொடை 5.ஆடுதசை
(calf) வலிமைபெருகிறது.

நிலை: 9
--------
செய்யும் முறை:
நிலை 4 ல் காட்டி உள்ள வாரே செய்தல்
வேண்டும் ஆனால் (நிலை 4)அதில் எந்த
காலை பின் இழுதிர்களோ அந்த காலை இந்த
நிலையில் (நிலை 9)முன் இழுக்க வேண்டும்.

சுவாச நிலை: மற்றும் இதனால் வலிமை
பெரும் உறுப்புகள் நிலை 4 ல் காட்டி
உள்ளவாரே.

நிலை: 10
----------
செய்யும் முறை: சுவாச நிலை: மற்றும்
இதனால் வலிமை பெரும் உறுப்புகள் நிலை 3
ல் காட்டி உள்ளவாரே.

நிலை: 11
---------
செய்யும் முறை: சுவாச நிலை: மற்றும்
இதனால் வலிமை பெரும் உறுப்புகள் நிலை 2
ல் காட்டி உள்ளவாரே.

நிலை: 12
----------
சாதாரண நிலைக்கோ அல்லது நிலை 1 ல்
காட்டி உள்ளவரோ முடிவுக்கு வரலாம்.

No comments:

Post a Comment