மாரணம் எட்டுக்கும் மந்திரம்-
அகத்தியர்.
அஷ்ட கர்மங்களில் எட்டாவதாக
சொல்லப்படுவது மாரணமாகும்.
இது தனக்கும் தன்னைச்சார்ந்தவர்க்கும்
வேண்டாத அல்லது கேடு
விளைவிப்பவைகளை மாரணிக்க
(அழிக்க)செய்வதாகும்.
மாரணத்தின் அதிதேவதை எமன் ஆவார்.
மாரணம் எட்டுவகைப்படும். அவை
1)சர்வ மாரணம்
2)அரச மாரணம்
3)சத்துரு மாரணம்
4)சர்வபூத மாரணம்
5)சர்வஜீவஜெந்து மாரணம்
6)சர்வவிஷ மாரணம்
7)சர்வதேவ மாரணம்
8)சர்வரிஷி மாரணம் என்பதாகும் .
மாரணம் எட்டுக்கும் மந்திரம்
ஆமப்பா பேதனத்தை நன்றாய்ச் சொன்னேன்
அரகரா மாரணத்தினருமை கேளு
தாமப்பா சொல்கிறே மந்திரசித்து
தனதாக ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங்
பிறீங் பிறீங் பிறீங் சுவாகாவென்று
ஓமப்பா ஒருமனதாய்ச் செபிக்கக்கேளு
உறுதியுடன் சூலமிட்டு அடியிலேதான்
நாமப்பா சொல்லுகிறோங் கம்மென்றேதான்
நாட்டமுடன் தானெழுதி நயனம்பாரே.
பாரப்பா நயனமென்ற சூலந்தன்னை
பத்தியுடன் மானதமாய் பூசைபண்ணி
காரப்பா மந்திரத்தைத் தினம் நூறாக
கண்ணார உருச்செபித்து கருணையானால்
நேரப்பா மாரணந்தா னிமிஷத்துள்ளே
நினைத்தபடி நின்றுவிளையாடும் பாரே
தேரப்பா மனந்தேறி யறிவில்நின்று
சிவசிவா மாரணத்தைத் தீர்க்கம் பண்ணே.
தீர்க்கமுடன் மாரணந்தான் சித்தியானால்
தெளிந்துகொண்டு தன்னுயிர்போல்
செகத்தைப்பார்த்து
மார்க்கமுடன் சிவயோக வாழ்வில்நின்று
மைந்தனே பூரணத்தை தினமும்நோக்கி
ஏர்க்கையுடன் தானிருக்க வேண்டுமானால்
இடும்பாக மாரணத்தைச் செய்ய வேண்டாம்
ஆர்க்கும்வெகு கொடுமைகளைச் செய்தபேரை
அப்போதே மாரணிக்க அந்தந்தானே.
-அகத்தியர் பரிபூரணம்1200
பொருள்:
முன்பு பேதனத்தைப்பற்றி சொன்னேன்,
அதற்கடுத்ததாக
மாரணத்தைப் பற்றி சொல்கிறேன் கேள்,
ஒரு வெள்ளித்தகட்டில் சூலம் வரைத்து
அச்சூலத்தின்
அடிமுனையில் கம் என்று எழுதவும்.
பின்னர் ஒரு சனிக்கிழமை நாளில் உடல்மன
சுத்தியுடன்
தூய்மையானஇடத்தில் கருமைநிற ஆடை
அணிந்து தெற்கு
நோக்கி அத்திப்பலகையில்அமர்ந்து கொண்டு
உன் எதிரில்
மேற்கூறியமாரண எந்திரத்தை வைத்து
அதனைச்சுற்றி
கடலை மலர்களை வைத்து அதன் எதிரில்
வேப்பெண்ணெய்
ஊற்றி விளக்கேற்றி வைத்து இதர பூசை
பொருட்களையும்
வைத்துக்கொண்டு மன ஓர்நிலையோடு
"ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங் பிறீங் பிறீங்
பிறீங் சுவாகா"
வென்று நாளொன்றுக்கு 108 உரு வீதம் 48
நாட்கள் செபிக்க
மாரணம் சித்தியாகும்.
மாரணம் சித்தியானால் தனக்கு வேண்டாத
மனிதர், துன்பம்
செய்யும் விலங்கு, தீராத
நோய்,தீங்கிலைக்கும் துஷ்ட தேவதைகள்,
அரச பதவியில் இருந்து கேடு செய்யும்
பாவிகள் என யாவரையும்
அழித்து விடலாம்.
மாரணத்தை சித்தி செய்து விட்டோம்
என்பதற்க்காக நல்லவர்க்கு
அதை தவறான வழியில் பயன்படுத்தினால்
பெரும் பாவத்திற்க்கும்
சாபத்திற்க்கும் ஆளாக வேண்டிவரும்.ஆதலால்
இம்மாரணத்தை
யாரிடம் பிரயோகிக்க வேண்டுமென்றால்
யாவர்க்கும் அதிக கெடுதல்
செய்யும் பாவிகளிடமும், கொடுர
விலங்குகளிடமும் பயன்படுத்தி
அவற்றை அழித்து உலக உயிர்களை தன்னுயிர்
போல் எண்ணி
அவர்களுக்குநன்மை செய்வதற்க்காக இதை
பயன்படுத்த வேண்டும்.
மேலும் இதை பயன்படுத்து முறைகளை
சொல்கிறேன் கேளுங்கள்,
மாரண சித்தி செய்த பின்னர் இந்த எந்திரத்தை
வரைந்து 108 உரு
கொடுத்து விலங்குகள், துஷ்டதேவதைகள்
நடமாடும் வீடு,
தோட்டங்களில் ஸ்தாபித்து விட்டால்
அவ்விடத்தை அவைகள்
நெருங்காது. அப்படி நெருங்கினாலும்
சுருண்டு விழுந்து விடும்,
தீராத நோய்வாய்ப்பட்டவர்க்கு மேற்க்கூறிய
யந்திரத்தை
விபூதியில் வரைந்து 108 உருக்கொடுத்து
அவ்விபூதியை அவர்கள்
பூசியும் சிறிது உண்டும் வர சொல்லினால்
அவர்களின் உடலில்
உள்ள நோய்கள் நீங்கி விடும்.
உடலில் உள்ள விஷத்தன்மைகள் நீங்கவும்
இம்மந்திரம் ஓதிய
விபூதியை கொடுக்க சரியாகி விடும்.
உலக உயிர்களுக்கு கேடு செய்யும் பாவிகளை
அவர்கள் அழிந்து
போக வேண்டுமென எண்ணி இம்மாரண
யந்திரத்தில் அவர்களின்
பெயரை தலைமாற்றி எழுதி அதல் அவர்களின்
காலடி மண் அல்லது
முடி ஏதாவதொன்றை வைத்து சுருட்டி
அவர்கள் நடமாடும் பகுதி
அல்லது சுடுகட்டிலோ அதை புதைக்க
அவர்களுக்கு மூச்சடைக்கும்
உடலெல்லாம் எரியும் நிமிசத்தில் உயிர்
பிறிந்து போகும்.
மேலும் சித்தகள் ரிஷிகள் தாங்கள் மறைந்து
வைத்துள்ள புதையல் போன்றவற்றிக்கு
மந்திரக்கட்டு
போட்டு இருப்பார்கள் அவர்களின்
மந்திரக்கட்டை மாரணிக்க செய்து
அவைகளை நாம் அடைந்து விடலாம் இது
ரிஷி மாரணமாகும் .
தீமை செய்யும் யாவரையும் அழிக்க
வேண்டுமென்றால் உன் மூச்சை
இழுத்தடக்கிக்கொண்டு இம்மந்திரத்தை
மனதால் 3 முறை
செபித்தவாறு அவனை உற்று நோக்கினால்
மதிமயக்கம் ஏற்ப்பட்டு
கிழே விழுந்து விடுவான் பின்னர் விழுந்தவன்
எழவே மாட்டான்.
இவையெல்லாம் மாரணத்தின் ஆற்றலாகும்
இதை நல்ல வழிக்கு
மட்டுமே பயன்படுத்த வேண்டும்
இல்லாவிடில் கொடிய துன்பத்திற்க்கு ஆளாக
நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்,
மாரண சூட்சமம்- கோரக்கர்
சொல்லிடுவேன் மாரணத்தின் சூட்சம்
தன்னைச்
சுருக்காகப் பூரணமாய் வாசிகூட்டி
நல்லதொரு உம் நம் மென்றிழுத்த டக்கி
நாட்டிலுன்னை எதிர்த்தோர்க்கு சாபம் ஈந்தால்
தொல்லைமிக வடைந்திடுவார் துலங்க
மாட்டார்
துரிதமுடன் வல்லரக்கர் எதிர்நில்லார்கள்
-சந்திரரேகை(117)
பொருள்:
முச்சை இழுத்தடக்கி உம்-நம் என்று 16
உரு மனதினில் செபித்து
நாட்டில் உன்னை எதிர்வர்களுக்கு சாபம்
கொடுத்தால் அது
பலித்துவிடும். மந்திரம் சித்தியடைய
வேண்டுமானால் முதலில்
ஓம் உம் நம் என்ற இம்மந்திரத்தை 1008 உரு
செபிக்க
சித்தியாகும். பின்னர் பிரயோகம் செய்ய
சித்தியாகும்
இதனால் உன் எதிரிகள் பல தொல்லைகளுக்கு
ஆளவார்கள்.
அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும்
விலங்காமல்
போய்விடும். இதனால் எப்படிபட்ட
கொடியவர்களும் உன் எதிரில்
நிற்க அஞ்சுவார்கள் என்கிறார் கோரக்கர்.
No comments:
Post a Comment