Monday, 21 December 2015

சஞ்சீவி மூலிகை ரகசியம்

சஞ்சீவி மூலிகை ரகசியம் :-

சாகாவரம் பெற்ற அனைத்தும் சஞ்சீவியாகும், அழியாதவை யாவும் சஞ்சீவியாகும், எந்த உயிரை காபந்து பண்ணக்கூடிய யாவும் சஞ்சீவியாகும், பஞ்ச பூதங்கள் ஐந்தும் சஞ்சீவியாகும்,ஆக சஞ்சீவி என்பது காபந்தும். வாழ்வதும் என்பதே பொருள் கொள்ள வேண்டும், சஞ்சீவி என்பது தனித்த ஒரு மூலிகையை மட்டும் குறிப்பதல்ல .

உதாரணமாக மிருத்தியு ஜெப மந்திரம் இறந்தவரை உயிர்பிக்கும் சஞ்சீவி மந்திரமாகும், பாம்பு கடித்த ஒருவருக்கு சிரியா நங்கை . பெரியா நங்கை மூலிகை சஞ்சீவி மூலிகையாகும்,மண்மேல் வாழும் உயிரினங்களுக்கு காற்று இல்லை எனில் வாழ முடியாது எனவே காற்று சஞ்சீவியாகும், சூரிய கதிர்கள் இல்லாமல் எதுவும் வாழாது வளராது, எனவே சூரிய பிரபஞ்சம் ஒரு சஞ்சீவியாகும், உணவு இல்லாமலும் வாழ முடியாது, ஆக உணவும் ஒரு சஞ்சீவியாகும்,ஆக எந்த சூழலில் எது காபந்தாக உள்ளதோ அனைத்தும் சஞ்சீவிதான் .

முதல்வரியிலேயே இதைபற்றி சுருங்க கூறியுள்ளோம், மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் குறிப்பாக  உயிர்களின் ஆயுளை போக்காத மூலிகை அனைத்தும் சஞ்சிவினி மூலிகைகள் தான், பாம்பிடம் கடிபட்ட கீரிபிள்ளை அருகம்புல் மேல் விழுந்து புரண்டாலே விஷம் அதன் உடலில் இருந்து இறங்கிவிடும், ஆக கீரிபிள்ளைக்கு அருகம்புல்லே சஞ்சீவினி மூலிகையாகும், பிறந்த குழந்தைக்கு உடலில் செவ்வாப்பு இருந்தால் கரு நொச்சில் இலைமேல் படுக்க வைத்தால் போதும் செவ்வாப்பு விலகும், இல்லையேல் உயிரே கூட போய்விடும் ஆக அந்த குழந்தைக்கு கரு நொச்சிலே சஞ்சீவினி மூலிகையாகும், இவைகளெல்லாம் தெரிந்து கொள்வதற்காக மட்டும் சின்ன சின்ன தகவலை தந்துள்ளோம், சஞ்சீவினியை பற்றி எழுதினால் மிகப்பெரிய புத்தகமே உருவாகும் அளவிற்கு விஷயங்கள் உள்ளது, ரத்தின சுருக்கமாக மட்டும் தகவலை தந்துள்ளேன், இந்த தகவலை இங்கு தெரிவிக்க சில காரணங்கள் உண்டு .

ராமாயணத்திலே லட்சுமணன் மூர்ச்சை தெளிய ஆஞ்சநேயர் சஞ்சிவினி மலையில் இருந்து சஞ்சீவினி மூலிகை கொண்டு வந்தாரே அந்த மூலிகை எப்படி இருக்கும் என்று பலரும் கேட்கிறார்கள், இவர்களும் ஏனையோரும் அறிவது காற்று மைந்தன் (காற்றும் மிக முக்கிய சஞ்சீவினி ஆஞ்சநேயனே சஞ்சிவினி ஆவார், இவரும் அழியாத சாகா வரம் பெற்றவர்) இவர் கொண்டு வந்ததினால் அதற்கு சஞ்சீவி (சிரஞ்சீவி) கொண்டு வந்த மலை என்று பெயர் உருவானது, மற்றபடி சஞ்சீவினி மூலிகை என்பது ஒரு தனிப்பட்ட மூலிகையை மட்டும் குறிப்பதல்ல என்பதை அறியவும் .

ஒரு சிலர் வதந்தியை பெரிதும் நம்புகிறார்கள், உடலை கிழித்து சஞ்சிவினி மூலிகையை உள்ளே வைத்து தைத்துவிட்டால் நமக்கு சாவே வராதாமே என்று கேட்கிறார்கள், இதில் வேறு உண்மைதான்இருக்கிறது  காற்று கூட சஞ்சீவி  என்று முன்பு கூறியிருந்தேன், இந்த காற்றான சஞ்சீவினியை யார் வாசியோகம் மூலம் அடக்கி குறைக்கிறார்களோ அவர்களுக்கு ஜீவன் அழியாது, உடல் சமாதியானாலும் ஜீவசமாதியாகத்தான் இருக்கும், (சித்த சமாதி) இதையே சிவானந்தர் சுவாமிகள் மறைபொருளாக சஞ்சீவியை உள்ளே வைத்து அடைத்தால் உயிர் போகாது என்று கூறினர் .

நிலையான மூச்சின் பக்குவத்திலே திரு மூச்சு சித்திக்கும் அந்த திரு மூச்சே சஞ்சிவி அதுவே சிரஞ்சியாய் வாழ வைக்கும் இதை சுவாமி சிவானந்தர் கூறியது , இந்த பொய்யான உடலினுள் காற்று உள்ள வரை மறியாதை அதன் பின் இந்த உடல் மண் , ஆக ஜீவ சஞ்சிவியே ( காற்று ) சிரஞ்சிவி ( உயிர் ) க்கு காப்பு என திரு மூலரும் கூறியுள்ளார் , இதை தவறாக புரிந்து கொண்டவர்களின் வதந்தியே இன்றுவரை உள்ளது, ஆக சஞ்சிவினி எது என்பதை இனியாவது மற்றவருக்கு உணர்த்துங்கள்.

சஞ்சிவி என்பது காற்று - சிரஞ்சிவி என்பது உயிராகும் , இதைத்தான் சித்தர்கள் சஞ்சிவி உள்ளவரை யாவரும் சிரஞ்சிவியாக வாழலாம் என கூறினார்கள் , சஞ்சிவி ஏன் மூலிகை ஆனது என்ற கேள்வியும் கேட்கத்தோன்றும் அல்லவா  சஞ்சிவி ( காற்று ) என்பது மூலிகை என்று சித்தர்கள் கூறியதுதான் , ஏன் அவர்கள் அவ்வாறு கூறவேண்டும் என்றால் அதில் சூழ்ச்சுமம் உள்ளது .

வான மண்டலத்தில் இருந்து கிடைக்கும் காற்று மனிதன் சுவாசிக்க ஏற்ப்புடையதல்ல , எனவே அந்த காற்றை  மரம் செடி . கொடிகள் உறிஞ்சி மீண்டும் மனிதனுக்கு சுவாசிக்க உகந்த காற்றாக வெளியிடுகிறது , ஆக மரம் செடி  கொடி போன்ற மூலிகைகளே காற்றை தருவதால்  காற்றும் மூலிகையானது அதாவது சஞ்சிவினி மூலிகையபனது , சித்தர்கள் மறைபொருளாய் கூறியது இதைத்தான் ,

ஒரு சில பெரியவர்களின் அறிவுரையும் அனுசரிப்பான பேச்சும் சிலரின் மரண வாசலில் இருந்து மீட்கும், அந்த நபருக்கு அந்த பெரியவரின் அறிவுரைதான் சிரஞ்சீவியாகும்,திருக்குறளும் உயிர்ப்புள்ள சஞ்சீவி தன்மை பெற்றதே.

மூத்தோரின் பல மொழிகள் இன்றும் உதவக்கூடிய வார்த்தைகளாக இருக்கின்றன,அவை யாவுமே சஞ்சிவிதான், சஞ்சிவினி என்பது ஒரு உயிர் வாழ உதவும் தன்மையை சுட்டி காட்டும் பெயராகும்,

மனிதராய் இருந்தாலும் வேறு எந்த உயிர்களானாலும் உயிரோடு உள்ளவரை சஞ்சீவினிதான்,சிரஞ்சிவியோடு  சில நூறு ஆண்டுகள் யாரும் இருப்பதில்லை , புராண காலத்தில் தான் கேள்விபட முடிகிறதே தவிர இன்று யாரும் அவ்வாறு இல்லை, சித்தர்கள்கட சஞ்சிவினியாக ( காற்று ) இருக்கிறார்கள், ஆனால் சிரஞ்சிவியாக இருக்கவில்லை என்பதே உண்மை .

சித்தர்கள் கூறிய சிரஞ்சிவி - சஞ்சிவினி மூலிகை எது என்று எல்லோருக்கும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கும், அந்த சஞ்சிவினி என்பது யாருக்கும் விளங்காமல் இருக்கிறது அதையும் இங்கே தெரிவிக்கிறோம், உங்களுக்கே தெரிந்த விஷயம் தான் எனினும் சிந்தனைக்கு வர கூறுகிறோம், ஒரு மூலிகையை நம் செயலுக்கு வேண்டி காப்பு கட்டி எடுக்கும் போது முகூர்த்தம் பார்ப்போம், உயிர்ப்புள்ள ஞாயிற்றுக்கிழமையும் உயிர்ப்புள்ள பிரம்ம முகூர்த்தமும் உயிர்ப்புள்ள நேத்திரம் ஜீவன் உள்ள நாளும். உயிர்ப்புடன் வளரக்கூடிய வளர்பிறை சந்திர நாளும். தன் பட்சி உயிர்ப்புள்ள வேளையும். தன் நட்சத்திரத்திற்கு உயிர்ப்புள்ள நட்சத்திரமும். உயிர்ப்புள்ள குரு சுக்ர ஓரையும் வரும் நாள் பார்த்து முகூர்த்தம் கனித்து பின்பு குறித்த நாளில் காப்பும் கட்டி அந்த மூலிகையை பிடுங்கும்முன்- உன் உயிர் உடலில் நிற்க- என்னும் மந்திரத்தையும் பலமுறை ஓதி அந்த மூலிகையின் உயிர் வேரான ஆனிவேர் அறாமலும் உயிர் நீரோட்டம் உள்ள வடக்கு கிளை வேர் அறாமலும். அந்த மூலிகைமேல் எவ்வித ஆயுதத்தாலும் பாதிக்கப்படாமல் மெல்ல எடுத்து அந்த மூலிகை உயிர் வாடும் முன் செயலுக்கு பயன்படுத்துவார்கள், இது பொதுவாக எல்லா மூலிகைகளும் இப்படித்தான் எடுப்பார்கள், இதில் உள்ள சூழ்ச்சுமம் என்னவென்றால் இந்த முறையில் எடுக்கப்படும் மூலிகைகள் எல்லாமே சிரஞ்சீவினி சஞ்சிவினி மூலிகைதான், இதைத்தான் சித்தர்கள் மறைமுகமாக சிரஞ்சீவி சஞ்சிவி மூலிகையே பலன் தரும்  என கூறினார்கள் .

சிரஞ்சீவி என்பது மாறாத தன்மையோடு அல்லது இளமையோடு என்பது பொருள்படும் ,சஞ்சிவி என்பது சாகாதது அல்லது உயிரோடுள்ளது அல்லது ஜீவன் உள்ளது என்று பொருள்,இந்த இரு தன்மையும் உள்ளவாறு மூலிகை எடுத்தால்தான் மூலிகை பலன் தரும் என்று சித்தர்கள் கூறினார்கள், இதற்கு பெயர்தான் காலம் காலமாக எல்லோரும் கூறும் சஞ்சிவினி மூலிகையாகும், பலபோலிகள் பல வழியில்  பணம் பறிக்க மூலிகையை தவறான செயலுக்கு பயன்படுத்துகிறார்கள்.

ஒரு மூலிகையின் சஞ்சிவி (உயிர்) நற்செயலுக்கு பயன்பட்டால் அந்த மூலிகையின் உயிர் மோட்சம் பெரும், இதற்கு மாறாக தீய செயலுக்கு அந்த மூலிகையின் உயிரை பறித்து பயன்படுத்தினால் அந்த பாவம் பயன் படுத்தியவரின் சஞ்சிவியை நீக்கி விடும், அவர் குடும்பத்தினரின் சிரஞ்சிவி தன்மையை குலைத்துவிடும், இன்றும் இந்த செயல் நடந்து கொண்டிருக்கிறது .

சித்தர்கள் மறைவிஷயமாக இவைகளை குறிப்பிட்டுள்ளார்கள்,

"மூலிகையின் சஞ்சிவி பிரியும் முன் பயன்படுத்து
மனித சஞ்சிவி பிரியும் முன் பயன்பெறு . பயன்கொடு ,
தர்ம கர்ம முறை மாறினால் சஞ்சிவி மாறும் மறு பிறவிக்கு
சூழ்ச்சியை சூழ்ச்சியால் அறிவது போல வாசியை வாசியால் அடக்க சிரஞ்சிவி ஆவாய் ."

என நிறைய பொருள் விளங்க கூறியுள்ளார்கள், இதை உணர்ந்து நடப்பதில் பலன் உள்ளது .

No comments:

Post a Comment