உங்கள் ராசியின் குணங்கள்
மேஷ ராசியில் பிறந்தவர் களின் பலன்கள்
மேஷ ராசியில் பிறந்தவர் களின் பலன்கள் அசுவினை-பரணி-கிருத்திகை 1ம் பாதம் இந்த நக்ஷத்திரங்களில் அதாவது, மேஷராசியில் பிறந்தவர்கள்-பூமி,காணி,நிலபுலங்கள்,வீடு,விவசாயத் தொழிலில் மேன்மை, ஆள்,அதிகாரங்களுடன் இருப்பார்கள். அரசாங்கத்தாரால் கெளரவிக்கப்படுவார்கள். அற்ப ஆசைகள் இல்லாதவராகவும்,வாக்கு வன்மையும்,கோப குணம், முரட்டு சுபாவங்களுடனும்,கம்பீரமான தோற்ற்ங்களுடனும்,தெய்வீக வழிபடுகள்,சாஸ்திர ஆசார அனுஷ்டானங்கள் நிரம்பப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். பொன் ஆபரணங்களையும்,பட்டுப் பீடாம்பரங்களையும்,வஸ்திரங்களையும் பெற்றிருப்பார்கள். கல்வியில் திறன் பெற்றிருப்பார்கள். மெலிவான இளைத்த சரீரத்துடன், நீண்ட கழுத்து, கை கால்களுடன் இருப்பார்கள். நீண்ட ஆயுளுடன் திரேக பலத்துடனிருப்பார்கள். மேஷ ராசி என்பது மேடான ராசி என்றும், இந்த ராசியில் பிறந்தவர்கள் மேன்மையான அந்தஸ்துடன், கீர்த்தி செல்வாக்கு,சுகம் இவைகளைப் பெற்றிருப்பார்கள். என்று பொதுவாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.
ரிஷப ராசியில் பிறந்தவர் பலன்
கிருத்திகை 2,3,4, பாதங்கள், ரோஹிணி,மிருக சீருஷம் 1,2, பாதங்கள் இவைகளாகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள்,அதாவது ரிஷிபராசிக்காரர்கள் பருந்த உடலும்,கம்பீரமான தோற்றமும்,மெதுவான செய்கைகளையும் மந்தமான குணங்களுடன்,கல்வி கணிதம் சாஸ்திரங்களை ஓரளவு கற்றும், தேவாலய தெய்வீக வழிபாடுகளுடன்,பக்தி,சிரத்தையுடன் இருப்பார்கள். ஆடை ஆபரணம், நகைகள், செல்வம், முதலியவைகளைப் பெற்றிருப்பார்கள்.
வேடிக்கையாகப் பேசும் குணங்களுடன், புத்திரர்களிடாத்திலும், மற்றும் குழந்தகளிடத்திலும் பிரியமாகப் பேசியும் பழகும் குணமும் இருக்கும். புளிப்பு,காரம், வஸ்துவில் பிரியம் அதிகம். தாங்கள் தாராள குணத்துடன் செலவு முதலியவைகளைச செய்யாமல், பிறரை செய்யும்படிஸ் சொல்லி, அதனால் பலங்களைத் தாங்கள் பெறுவார்கள்.
வண்டி வாகனங்களுடன் செல்வத்துடனும்,செல்வாக்குடனும், இவர்கள் 80 வயதுக்கு மேலும் சரீர சுகங்களுடன் இருப்பார்கள்.
வண்டி வாகனங்களுடன் செல்வத்துடனும்,செல்வாக்குடனும், இவர்கள் 80 வயதுக்கு மேலும் சரீர சுகங்களுடன் இருப்பார்கள்.
மிதுன ராசியில் பிறந்தவர்கள் பலன்
மிருக சீருஷம் 3,4, பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 பாதங்களில் பிறந்தவர்கள் மிதுனராசிக்காரர்கள் ஆவார்கள். அதிகமான எண்ணங்களையும், நோக்கங்களையும் பெற்று,கல்வியில் தேர்ச்சியும்,கணிதத்தில் வன்மையும், பேச்சில் சாமர்த்திஉஅத்தையும், ஸ்தா சிரித்துப்பேசும் குணமும் கபடமும் தந்திரங்களும், சுயநலக் காரியவாதிகளாகவும் இருப்பார்கள். தெய்வீக வழிபாடுகளும், ஆசார அனுஷ்டானங்களீல் நம்பிக்கையும், கீர்த்தியையும் பெற்றிருப்பார்கள்.
நீண்ட திரேகமும் உடலமைப்பையும் கருமை நிறமாகவும், பித்த சம்பந்தமான வியாதிகளுடனும், தைர்யஸ்தர்களாகவும்,இருப்பார்கள். தான் செய்யும் தொழிலில் கண்டிப்பும், கறாரும்,கண்ணியமும் நிறைந்திருக்கும். எழுதுவதில், கலைத்துறையில் ஆர்வமும், திறமையும் பெற்றிருப்பார்கள். செல்வத்துடனும், செல்வாக்குடனும் தங்களது திறமையினால் முன்னேற்றத்தை அடைவார்கள். ஆயுள் 70 வரையில் தீர்க்கமெனக் கூறலாம்.
கடக ராசியில் பிறந்தவர்களின் பலன்:
கடக ராசிகாரர்கள், வளமான நினைவாற்றலையும், வியக்கத்தக்க காட்சிகளில் மகிழ்ச்சி அடைவதையும் வீரதீர மிக்கவர்கள். என்பதையும், காட்டிகிறது. மற்றவர்களின் தன்மைகளுக்கு ஏற்ப அவர்களின் யோசனைகளை கிரகித்துக் கொள்வார்கள். அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் மிகவும் புண்படக்கூடிய உணர்வுகள் உள்ளவர்களாகவும், இரக்கம் உள்ளவர்களாகவும் இருப்பர். அதிகமான உணர்ச்சி வசப்படல் காரணமாக நரம்புகள் பாதிக்கப்படும் அளவிற்கு எளிதில் கோபமடைவர். அவர்கள் செல்வத்தையும் புகழையும் பெற முழு ஆற்றலுடன் செயல்படுவர். எப்படி சந்திரன், வளர்வதையும், தெய்வதையும், காண்கிறோமோ, அம்மாதிரி, கடக ராசியில் பிறந்தவர்கள் சில சமயங்களில் கூச்ச சுபாவமுள்ளவராகவும் மற்றைய சமயங்களில் மிகவும் தைரியசாலிகளாகவும் காணப்படுபவர். பொதுவாக அவர்கள் உடல் சம்பந்தங்களான ஆபத்துக்களை எதிர் கொள்ள தைரியமற்றவர்கள் ஆனால் மனதைரியம் மிக்கவர்களாகவும், ஒழுக்கமுடையவர்களாகவும் இருப்பர். அவர்களுடைய மனப்பான்மையும் அடிக்கடி மாறக்கூடியதாகும் கோபமடைவதும் தணிவதும் மிக விரைவாக மாறி மாறி நிகழும்.
சிம்ம ராசியில் பிறந்தவர் பலன்
மகம், பூரம்,உத்திரம்,1-ம் பாதம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள், சூரியனைப் போன்று விளங்குவார்கள். தைரியமும்,வாக்குவன்மையும் தெய்வீக தேவாலய வழிபாடுகளுடன், ஆசார அனுஷ்டானங்களிலும் சிறந்து விளங்குவர். கல்வியில் ஊக்கமும் சாஸ்திர ஆரய்ச்ச்சிகளில் தேர்ச்சியும் அடைவர். வேதங்களில் பற்றுதல் இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பும், சகவாசமும்,அந்தஸ்தும் ஏற்படும்.சமூகத்தில் கீர்த்தியுடனும்,பிரபலத்துடனும், விளங்குவார்கள். உன்னத்ப் பத்வியில் செல்வம்,செல்வாக்கு, ஸ்திர சொத்துக்களுடன் இருப்பார்கள். குடும்பம் சிறப்புடன் இருக்கும். புத்திர பாக்யங்களுடன் வாழ்வார்கள்.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிவபெருமான் அருளைப் பெற்று இருப்பார்கள்.அதிகமாக உணவு புசிப்பார்கள். வியாதிகள் ஏற்பட்டாலும் உடனே குணமாகும். தொழிலில் ஊக்கத்துடன் விளங்குவார்கள். தன்னுடைய அந்தஸ்துக்குக் குறைவாக இருப்பவர்களிடம் அலக்ஷியத்துடனும்,அதிகாரங்களுடனும், சிறிது கர்வம் கொண்டவர்போல நடந்துகொள்வார்கள். கோபமும், படபடப்பும் தலையெடுத்திருக்கும்.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் கிரஹ பலத்துடன் ஜாதகம் அமைந்திருந்தாஅல் 80 வயதுகளுக்குக் குறைவில்லாமல் நல்ல சுக செள கர்யங்களுடன் இருப்பார்கள்.
கன்னி ராசியில் பிறந்தவர் பலன்
உத்திர நக்ஷத்திரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம் சித்திரை 1,2, பாதங்களில் பிறந்த கன்யா ராசிக்காரர்கள் பிரசித்தி கொண்ட குடும்பத்தில் பிறந்தாலும், தரித்திரத்தையும் வறுமையையும் அனுபவிக்க நேரிடும். தெய்வீக வழிபாடுகளில் சிறந்தவர்களாகவும், ஆசார சீலர்களாகவும்,நீதி நேர்மை,பண்புகளுடன் கூடியவர்களாகவும் இருப்பார்கள். எக்காரியங்களிலும் எவ்வித தொழிலிலும் அவ்ர்கள் ஞானத்தைப் பெற்றிருப்பார்கள். சமூக சேவைகள் செய்ய பிரியம் கொண்டவர்களாகவும் தங்களது பிற்காலத்தில் செல்வத்துடனும், செல்வாக்குடனும் சிறப்புடன் விளங்குவார்கள்.ஸ் தானத்ருமங்கள் செய்வதிலும் தன் நிலையையும் மறந்து பிறருக்கு உபகாரங்கள் செய்வதையும் லக்ஷயமாகக் கொண்டிருப்பார்கள்.
கன்யா ராசியில் பிறனஹ்தவர்களை முக்கியமாக தாயாதிகளும், உற்றார் உறவினர் நண்பர்களும் ஏமாற்றி செல்வத்தையும், பொருளையும் அபகரிப்பார்கள். ஆயினும் கன்யாராசிக்காரர்கள் பொறுமை குணங்களிடன், தங்களது மெதுவான சுபாவத்துடனும், அன்பு கலந்த பேச்சுக்களினாலும் எதிர்காலத்தில் சிறப்பைப் பெறுவார்கள்.
சுபக்கிரஹங்கள் பார்வையுடனும்,பலத்துடனும் பிறந்த கன்யாராசிக்காரர்கள் சுக செளகர்யங்களுடன் 70 ஆண்டுகாலம் ஜீவித்திருப்பார்கள்.
துலா ராசியில் பிறந்தவர் பலன்
சித்திரை நக்ஷத்திரம் 3,4, பாதங்கள், சுவாதி,விசாகம், 1,2,3,பாதங்களில் பிறந்த துலாராசிக்காரர்கள் செல்வம் மிகுந்தகுடும்பத்தில் செல்வாக்குடன் இருப்பார்கள்.நல்ல ஜசுவரியமும்,தனதான்யங்களும்,பூமி காணி வீடு போன்ற சொத்துக்களையும் வண்டி வாகனங்களையும்,மாடு கன்றுகளுடன் பால் பாக்யத்தையும் பெற்று இருப்பார்கள்.
குடும்பத்தில் அதிகமான நபர்கள் இருப்பார்கள். பெரிய மனிதர்கள், செல்வாக்கு அதிகாரம் உயர்பதவி கொண்டவர்களாகளின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.தார்மீக குணங்களும், தெய்வ வழிபாடுகளும் நிறைந்து விளங்கும்.ஆசார அனுஷ்டானங்களைச செய்து வருவார்கள்.
துலா ராசியில் பிறந்தவர்கள் பேச்சில் ஆணித்தரமாகவும், வியாபார நோக்ங்கள் கொண்ட பேச்சாகவும் பேசுவார்கள்.அதிகமாக மற்றவர்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள். தங்கள் குடும்பத்தைவிட்டு மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடமாட்டார்கள். துலா ராசியில் பிறந்த ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் இருக்கலாம்.
சுபகிரஹங்கள் பார்வையுடனும்,பலங்களுடனும், பிறந்த துலாராசிக்காரர்கள் ஆயுள் பாவம் 85 ஆண்டுகளுடன் சுக செளகர்யங்கள் நிரம்பப் பெற்று விளங்குவார்கள்.
விருச்சிக ராசியில் பிறந்தவர் பலன்
விருச்சிகத்தில் பிறந்தவர்கள் படி படியாக முன்னுக்கு வருபவர்கள்.எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.தைரியமாக எந்த செயலையும் செய்வார்கள். பெரிய வேலைகளை தந்திரத்துடன் செய்வார்கள். அடுத்தவர்களிடம் அன்பாக பழகுவார்கள். வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் நிறைந்து காணப்படும்.காய்ச்சல் அடிக்கடி வரலாம்.
தனுர் ராசியில் பிறந்தவர் பலன்:
மூலம் பூராடம் உத்திராடம் 1-ம் பாதம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்த தனுர்ராசிக்காரர்கள் ப்ருஹஸ்பதி கிரஹமாகிய குருபகவான் வீட்டில் ஜெனனமாவதால், சிறு வயதிலுருந்தே கல்வி, ஞானம். கொண்டவர்களாகவும் நல்ல சகவாசங்களையும், நீதி நேர்மை பண்பு ஆகிய நல்லொழுக்கங்களைக் கொண்டவர்களாகவும் வளர ஆரம்பிப்பார்கள். தெய்வீக வழிபாடுகள், ஆசார அனுஷ்டானங்கள், பெரியவர்களிடம் பக்தி, விசுவாசகங்களுடன் கூடினவர்களாக இருப்பார்கள்.தனக்கு சமமாகவும், உயர் அந்தஸ்து,பதவி, செல்வாக்கு படைத்தவர்களிடம் நட்பைக் கொள்ளுவார்கள்.கீழோரிடம் வெறுப்பைக் கொள்ளுவார்கள். அதிகமாக வெளியே சுற்றும் பழக்கம் இருக்கும்.
தனிர் ராசியில் பிறந்தவர்கள் தங்களது கல்வி, அறிவு திறமைகளால் உயர் பத்வியை அரசாங்கத்தில் பெறுவார்கள். அதிகாரங்களுடனும், அந்தஸ்துடனும் இருப்பார்கள். பிறருடைய குற்றங்களை, குணங்களை,வெகு எளிதில் கண்டு கொள்வார்கள்.துர்குணம்,கொலை செய்பவர்கள்,திருடுபவர்கள் இவர்களை வெகு கலகமாகக் கண்டிபிடிப்பார்கள்.
கிரஹ பலங்களுடன் கூடின தனுர்ராசிக்காரர்கள் அடிமை வாழ்வைப் பெறாமல் 80 ஆண்டுகள் ஆயுள் பாவத்துடன் திடகாத்திர திரேகத்துடன் இருப்பார்கள்
மகர ராசியில் பிறந்தவர் பலன்:
உத்திராடம் 2,3,4, பாத்ங்கள்,திருவோணம்,அவிட்டம் 1,2, பாதங்கள் ஆகிய நக்ஷத்திரங்களாகிய மகர ராசியில் பிறந்தவர்கள்,சிவந்த மேனியையும், பெரிய கண்களையும், திரேகத்தில் மச்சங்களையும், நீண்டு உயர்ந்த கம்பீர திரேகக் கட்டையும் பெற்றிருப்பார்கள். கல்வி,கேள்விகளில் பிரகாசத்தையும்,ஆசார அனுஷ்டானங்களில் சிறந்தும்,தெய்வீக வழிபாடுகளை அறிந்தும், இருப்பார்கள்.வாசனைத் திரவியங்களைல் பிரியமும், ஆடைஆபரணங்களில் ஆசைகளும் அந்தஸ்துக்கு ஏற்ற இடங்களில் ஆகாரம் கொள்வதும் யாரையும் லக்ஷியம் செய்யாமல் தன் இஷ்டம் போலக் காரியங்களைச செய்து வெற்றி பெற்று வாழ்வார்கள்.
மகரராசியில் பிறந்தவர்களில் குடும்பம் செல்வம்,செல்வாக்குடன் கீர்த்தி பெற்று இருக்கும். புத்திர சந்தானங்களுக்கு குறைவிருக்காது.மனவியிடம் அதிகமான பிரியத்துடனும்,மனைவியின் போக்கின்படி நடந்து கொள்ளும் சுபாவத்தையும் பெற்றிருப்பார்கள். தனக்கு நிகர் யாரும் கிடையாது என்ற நோக்கத்துடன் இருப்பார்கள்.
மகரராசியில் பிறந்தவர்கள் பிறக்கும்போது செல்வந்த குடும்பத்தில் பிறந்து, நடுத்தர வயதில் சில சிரமங்களை அனுபவித்து,பிற்காலத்தில் பெரிய அந்தஸ்தையும், செல்வ சுகங்கலையும், ஸ்திரசொத்துக்கலையும் பெறுவார்கள்.
கிரஹங்கள் பலத்துடன், பிறக்கும் மகரராசிக்காரர்களுக்கு ஆயுள் பலம் 70 ஆண்டுகளுக்குக் குரைவில்லாமல் இருக்கும.
கும்ப ராசியில் பிறந்தவர் பலன்
அவிட்டம் 3,4, பாதங்கள், சதயம்,பூரட்டாதி 1,2,3- பாதங்களில் பிறந்த கும்பராசிக்காரர்கள்,மெலிந்த திரேகத்துடனும், குள்ளமாகவும் இருப்பார்கள். கல்வியில் ஊக்கமும் ஆசார அனுஷ்டானங்களில் பற்றுதலும்,தெய்வீக வழிபாடுகளில் சிறந்தும் இருப்பார்கள். எவ்வளவு படித்திருந்தாலும் மேதைகளாக இருந்தாலும், பிரபலமாக அமைவது கடினம். சுபக்கிரகப் பார்வை பெற்ற கும்பராசிக்காரர்கள் கீர்த்தி பெறலாம்.பித்த சம்பந்தமான வியாதிகளுடனும்,மற்றவர்களிடம் காணும் சிறு குற்றம் குறைகளையும் அடிக்கடி இழிவாகப் பேசி,பிரசாரம் செய்து வருவார்கள். தன்னைப்பற்றி பெருமையாகத் தாங்களே பேசிக் கொள்வார்கள்.
கும்பராசியில் பிறந்தவர்கள் மற்றவர்கள் செய்த உபகாரங்களை உடனே மறந்துவிடுவார்கள். பாரபக்ஷம் பார்க்காமல் உடனே தீங்கு செய்வார்கள். பிறர் நன்றாக வாழ்வதைக் கண்டு பொறுக்கமாட்டார்கள்.
கும்பராசியில் பிறந்தவர்கள் ஸ்திரீ ஜனங்களின் நட்பை வெகு எளிதில் பெற்றுவிடுவார்கள். கிரஹங்களின் பலங்களுடன் பிறக்கும் கும்பராசிக்காரர்கள் 80 ஆண்டுகள் ஜீவித்திருப்பார்கள்.
மீன ராசியில் பிறந்தவர் பலன்:
பூரட்டாதி 4-ம் பாதம்,உத்திரட்டாதி ரேவதி ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்த மீனராசிக்காரர்கள் அழகிய அங்கலக்ஷணங்களுடனும் தோற்றங்களுடனும் இருப்பார்கள்.தான் செய்த காரியங்கள், செய்யப் போகும் காரியங்கள் எதையும் வாய்விட்டு சொல்லமாட்டார்கள். எவரிடமும் மனம்விட்டுப் பழகமாட்டார்கள். பயந்த சுபாவங்களுடன் இருப்பார்கள்.
மீனராசியில் பிறந்தவர்கள் சுமாரான கல்வி ஞானங்கள் தெய்வ வழிபாடுகள், ஆசார அனுஷ்டானங்கள் இவைகளை அறிந்திருப்பார்கள்.ஆனால் அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்களா என்பது சந்தேகம். வாசனைத்திரவியங்களிலும்,ஆடை ஆபரணங்களிலும் பிரியம் இருக்கும்.
மீனராசியில் பிறந்தவர்கள் முன் ஜாக்கிரதையுடன் கூடினவர்களாக இருப்பார்கள். பிறர் பொருளை அப்கரிப்பார்கள். பிறருடைய உதவிகளினாலேயே தங்களது வாழ்க்கையை நடத்துவார்கள். கிரஹபலம் பெற்ற மீனராசிக்காரர்கள் நல்ல செல்வம், செல்வாக்கு சந்தோஷங்களைப் பெற்றிருந்தாலிம் அவர்களுக்கு எதிர்பாராதவிதமான கஷ்டநஷ்டங்கள் உடனேயே ஏற்படும். அனேகமாக சிரம வாழ்க்கையைத்தான் அனுபவிப்பார்கள்.
மீன ராசியில் பிறந்த ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் என்று கூறலாம். சிரமமான வாழ்க்கை வசதிகளுடன் 90 ஆண்டுகள் ஜீவித்திருப்பார்கள். புத்திர சந்தானங்கள் நிறைந்து இருப்பார்கள்
No comments:
Post a Comment