கோமடி சங்கு
ஒரு வலம்புரி சங்கு கோடி இடம்புரி சங்குக்கு சமம்
வலம்புரி சங்கினால் அபிஷேகம்
செய்தல் சிறப்பானது.
அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படுவது கோமடி சங்கு
கோமடிசங்கில் அபிஷேகம் செய்வது மிக மிக விசேஷம்
கோமடிசங்கை அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில்இருந்து நேரிடையாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது போலாகும்
(கோ=பசு ,மடி=பால்சுரக்குமிடம்)
மேல்மருவத்தூர் அருகிலுள்ள பெரும்பேர்கண்டிகை என்னும் ஊரில் இங்குள்ள தான்தோன்றீஸ்வரருக்கு
கோமடி சங்கினால் தினசரி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்
இந்த அபிஷேகம் நடைபெறும் சமயம் அமிர்தவர்ஷினி ராகத்தில் பாட்டு பாடுகின்றனர்
அம்பாளே இந்த
அபிஷேகத்தை சிவனுக்கு செய்வதாக ஐதீகம்
தட்சிணாமூர்த்தியின் சீடர்களான சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமார் ஆகிய நால்வரும் இங்கிருந்துதான் நந்தியின் வடிவில் ஈசனின் திருமணக்காட்சியை கண்டனர்.
கோமடி சங்கு உண்மையானதாக இருப்பின் பசு மடியின் கீழ் கொண்டு வைத்தால் பசு தானாக பால் கரக்கும் நேரில் கண்ட அனுபவம் வியந்தேன் அம்மையப்பன் அருளைக்கண்டு.
No comments:
Post a Comment