Sunday, 3 January 2016

குபேரனின் சிந்தாமணி மந்திரம்

குபேரனின் சிந்தாமணி மந்திரம்

மந்திரம்நம் வழிபடும் தெய்வங்களுக்கு மூலமந்திரங்கள் உள்பட பல வகைப்பட்ட மந்திரங்கள் உள்ளன.

அவை ஒருவரி மூலம், மூலமந்திரம், காயத்ரி மந்திரம், மாலா மந்திரம், அஷ்டகம், தியானம், (16) நாமாவளி என்று இருக்கிறது. இவற்றில் சேராமல் மிகவும் சக்தி வாய்ந்தது பதஞ்சலி முனிவர் சொன்ன சிந்தாமணி மந்திரம்.

கேட்டதைத் தரும் சிந்தாமணி என்ற பழமொழி வழக்கத்தில்  இருக்கிறது. அப்படிப்பட்ட குபேர சிந்தாமணி மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் குபேர காலத்தில் தகுந்த குருவிடம் உபதேசமாக பெற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் ஜெபம் செய்து வாருங்கள். சிந்தாமணி மந்திரத்தால் லட்சுமி குபேரன் மகிழ்ந்து தனம் சேர்ப்பார்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் க்லீம் ஐம் உனபதுமாம் தேவஸக
கீர்த்திஸ்ச மணினா ஸக: ப்ராதுர் பூதேஸ்மி
ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம் வருத்திம் ததாதுமே
ஓம் குபேராய ஐஸ்வர்யாய தனதான்யாதிபதயே
தன விருத்திம் குருகுரு ஸ்வாஹா!

பனை ஓலையில் எழுத்தாணியால் எழுதி படிப்பதாலும் தாமிரத்தகட்டில்   குபேர சக்கரமும் எழுதி ஐங்காயத்தைப் பூசி அதிகாலையில்108 தடவை ஜெபம் செய்து வர வீடும், தொழிலகமும் அபரிமிதமான செல்வத்தைச் சேர்க்கும் என்பது பெரியோர் வாக்கு-ரத்தின கோசர நூல்.

No comments:

Post a Comment