Monday, 4 January 2016

பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் இந்த வருடம் செய்ய வேண்டிய சடங்கு

பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் இந்த வருடம் செய்ய வேண்டிய சடங்கு

(ஒரு பெண் குழந்தை இருப்பவர்கள் வீட்டில் மட்டும்)

2016 பிறந்த நேரம் பெண்களுக்கு அவ்வளவு நன்மையான நேரமாக அமையவில்லை என சான்றோர்கள் சிலர் கணித்துள்ளனர்.

முக்கியமாக ஒரு பெண் மட்டும் இருக்கும் இல்லங்களில் பெண்களின் நலன், வீட்டின் அமைதி, பண வரவு, சுப காரியங்களில் சில இன்னல்கள் மற்றும் தாமதங்கள் ஏற்படலாம்.

இதற்கு பரிகாரம் உண்டாம் :

பெண்ணைப் பெற்றோர் ஒன்பது பேரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை யாசகம் பெறவேண்டும்.

யாசகம் பெற்ற ஒன்பது ரூபாய் நாணயங்களையும் ஒரு மஞ்சள் துணியில் முடிந்து விடுங்கள்.

அம்மன் கோவிலிற்கு சென்று யாசகம் பெற்ற ஒன்பது ரூபாய் நாணயங்களையும் அம்மன் காலடியில் வைத்து வாங்கிக்கொண்டு, அம்மன் சன்னதியில் ஒன்பது நெய் தீபமிட்டு, அம்மனை வணங்கியப் பின், இந்த நாணய முடிப்பை அம்மன் சன்னதியில் உள்ள உண்டியலில் போட்டு விடுங்கள்.

நாணயத்தை உண்டியலில் போட்ட பின்பு, கோவிலில் உட்காரக்கூடாது.

குறிப்பாக அம்மன் கோவிலில் தான் இந்த பரிஹார சடங்கை செய்ய வேண்டும் என சொல்வதன் காரணம் என்ன ?

சக்தி ஸ்வரூபம் தேவி, எதையும் சமாளிக்கும் வலிமையை தருவது சக்தியே, ஆகவே தான் இந்த சடங்கை அம்மன் கோவில்களில் செய்வது உட்சிதம்.

எந்த அம்மன் கோவிலில் வேண்டுமானாலும் செய்யலாம்.

பகல் பொழுதிலேயே இதை செய்து விடவும், மாலை சூரியன் மறையும் போதோ, மறைந்த பின்போ இதை செய்வதை தவிர்க்கவும்.

அன்று மாலை வீட்டில் நெய் தீபம் ஏற்றி அம்மன் ஸ்துதி கூறி , வாசலிலும் ஒரு தீபம் வைத்து வழிபடுங்கள். சுபம் உண்டாகும் !

No comments:

Post a Comment