Sunday, 3 January 2016

சித்த-மருத்துவம்

சித்த-மருத்துவம் !!!

1. தினமும் புதினா துவையலை சாப்பிட்டு வர வயிற்றுக் கோளாறுகள் தீரும்.
2.எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து பருகி வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
3.மூச்சு வாங்கும் தொந்தரவு தீர தூதுவளை மாமருந்தாகும்.
4.ஜாதிக்காயுடன் சந்தனம், மிளகு சேர்த்து மை போல அரைத்து முகத்தில் தடவி வர பருக்கள் மறையும்.
5.எலுமிச்சம்பழத்தின் சாற்றை ஓரிரு துளிகள் காதில் விட காதுவலி தீரும்.
6.தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பப்பாளிப் பழம் சாப்பிட குணமாகும்.
7.கொய்யாப்பழம் தினசரி சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை வராமல் தடுக்கலாம்.
8.தினமும் கேரட், காளிப்பிளவர் சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
9.தினமும் கோவைப்பழம் சாப்பிட்டு வர பல்வலி நிவாரணம் பெரும்.
10.அத்திப்பழத்தை  தினத்தோறும் ஐந்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி சரியாகும்.

1. காய்ச்சல் தீர:
நார்த்தங்காய் இலைகளை நன்றாக வேக வைத்து, அந்நீரைக் கசாயம் செய்து குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும்.
2. இளம் நரை மறைய:
நெல்லி வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் இவைகளை இளமையில் நரை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் விரைவில் இளநரை மறையும் கருமுடி வளரும்..
3. ஞாபக சக்திக்கும், பல் உறுதிக்கும்:
தினமும் ஒரு மாதுளம்பழத்தை சாப்பிட்டோ, அல்லது மூன்று வேளை உணவுகளிலும் கொஞ்சம் மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி பெருகும், எலும்பு உறுதிப்படும், பற்கள் உறுதிப்படும்.
4. பேன் அழிய:
மலை வேம்பு மர இலையை நன்கு அரைத்து இருவேளை தலையில் பூசி குளித்து வர பேன் ஒழியும்.
5. கொழுப்பு குறைய:
தினமும் நாம் உண்ணும் உணவில் பூண்டு, வெங்காயம் (சிறியது, பெரியது) அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் தேவையற்ற கொழுப்பு குறையும்.
6. ஜீரண சக்திக்கு:
உணவில் நார்த்தங்காய் ஊறுகாய் சேர்த்து உண்டு வர, மலச்சிக்கல் தீர்ந்து நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.
7. வாய்ப்புண் குணமாக:
மணத்தக்காளிக்கீரை, அகத்திக்கீரை என்ற இவ்விரு கீரைகளையும் நன்கு சமைத்து சாப்பிட்டு வந்தால் இரண்டு நாளில் வாய்ப்புண் தீரும்.
8. மூக்கடைப்பு நீங்க:
புதிதாய் மலர்ந்த புத்தம் புது ரோஜாப் பூவை நன்கு முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
9. வேர்க்குரு சரியாக:
பப்பாளிக்காய் பாலை, வெங்காயச் சாறுடன் கலந்து வேர்க்குரு உள்ள இடத்தில் தடவி வந்தால் வேர்க்குரு குணமாகும்.
10. நெஞ்சுவலி நீங்க:
சுத்தமான தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து, இதை நன்கு சுட வைத்த பின் கொஞ்சம் ஆறிய மிதமான சூட்டில் உள்ள இக்கலவையை நெஞ்சில் தடவினால் நெஞ்சுவலி குணமாகும்.
11. வயிற்றுப்பூச்சி ஒழிய:
உணவில் தினமும் அன்னாசிப் பழம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சித் தொல்லை ஒழியும்.
12. பல் உறுதி பெற:
மாமரத்திலுள்ள மா இலையைக் காய வைத்து, நன்கு பொடியாக்கிய பின், இத்தூளைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பல் உறுதி பெறும்.

உடல்பலம்பெற:
அம்மன் பச்சரிசி இலை, தூதுவளை இலையுடன் சேர்த்து உண்டால் உடல் பலம் பெறும்.

உடல்புண் ஆற:
நம் வாயில் உள்ள எச்சிலுக்கு மருத்துவ குணம் உண்டு. உடலில் ஏற்பட்ட சிராய்ப்பு புண் மீது எச்சிலைத் தடவி வந்தால் புண் ஆறும்.

மேனி பளபளப்பாக:
ஆரஞ்சுப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வர மேனி பளபளப்புப்  பெறும்.

கடுங்காய்ச்சல்:
நொச்சி இலைப் சுடுநீரில் போட்டு நீராவி பிடிக்க கடுங்காய்ச்சல் குணமாகும்.

நரம்புவலி குறைய:
துளசி விதைகளைத்  தூள் செய்து சாப்பிட்டு வந்தால் நரம்புகளில் ஏற்படும் வலி குணமாகும்.

காசநோய் குணமாக:
தினமும் அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும்.

வாய்ப்புண் குணமாக:
நெல்லி, மா  இலைச்சாற்றை நீரில் இட்டு நான்கு காய்ச்சி வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.

தோல் சம்பந்தமான நோய் தீர:
குப்பை மேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து தினசரி குளித்து வர தோல் சம்பந்தமான நோய் குணமாகும்.

குழந்தையின் வயிற்றுவலி தீர:
வசம்பை பொடியாக்கி 100 மில்லி தாய்ப்பாலில் கலக்கி குழந்தைக்கு கொடுக்க வயிற்றுவலி குணமாகும்.

கண் பாதுகாப்பிற்கு:
ஒரு துணியை மஞ்சள் கலக்கிய நீரில் நினைத்து, அத்துணியை நிழலில் உலர்த்தி கண்களைத் துடைத்து வர கண் சம்பந்தமான நோய் தீரும்.

மார்புச்சளி குணமாக:
ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மார்புச் சளி குணமாகும்.

ரத்தம் சுத்தமாக இருக்க:
திராட்சை, சாத்துக்குடி பழத்தை உண்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்

1. பல்வலி, பல் நோய் தீர:
ஆலமரத்துப் பட்டையை மை போலப் பொடி செய்து கொள்ளவும். நீரைக்  கொதிக்க வைத்த பின் இதோடு சர்க்கரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். இவ்வாறு மூன்று மாதம் சாப்பிட்டு வர பல்நோய் குணமாகும்.
2.கண் பார்வை தெளிவடைய:
பாதாம் பருப்பை வறுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
3.வேர்க்குரு நீங்க:
வடித்த கஞ்சியின்  சூடு ஆறிய பின், உடலில் தடவி குளிர் நீரில் குளித்து வந்தால் வேர்க்குருத் தொல்லை தீரும். அல்லது வெங்காயத்தை இடித்துச் சாறாக்கி வைத்துக்கொண்டு, இதனுடன் பப்பாளிப் பாலை கலந்து வேர்க்குரு உள்ள இடத்தில் தடவி வந்தால் வேர்க்குரு தொல்லை தீரும்.சருமமும் பளபளப்பாகும்.
4.வாயுத்தொல்லை, வயிற்றுப்புண் குணமாக:
நம் உடலில் உள்ள சூட்டைத் தனித்து குளிர்ச்சி தரக்கூடியது நாவற்பழம்.இப்பழத்தை வாயுத்தொல்லை உள்ளவர்களும், வயிற்றில் புண் உள்ளவர்களும் தொடர்ந்து உண்டு வந்தால் இப்பிரச்சனை தீரும்.
5.அஜீரணத் தொல்லை தீர:
சிறு குவளை நீரில் கருவேப்பிலை, சீரகம், இஞ்சி இம்மூன்றையும் போட்டு நன்கு கொதிக்க வைத்தபின், அதை ஆறவைத்து, இந்நீரை வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் சரியாகும்.
6.வலிப்பு நோய் தீர:
வலிப்பு நோய் உள்ளவர்கள் வெள்ளை வேங்காயத்தை நன்கு நசுக்கிய பின் ஒரு துணியில் கட்டிப் பிழிந்து சாறு எடுத்து, இந்தச் சாற்றை இரண்டு காதுகளிலும் ஊற்றினால் வலிப்பு உடனே குணமாகும்.
7.மனக் கோளாறு குணமாக:
மனப்பிரச்சனை உள்ளவர்கள் ஓராண்டுக்கு இரண்டு முறை தங்களது கைகளில் மருதாணி அரைத்துப் பூச வேண்டும். இவ்வாறு கை.கால்களில் மருதாணி இடுவதினால் உங்களுக்கு வரும் னக்கோளாறுகள் வராமல் தடுக்கலாம்.
8.நெஞ்சுவலி குணமாக:
நெஞ்சுவலி உள்ளவர்கள் தினமும் இலந்தைப் பழம் சாப்பிட்டு    வர நெஞ்சுவலி குணமாகும்.
9. முகச்சுருக்கம் நீங்க:
முகத்தில் சுருக்கம் உள்ளவர்கள், முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொண்டு, மிருதுவான பஞ்சை இவ்வெள்ளைக்  கருவில் தோய்த்து முகம், கழுத்தில் தடவிய பின் அரைமணி நேரம் கழித்து ஈரப்பஞ்சினால் துடைத்து வந்தால் முகச்சுருக்கம் தீரும்.
10. மூட்டு வலி தீர:
அத்தி மரத்துப் பாலை எடுத்து மூட்டு வலி உள்ள இடத்தில் பற்றுப் போட்டால் மூட்டு வலி தீரும்.
11. சலித்தொல்லை தீர:
இஞ்சிச் சாற்றையும், துளசிச் சாற்றையும் சம அளவு எடுத்து, இவ்விரண்டையும் நன்கு கலந்து குடித்து வந்தால் சளித்தொல்லை தீரும்.

1. உடல் பலவீனம் நீங்க : பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் பலம்  பெரும்.
2. ரத்தம் சுத்தம் பெற : தினமும் அருகம்புல் பானம் குடித்து வந்தால் ரத்தம்  சுத்தமாவதோடு, ரத்த விருத்தியும் உண்டாகும்.
3. வயிற்றுபுண் குணமாக :மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு  வந்தால் வாய்ப்புண்னும், வயிற்றுப்புண்னும்                              குணமாகும்.
4. மூல நோய் தீர : புங்க மரத்துப் பட்டையை வேகவைத்து அந்த  நீரைக்   குடித்து வந்தால் மூலம் குணமாகும்.
5. இதய நோய் தீர :  மூன்று திராட்சைப் பழத்தை வெந்நீரில் ஊறவைத்து,   சாறு எடுத்து சம அளவு துளசிச் சாற்றை இதோடு  சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்,படபடப்பும்  குறையும்.
6. நரை முடி கருப்பாக: முளைக்கீரையை வாரம் ஒருநாள் தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் நரை குறையும்.
7. உடல் வலிமை பெற: வேப்பம்பூவை கசாயம் வைத்துக் குடித்து வந்தால்  உடல் வலிமை பெரும்.
8. பற்கள் கெட்டி பெற; மாவிலையில் பற்களைத் தேய்த்து வந்தால்  பற்களின்  ஈறுகள் கெட்டிப்படும்.
9. ரத்த அழுத்தம் குறைய: தினமும் மீன் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம்  குறையும்.
10. உதிரப்போக்கு நிற்க: குப்பை மேனி இலை ஒரு கைப்பிடி, 1 தேக்கரண்டி  சீரகம் சேர்ந்து அரைத்துப் பசும்பாலில் கலந்து                           சாப்பிட்டு வர ரத்தப் போக்கு நிற்கும்.
11. காசநோய் தீர:  தினமும் உணவில் அன்னாசிப் பழம் சேர்ந்து சாப்பிட்டு வர   காச நோய் தீரும்.
12. கண்பார்வை தெளிவடைய: இரண்டு முந்திரிப் பருப்பு, 1 தேக்கரண்டி   கசகசாவை அரைத்துப் பாலில் கலக்கிக் காலை                                வெளியில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை   கூர்மையாகும்,  சருமமும் மினுமினுப்பாகும்.
13. வெட்டுக்காயம் குணமாக: கண்ணாடித்துண்டால் நம் உடலில் காயம்  ஏற்ப்பட்டால், வாழைப்பழத்தை அந்தக் காயத்தின் மீது வைத்துக் கட்டினால் ரத்தப் போக்கு நின்று   காயம் விரைவில் ஆறும்.

No comments:

Post a Comment