Saturday, 2 January 2016

வற்றாத வளமைக்கு - செல்வ செழிப்பிற்கு வசிய வார்த்தை முறை

வற்றாத வளமைக்கு - செல்வ செழிப்பிற்கு வசிய வார்த்தை முறை

நாம் ஏற்கனவே கொடுத்த வசிய வார்த்தை முறையான 'ஏகம் அநேகம் அனுதினம் வந்தேறும்' பலரால் இன்றும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டும் அதனால் நன்மைகள் பெற்றும் வருவது பலர் சொல்ல கேட்டு வருகிறோம்-அன்றாடம்.
தற்போது அதன் அடுத்த முறையான ஒன்றை கொடுக்க உள்ளோம். முதல் முறையை செய்பவர்கள் அதை தொடர்ந்து இதையும் செய்யலாம். அல்லாதவர்கள் இதை மட்டும் தொடர்ந்து செய்து வரலாம்.
காலை குளித்து முடித்ததும் இறை வழிபாட்டின் போது இதை தொடர்ந்து 15 முறை செய்து விட்டு தங்களின் அன்றாட வேலைகளை தொடர தொட்ட அனைத்து காரியங்களும் பலிதமாவது உறுதி. வசிய வார்த்தை கொடுக்கப்பட்டுள்ளது. அதை கூறுகையில் அந்தந்த மந்திரத்திற்கு உரிய இடத்தை உங்களின் ஐந்து வலது கை நுனியும் படுமாறு வைத்து தொட்டு கொண்டே மந்திரத்தை கூறி முடிக்கவும்.
" ஏகம் சௌஜன்யம் சௌகர்யம் சௌபாக்யம் அநேகம்'
ஏகம் : உச்சந்தலை
சௌஜன்யம் : நெற்றி
சௌகர்யம் : தொண்டைகுழி
சௌபாக்யம்: நடு மார்பு குழி
அநேகம் : தொப்புள் குழி
தொடர் தோல்விகளை தடுத்து நிறுத்தும் சக்தியை கொண்டது மேற்கண்ட முறை-கிழக்கு நோக்கி நின்று செய்து வரலாம்-தேவைகள் உள்ளவரை.

No comments:

Post a Comment