Thursday, 7 January 2016

செவ்வாயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரம்

செவ்வாயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரம்

பரிகார பைரவர் - சண்ட பைரவர் + கவுமாரி - செவ்வாய்

பரிகார முறை:

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திய பின்பு தான் பரிகார முறைகளை செய்ய வேண்டும். அனைத்து விலங்குகளின் கறி மற்றும் முட்டை மற்றும் மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் மைதாவினால் செய்யப்பட்ட இனிப்புகளும் அசைவம் ஆகும். மைதா மாவில் முட்டையில் வெண்கரு சேர்க்கப்படுவதாலும் மேலும் கரும்பு சர்க்கரையில் எலும்புச் சாம்பல் சேர்க்கப்படுவதாலும் இவையிரண்டும் அசைவ பொருட்களே ஆகும்.

அசைவத்தினை நிறுத்தாமல் பைரவ வழிபாடு செய்தால் எதிர்மறை விளைவுகள் உண்டாகும். முழுமையான பலன் கிடைக்காது. நாய் வந்து கடிக்கும். பைரவரே அசைவத்தினை நிறுத்த வைப்பார். தண்டித்து திருத்துவார்.

அருகிலுள்ள சிவத்தலத்தில் உள்ள பைரவர் சந்நிதிக்கு மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் செவ்வாய் ஓரையில் அல்லது செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் வழிபாடு செய்ய வேண்டும்.

ஒரு வாழையிலையில் துவரை பரப்பி அதன் மேல் 9 புது மண் அகல்கள் வைத்து ஒவ்வொன்றிலும் 9 துவரைகள் போட்டு 5 எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்ற வேண்டும். சிவப்பு நிற துணியில் 27 மிளகுகள் வைத்து முடிச்சு போட்டு திரியாக செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு 9 திரிகள் செய்து ஒவ்வொரு அகலிலும் வைத்து மொத்தம் 9 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

அவரவர் வீட்டில் செய்த துவரம் பருப்பு சாதம் படையலாக வைக்க வேண்டும்.

பைரவர் பெருமானுக்கு செவ்வரளி பூவினை சாற்றி அவரவர் பிறந்த கோத்திரம், நட்சத்திரம், ராசி, பெயரில் மற்றும் குலதெய்வத்தின் பெயர் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சகருக்கு காணிக்கையாக தங்களில் வயதுக்குரிய எண்ணிக்கையின் பணத்தினை தர வேண்டும். அதாவது 45 வயது எனில் 45 ரூபாய்கள் தர வேண்டும்.

பின்பு கீழ்க்காணும் மந்திரங்களை 9 ன் மடங்குகளில் (9, 18, 27, 36, …) செபம் செய்ய வேண்டும்.

ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்

ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ; கவுமாரி ப்ரசோதயாத்

மந்திர செபம் செய்த பின்பு வேறு எந்த கோவிலுக்கோ அல்லது மற்றவர்களின் இல்லங்களுக்கோ செல்லாமல் அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

இந்த பரிகார முறை 9 தடவைகள் செய்யப்பட வேண்டும். அதாவது 9 செவ்வாய்க்கிழமைகளோ அல்லது மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் வரும் நாளில் 9 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். அதற்குள் நல்ல பலன் கிட்டும்.

வழிபாடு செய்யும் நாட்களில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

பரிகாரத்தின் பலன்:-

பிறந்த ஜாதகத்தில் செவ்வாயின் பலம் குறைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தினை செய்ய வேண்டும். இதன் மூலம் செவ்வாயால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். தோஷங்கள் விலகும். பீடைகள் விலகும். நினைத்தவை நடக்கும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும். கடன் தொல்லை நீங்கும்.  வறுமையும், நோய்களும் நீங்கும்.  பூமி யோகங்கள் உண்டாகும்.

குறிப்பு:-

இந்த பரிகார வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. இது வழிபடுபவர்களின் ஜாதக தோஷங்களை முழுமையாக போக்கக்கூடியது. அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்தாதவர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் முறையற்ற உறவு உள்ளவர்கள் மேற்கண்ட பரிகார வழிபாட்டினை செய்ய வேண்டாம். மீறி செய்தால் பைரவ தண்டனை உண்டு. மேற்கண்ட ஒழுங்கீனங்களை நிறுத்தினால் மட்டுமே முழுமையான பலன் உண்டு மற்றும் பரிகார வழிபாடு வெகு விரைவில் பலனளிக்கும்.

No comments:

Post a Comment