Tuesday, 5 January 2016

2016 ஜனவரி மாத ராசிபலன்கள்.

2016 ஜனவரி மாத ராசிபலன்கள்.

மேஷம்:

மேஷ ராசி அன்பர்களே! இம்மாதம் 2-ந் தேதிக்கு பிறகு புதன் 10-ம் இடத்துக்கு வந்து நம்மை தருவார். பெண்களின் ஆதரவு கிடைக்கும் பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும். 14-ந் தேதிக்கு பிறகு பொருளாதார வளம் மேம்படும் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். 15-ந் தேதி சுக்கிரன் வக்கிரம் தனுசு ராசிக்கு மாறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரவளம் கூடும். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறலாம் மதிப்பு மரியாதை கூடும். புதிய சொத்து வாங்கலாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் மேன்மை காண்பர்.

அதிர்ஷ்டம்: 2,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும் சிவப்பு, பச்சை நலம் தரும் நிறங்கள். 3,4,5,6,9,10,14,15,21,22,23,24,25,30,31, ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.

ரிஷபம்:

ரிஷப ராசி அன்பர்களே! இம்மாதம் சுக்கிரனால் பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். கணவன் மனைவி இடையே அன்பு பெருகும். சுக்கிரன் 15-ந் தேதி வக்கிரம் அடைந்து மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறி வருகிறார். இதுவும் சிறப்பான நிலை தான். இதனால் வசதிகள் பெருகும். குடும்பம் மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.. வியாபாரிகள் மிகுந்த நற்பலன்களை காண்பர், வளர்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெற்று மகிழ்ச்சி காண்பர். புகழ், பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு இருந்த பிரச்சினைகள் 14-ந் தேதிக்கு பிறகு மறையும். 2-ந் தேதிக்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பொறுமையும், விட்டுக் கொடுத்து போகவும். உடல் நலம் பாதிக்கப்படலாம். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர்.

அதிர்ஷ்டம்: 4,5 அதிர்ஷ் எண்கள் ஆகும். மஞ்சள், நீலம் நலம் தரும் நிறங்கள். 5,6,7,8,11,12,13,16,17,18,24,25,26,27. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்கள்.

மிதுனம்:

மிதுன ராசி அன்பர்களே! இம்மாதம் 2-ந் தேதி புதன் 8-ம் இடத்துக்கு வருவதால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். சுக்கிரனும் அவசூரோடு இணைந்து இருப்பதால் வீட்டில் வசதிகள் பெருகும். குடும்பம் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். செவ்வாய் 4-ம் இடத்தில் இருப்பதால் சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்சினைவரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. அதேநேரம் செவ்வாய் வக்கிரம் அடைந்துள்ளதால் அவரால் பாதிப்புகள் அதிகம் நடக்காது. சூரியானால் மாத முற்பகுதியில் இருந்து அலைச்சல் அவப்பெயர் எல்லாம் 14-ந் தேதிக்கு பிறகு இருக்காது. ஆனால் அதன்பின் அவரால் அரசு வகையில் அனுகூலம் இருக்காது. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்து கொள்ளவும். சுக்கிரன் 15-ந் தேதி வக்கிரம் அடைவதால் பெண்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். உடல் நலம் லேசாக பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்டம்:அதிர்ஷ்ட எண்கள் 1,5 ஆகியவை ஆகும். சிவப்பு, பச்சை ஆகியவை அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும்.1,2,7,8,9,10,14,15,19,20,26,27,28,29, ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்..

கடகம்:

கடக ராசி அன்பர்களே! இம்மாதம் செவ்வாய் 3-ம் இடத்தில் இருப்பதால் தேய்வ அனுகூலம் கிடைக்கும். இதனால் எந்த தடைகளையும் முறியடித்து முன்னேற்றம் காண்பீர்கள். நிலம், வீட்டுமனை வாங்க யோகம் கூடி வரும். மேலும் 14-ந் தேதி வரை சூரியன் அனுகூலமாக நின்று பொருளாதார மேம்படுத்துவார். நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆனாலும் கணவன்-மனைவி இடையே பிரச்சினைகள் இருந்து வரலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருந்தாலும் மாதத் தொடக்கத்தில் சிறப்புகளை காணலாம். அதே நேரம் போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் மேன்மை அடைவர். வியாபாரிகள் சிறந்து விளங்குவார்கள். புதன் மாத தொடக்கத்தில் சாதகமாக நின்று பொருளாதார வளத்தை கூட்டுவார். சுக்கிரன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் மதிப்பு மரியாதை சுமாராக இருக்கும். கலைஞர்கள் சிரத்தை எடுத்து புதிய ஒப்பந்தங்கள் பெற வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பாராட்டு, புகழ் கிடைக்காமல் போகலாம். மாணவர்களும் முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

அதிர்ஷ்டம்:: 2,3 அதிர்ஷ்ட எண்கள். சிவப்பு, செந்தூரம். யோகம் தரும் நிறங்கள்.1,2,3,4,9,10,11,12,13,16,17,18,21,22,23,28,29,30,31.ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்..

சிம்மம்:

சிம்ம ராசி அன்பர்களே! இம்மதாம் குரு, சனி, ராகு ஆகியோரின் நன்மை தொடர்வதோடு புதன், சூரியன் ஆகியோர் சாதகமான இடத்துக்கு வருவதால் கூடுதல் முன்னேற்றத்தை காணலாம். 14-ந் தேதிக்கு பிறகு சூரியனால் நினைத்த காரியம் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மிகவும் சிறப்பான நிலையில் இருப்பர். பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கூடுதலாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபம் கிடைக்க பெறலாம். சுக்கிரனால் சிற்சில தடைகள் வரலாம். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். 15-ந் தேதி வக்கிரம் அடைவதால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. 2-ந் தேதிக்கு பிறகு புதனால் எடுத்த காரியம் வேற்றி அடையும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். செவ்வாயால் அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம்.

அதிர்ஷ்டம்: 4,6 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். மஞ்சள், பச்சை நலம் தரும் நிறங்கள். 3,4,5,6,11,12,13,14,15,19,20,24,25,30,31. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே! மாதத் தொடக்கத்தில் புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். 2-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். சுக்கிரன் 5-ம் இடத்தில் இருப்பதால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். 15-ந் தேதி வக்கிரம் அடைவதால் உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் அதிக வேலைப்பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. உங்கள் வேலையை நீங்களே செய்தால் சிறப்பு. வியாபாரிகள் சிறப்பு பெறுவர். கலைஞர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். செவ்வாயால் உலம் நலம் சுமாராக இருக்கும்.

அதிர்ஷ்டம்:7,8 ஆகியவை அதிர்ஷ்ட எண்களாகும். வெள்ளை, நலம் தரும் நிறம். 5,6,7,8,14,15,16,17,18,21,22,23,26,27, ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.

துலாம்:

துலாம் ராசி அன்பர்களே! இம்மாதம் தொடர்ந்து பொருளாதார வளம் சிறப்பகவே இருக்கும். 14-ந் தேதி வரை சூரியன் நல்ல வளத்தை தருவார். புதனால் இருந்து வந்த பகைவர்களின் தொல்லை, அரசு வகையில் ஏற்பட்ட அணுகூலமற்ற போக்கு போன்றவை மறையும் மேலூம் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சூரியனால் மாத பிற்பகுதியில் பெண்களிடம் விரோதம் ஏற்படலாம். ஏனவே இனம் தெரியாத பெண்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். சுக்கிரன் 4-ம் இடத்தில் இருப்பதால் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். 15-ந் தேதி வக்கிரம் அடைவதால் பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பொருள் விரயம் ஏற்படலாம். ஏது ஏப்படியானாலும் குரு சாதகமாக இருப்பதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து முன்னெற்றம் காணலாம். செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும். புதனாயல் ஏற்பட்டு வந்த அவப்பெயர் 2-ந் தேதிக்கு பிறகு இருக்காது. அரசு வகையில் இருந்து வந்த பிரச்சினகள் மறையும். செவ்வாய் 12-ம் இடத்தில் இருப்பதால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம்.

அதிர்ஷ்டம்:அதிர்ஷ்ட எண் 4,7 வெள்ளை, பச்சை நலம் தரும் நிறம். 1,2,7,8,9,10,16,17,18,19,20,24,25,28,29 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசி அன்பர்களே! இம்மாதம் மாத பிற்பகுதியில் நன்மைகள் அதிகம் கிடைக்கும். 14-ந் தேதிக்கு பிறகு சூரியன் சாதகமான இடத்திற்கு செல்கிறார். அவரால் பெரியோர்களின் ஆசியும், ஆதரவும் கிடைக்கும். எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். பொருளாதார வளம் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு மரியாதை சிற்ப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். உத்தியோகம் பார்ப்பவர்கள் சீரான நிலையில் இருப்பர். வேலைப்பளூ அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. அரசு ஊழியர்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பு பெறுவர். புதன் சாதகமற்ற் இடத்தில் இருப்பதால் பகைவர்களால் சிற்சில இடையூறுகள் வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வியாபாரம் சுமாராக இருக்கும்.உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். செவ்வாய் சாதகமாக இருப்பதால் புதிய நிலம் வாங்கலாம்.

அதிர்ஷ்டம்:அதிர்ஷ்ட எண்கள் 3,7 ஆகியவை ஆகும். வெள்ளை, சிவப்பு ஆகியவை அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும். 3,4,9,10,11,12,13,19,20,21,22,23,26,27,30,31 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.

தனுசு:

தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் 2-ம் இடத்தில் இருப்பதால் பொருளாதார வள சிறப்பாக இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். காரிய அனுகூலம் ஏர்படும். 15-ந்த தேதி வக்கிரம் அடைவதால் பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களா பொருள் சேரும். விருந்து விழா ஏன சென்று வருவீர்கள். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவபெயர் வரலாம். உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். 14-ந் தேதிக்கு பிறகு சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனமாக இருப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் ஏதிரிகளின் இடையூறு இருக்காது. சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி பணத்தை வீணாக்க வாய்ப்பு உண்டு. யாரிடமும் பார்த்து பழகவும். ஏது ஏப்படி இருந்தாலும் முக்கிய கிரகங்கள் பல சாதகமாக இருப்பதால் பல்வேறு சிறப்புகள் கிடைப்பதில் தடையேதும் கிடையாது. செவ்வாயால் உஷ்ணம், தோல், தொடர்பக சிற்சில உபாதைகள் வரலாம். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்டம்:அதிர்ஷ்ட எண்கள் 4,5 ஆகியவை ஆகும். வெள்ளை, கறுப்பு ஆகியவை அதிர்ஷ்ட நிறங்கள். 1,2,5,6,11,12,13,14,15,21,22,23,24,25,28,29 ஆகிய தேதிகள் ஆனுகூல மான நாட்களாக அமையும்.

மகரம்:

மகர ராசி அன்பர்களே! இம்மாதம் சுக்கிரன் சாதகமாக உங்கள் ராசியில் இருப்பதால் பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர்.அவர்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும்.விருந்து விழா என சென்று வருவீர்கள். பொருளாதார வளம் மேம்படும். தேவைகள் பூர்த்தி ஆகும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். 15-ந் தேதி வக்கிரம் அடைவதால் காரியத்தடை, பொருள் நஷ்டம் ஏற்படலாம். புதனால் வீட்டினுள் சிற்சில பிரச்சனை வரலாம். உறவினர்கள் வகையில் மனக்கிலேசம் வரலாம். செலவு அதிகரிக்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் இடமாற்றத்தை காணலாம். தொழிலில் வேலைப்பளூ அதிகரிக்கும். வியாபாரிகள் போதுமான லாபத்தை காணலாம். 14-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் ஏற்படும். செவ்வாய் 9-ம் இட்த்தில் இருப்பதால் முயற்சிகளில் தொல்வி ஏற்படலாம். பொருள் நஷ்டம் வரலாம். கலைஞர்கள் தொடர்ந்து நல்ல பலனை காணலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டம்:அதிர்ஷ்ட எண்கள் 4,8 ஆகியவை ஆகும். வெள்ளை அதிர்ஷ்ட நிறம். 3,4,7,8,14,15,16,17,18,24,25,26,27,30,31 ஆகிய தேதிகள் ஆனுகூல மான நாட்களாக அமையும்.

கும்பம்:

கும்ப ராசி அன்பர்களே! இம்மாதம் மாதத் தொடக்கத்தில் கூடுதல் நன்மை கிடைக்கும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் சீரான நிலையில் இருப்பர். சிலருக்கு மாத பிற்பகுதியில் இடமாற்றம் ஏற்படலாம். வேலைப்பளுவும் கூடலாம். சுக்கிரன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிற்சில தடைகள் வரலாம். ஆனால் சுக்கிரன் 15-ந் தேதி வக்கிரம் அடைவதால் பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் சற்று முயற்ச்சி எடுத்து முடிக்க வேண்டியதிருக்கும். பணப்புழக்கம் இருக்கும். செலவுகளும் அதிரிக்கலாம். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரும். உங்கள் முயற்சிகளில் தோல்வியை சந்திக்கும் நிலை உருவாகலாம். கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். செவ்வாய் 8-ம் இடத்தில் இருப்பதால் உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம்.

அதிர்ஷ்டம்: 1,9 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். மஞ்சள், சிவப்பு நலம் தரும் நிறங்கள்.1,2,5,6,9,10,16,17,18,19,20,26,27,28,29 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.

மீனம்:

மீன ராசி அன்பர்களே! இம்மாதம் புதனும் சூரியனும் இடமாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். பெண்களின் ஆதரவு உண்டு.பெண்களால் நற்சுகம் கிடைக்கும்,பொருள் சேரும்,குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும்.தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். பொருளாதார வளம் மேலும் சிறக்கும். அரசு வகையில் அனுகூலம் எற்படும். அரசின் உதவி கிட்டும். உடல் உபாதைகள் பூரண குணம் அடையும். 21,22,23-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். 11,12,13-ந் தேதிகளில் புத்தாடை-அணிகலங்கள் வாங்கலாம். மாணவர்களுக்கு புதனால் கல்வி வளம் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையும் கிடைக்க பெருவீர்கள். சுக்கிரனால் பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். சுக்கிரன் 15-ந் தேதி வக்கிரம் அடைந்து மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுவதால் எதிரிகளால் தொல்லை வரலாம். எனவே வீண்விவாதங்களில் ஈடுபாடு வேண்டாம். செவ்வாயால் அலைச்சல் ஏற்படும். மனைவி வகையில் தொல்லை வரலாம்.

அதிர்ஷ்டம்:3,5 ஆகியவை போகம் தரும் எண்கள். செந்தூரம், பச்சை உகந்த நிறங்கள். 1,2,3,4,7,8,11,12,13,19,20,21,22,23,28,29,30,31 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்

No comments:

Post a Comment