Saturday, 14 November 2015

சகஸ்ராரச் சக்கரம்

சகஸ்ராரச் சக்கரம் :-

பிரபஞ்சத்தோடும் இறைவனோடும் நம்மை இணைக்கும் சக்கரம் சகஸ்ராரம். இதுவே நமது சக்கரங்களில் மிகமிக சக்திவாய்ந்த சக்கரமாகும். பிற ஆறு சக்கரங்களையும் ஆளுகின்ற தலைமைச் சக்கரம் இது.

பல தந்திரயோக நூல்களில் சகஸ்ராரம் ஒரு சக்கரமல்ல; அது #பிரபஞ்சசக்தியின் அம்சமாக உடலில் உறைந்துள்ள சக்தி என்ற குறிப்பும் காணப்படுகிறது.

தொன்மையான தந்திரயோக நூல்களில், உடலிலுள்ள சக்கரங்களின் எண்ணிக்கை ஆறு என்றே எழுதப்பட்டுள்ளது. சகஸ்ராரம் சக்கரமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

பிற ஆறு சக்கரங்களைப்போன்றே, பிரபஞ்ச சக்தியை உடலினுள் கிரகித்துக் கொள்ளுதல், நாளமில்லா சுரப்பியை இயக்குதல் போன்ற பணிகளை சகஸ்ராரச் சக்கரமும் செய்வதால் அதை சக்கரமென்று அழைப்பதில் தவறில்லை. எனவே நாமும் அதை சக்கரமென்றே வகைப்படுத்துவோம்.

#இதழ்கள்:-

சகஸ்ராரச் சக்கரத்தை “ஆயிரம் இதழ் கொண்ட தாமரை’ என்று வர்ணிப்பதுண்டு. ஆனால் இந்த சக்கரத்திலுள்ள மொத்த இதழ்களின் எண்ணிக்கை தொள்ளாயிரத்து எழுபத்திரண்டு. (972).

#வண்ணம்:-

சகஸ்ராரச் சக்கரத்தின் வண்ணம் வான வில்லின் முதல் வண்ணமான “வயலட்’.

#பூதம்:-

ஆக்ஞை சக்கரத்தைப் போன்றே சகஸ்ராரச் சக்கரமும் தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மிகச் சக்கரம். இதற் கென ஒரு “பூதம்’ கிடையாது. பூதங்களின் ஆளுமைக்கு அப்பாற்பட்ட சக்கரம்.

புலன் (தன்மந்திரம்)- ஆன்மா.

புலனுறுப்பு (ஞானேந்திரியம்)- ஆன்மா.

செயலுறுப்பு (கர்மேந்திரியம்)- ஆன்மா.

சகஸ்ராரச் சக்கரம் பூதங்களின் ஆளுமைக்கு அப்பாற்பட்ட சக்கரமாக இருப்பதால், அதனுடன் தொடர்புடைய புலனோ, புலனுறுப்போ, செயலுறுப்போ கிடையாது. இது முழுக்க முழுக்க ஆன்மாவோடு தொடர்புடைய ஒரு சக்கரம்.

#நாளமில்லாசுரப்பி :-

சகஸ்ராரச் சக்கரம் நமது மூளையின் உள்ளே இருக்கும் “பிட்யூட்டரி’ என்ற நாளமில்லா சுரப்பியோடு தொடர்புடைய- அதை ஆளுகின்ற சக்கரமாகும்.

பிட்யூட்டரி சுரப்பியை தலைமைச் சுரப்பி (ஙஹள்ற்ங்ழ் ஏப்ஹய்க்) என்று அழைக்கிறோம். உடலிலுள்ள பிற நாள மில்லா சுரப்பிகள் அனைத்துமே பிட்யூட்டரி சுரப்பியின் ஆளுமையில்தான் உள்ளன.

பிற நாளமில்லா சுரப்பிகளின் இயக்கங் கள் அனைத்தையும் கண்காணித்து சீர் படுத்துவது பிட்யூட்டரி சுரப்பியின் பணி. இதுதவிர பிட்யூட்டரி சுரப்பியிலிருந்தும் பலவிதமான இயக்க நீர்கள் சுரக்கின்றன. உடலின் அனைத்து இயக்கங்களிலும் ஏதோவொரு வகையில் #பிட்யூட்டரி சுரப்பியின் ஆளுமை உள்ளது.

இந்த பிட்யூட்டரி சுரப்பியின் இயக்கங்களை சீர்படுத்துவது சகஸ்ராரச் சக்கரமாகும். ஆக, நமது முழு உடலையும் ஆளும் சக்கரமாக சகஸ்ராரச் சக்கரம் உள்ளது. சகஸ்ராரச் சக்கரத்தின் இயக்கம் சரியாக இருந்தால், உடலின் இயக்கங்களும் நலமாக இருக்கும்.

குணம்- சாத்வீகம்.

வாயு- கிடையாது.

லோகம்- சத்ய லோகம்.

கோசம்- சகஸ்ராரச் சக்கரம் நமது ஐந்தாவது கோசமான (சக்தி உடல்) ஆனந்தமய கோசத்தோடு தொடர்புடையது.

#ஆனந்தமயகோசம்(இன்று தமிழ் உமா அவன் அருளால்  உணர்ந்த கோசம்  இது..!) ..,வலுவாக இருந்தால் தான் மனம், உடல், ஆன்மா ஆகிய மூன்றும் இணைந்து இயங்கும் முழுமையான யோக நிலை உருவாகும்.

ஆனந்தமய கோசமே நமது உடலை ஒரு கோட்டை மதில்போன்று பாதுகாக்கும் சக்தி உடலாகும். இந்த கோசம் வலுவாக இருந்தால் எந்த நோய்க் கிருமிகளும் நமது உடலினுள் நுழையமுடியாது.

அனைத்துவிதமான எதிர்மறை சக்திகளையும் அதிர்வுகளையும் தடுத்து நிறுத்தி, பருவுடலைப் பாதுகாக்கும் சக்தியும் இந்த கோசத்திற்குண்டு.

ஆனந்தமய கோசம் உறுதியாக இருப்பவர்களை நோய்கள் மட்டுமின்றி, பில்லி, சூனியம், ஏவல், சாபம், வசியம் போன்ற எந்த எதிர் மறை சக்திகளும் அண்டமுடியாது.

#உடலுறுப்புகள்:-

வெளிமூளை (செரிபெரல் கார்ட்டெக்ஸ்), வலது கண் ஆகிய இரண்டும் சகஸ்ராரச் சக்கரத்தின் நேரடி ஆளுமையிலுள்ள உடல் பாகங்களாகும்.

சிந்தனை, படிப்பு, கற்பனை ஆகிய அனைத்துமே நமது வெளிமூளையின் செயல்பாடுகளாகும்.

தெய்வம்: சிவன்

அதிதேவதை: வருணன்.

# சகஸ்ராரச் சக்கரத்தின் சிறப்புத் தன்மைகள்:-

ஆன்மாவானது கருவினுள் சகஸ்ராரச் சக்கரத்தின் வழியாகவே நுழையும்.

இறக்கும்போது ஆன்மா இந்த சக்கரத்தின் வழியாகவே வெளியேறும்.

(செய்த கர்மங்களின் அடிப்படையில் வெவ்வேறு வழிகளில் ஆன்மா வெளியே செல்லுமென்ற கருத்தை தந்திர யோகம் ஏற்றுக்கொள்வதில்லை. தந்திர யோகத்தின்படி அனைத்து ஆன்மாக்களும் சகஸ்ராரம் வழியாகவே வெளியேறும்).

ஒரு குழந்தை பிறக்கும்போது சகஸ்ராரச் சக்கரம் திறந்த நிலையிலேயே பிறக்கும்.

சகஸ்ராரச் சக்கரத்தில் சக்தித் தடை களோ சக்தித் தேக்கமோ உருவாகாது.

பிற சக்கரங்களை தந்திர யோகப் பயிற்சிகளின் மூலமாக (குண்டலினி சக்தியால்) நம்மால் திறக்கமுடியும். முழு வீச்சில் செயல்படச் செய்யவும் முடியும். ஆனால் சகஸ்ராரச் சக்கரத்தினுள் குண்டலினி நுழைவது தானாகவே நிகழும். நமது முயற்சிகளாலோ அல்லது பயிற்சிகளாலோ அதை நடத்தமுடியாது. # யாம்  உணர்ந்தோம்  அவன் அருளால்..,

தந்திர யோகப் பயிற்சிகளால் ஆக்ஞை சக்கரம் வரையிலான ஆறு சக்கரங்களையும் திறக்கமுடியும். அதன்பின்னர் அவரவர் கர்மவினைகளின் அடிப்படையில் திடீரென ஒருநாள் தானாகவே குண்டலினி சக்தி சகஸ்ராரத்தினுள் சென்று அதைத் திறக்கும்.

இந்த நிகழ்வே “முக்தி நிலை’ எனப்படும். இந்த முக்தி நிலையை அடைந்தவர்களுக்கு மீண்டும் பூலோகத்தில் பிறவிகள் கிடையாது.

முக்தியடைந்த அந்த ஆன்மா இந்த பூலோகத்தைவிட்டு வெளியேறி, அடுத்த லோகமான புவர்லோகத்தில் சென்று சக்தி உடலாக வாழும்.

# துணைச் சக்கரங்கள்:-

ஆக்ஞை சக்கரத்திற்கும் சகஸ்ராரச் சக்கரத்திற்குமிடையே முக்கியமான பல துணைச் சக்கரங்கள் உள்ளன.

மன சக்கரம்

குரு சக்கரம்

சோம சக்கரம்

லலான சக்கரம்

ஞானச் சக்கரம்

மகாநாத சக்கரம்

பிந்து சக்கரம்

ஆகியவை முக்கியமானவை. ஆக்ஞை சக்கரம் குண்டலினியால் தூண்டப்பட்டு திறந்துகொண்ட பின்னர், நமது தந்திர யோகப் பயிற்சிகளால் இந்த துணைச் சக்கரங்களை ஒவ்வொன்றாக நம்மால் திறக்கமுடியும்.

குண்டலினி சக்தி சகஸ்ராரத்தைத் திறக்கும் போது ஏற்படும் உணர்வு நிலைகள்சகஸ்ராரச் சக்கரத்தினுள் குண்டலினி சக்தி நுழையும்போது ஏற்படும் உணர்வு நிலை மனித அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையாகும். இதையே “சமாதி நிலை’ அல்லது “ஜீவ சமாதி’ என்றும் அழைக்கிறோம்.

இந்த நிலையை அடைந்தவர்களின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் (ஐஹப்ர்) உருவாகும்.

சமாதி நிலையை அடைந்தவர்கள் தன்னுள்ளே ஒடுங்கிப்போவார்கள். (தாமச நாடி தூண்டப்படுவதால் இது நிகழுகிறது). அவர்கள் நிறைகுடம்; அதன்பின் தளும்பமாட்டார்கள்.

பேச்சு, பிரசங்கம், ஆரவாரங்கள் அனைத்தும் அடங்கிப்போகும். எல்லையற்ற ஆனந்த நிலையில் லயித்திருப்பார்கள். இது இறையோடு ஒன்றிய நிலை. மனித உணர்வுகளைக் கடந்த நிலை.

இந்த நிலையை அடைந்தவர்கள் எவரும் அந்த நிலை எப்படிப்பட்டது என்பதை விளக்கியதில்லை. அது விளக்கங்களால் புரிந்துகொள்ளமுடியாத ஒரு அனுபவம்.

# சகஸ்ராரச் சக்கரத்தினுள் குண்டலினி:-

நுழைந்தால் எத்தகைய உணர்வு நிலை ஏற்படும் என்ற கேள்விக்கு-

“கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’ என்பதையே பதிலாகக் கூறமுடியும்.

No comments:

Post a Comment