Friday 20 November 2015

கார்த்திகை தீப வரலாறு

கார்த்திகை தீப வரலாறு மற்றும் நாம் அறிந்திடாத அறிவியல் பின்னணி
கார்த்திகை தீப வரலாறு

ஆதி நடம் ஆடுமலை அன்றிருவர் தேடுமலை சோதிமதி ஆடரவம் சூடுமலை -நீதி

தழைக்குமலை ஞானத் தபோதனரை
வாவென்றழைக்கு மலை அண்ணாமலை
- குரு நமச்சிவாயர்

   இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறையே இவர்களுடைய பொறுப்பாகும். இவர்களில் மகேஸ்வர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன. இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

         இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது. இந்த ஐந்து சிவதலங்களையும் பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறார்கள். பஞ்ச என்றால் ஐந்து (5) என்று பொருள்படும்.

          பூதம் என்றால் பொருள் அல்லது சக்தி என்பதாகும். பஞ்ச பூதங்கள் என்றால், ஐந்து மூலசக்திகள் அல்லது ஐந்து அடிப்படை மூலாதாரங்களை குறிப்பதாகும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் உயிரினங்கள் வாழ முடியாது. ஆகவே அவற்றை இறைவனுக்கு இணையாக மதித்தனர் நம் முன்னோர்கள்.
ஆகவே முத்தொழில் முதல்வனான சிவனுடைய தலத்தில் அந்த ஐம்பூதங்களையும் வணங்கி வழிபட்டனர். இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முகவிளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது. பஞ்ச பூதங்களை பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும். அவை வருமாறு:-
         
           1. நிலம்- காஞ்சீபுரம், திருவாரூர்.
           2. நீர்- திருவானைக் காவல்
           3. நெருப்பு- திருவண்ணாமலை
   4.வாயு- திருக்காளகஸ்தி (ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது).
      5. ஆகாயம்- சிதம்பரம் இந்த பஞ்சபூத தலங்களில் நெருப்புத் தலமான திருவண்ணாமலை மற்ற தலங்களை விட பல சிறப்புகளையும், தனித்துவங்களையும் கொண்டது.

      சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல் பெற்ற தலமாகும். நினைத்தாலே முக்தி தரும் தலம். சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை. சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார்.

            இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், ``அண்ணாமலையானுக்கு அரோகரா'' என விண்அதிர முழக்கமிடுவார்கள். ``இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உன்முகத்தால் அத்வைத ஜோதியைக் காண்பது தான் தரிசனம் ஆகும்'' என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.
தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

   இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

  இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இது தான் தீபா திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும்.

கார்த்திகை தீப அறிவியல் பின்னணி
       
        கார்த்திகை தீபம், தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று. கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் இந்த விழா கொண்டாடப் படுகிறது.

         தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.
   
         நமது சங்க இலக்கியங்களில் இதை பற்றிய குரிப்புகள் காணபடுகின்றன. தமிழகத்தில் பழைமையான விழாக்களில் இதுவும் ஒன்று என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை. இந்த விழாவை பற்றி நம் மதங்களில் சொல்லபடுகின்ற கருத்துக்கள் நீங்கள் அறிந்தவையே.
      
         ஆனால், இந்த விழாவின் பின்னணியில் ஓர் அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது நம்மில் பலர் அறியாத ஒன்று. இன்று நம் நாட்டில் பரவி வரும் டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மை காப்பதற்கு நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த ஒரு அருமருந்து.
           
          தமிழகத்தில் மழை காலம் முடிந்த நிலையில் கொசு மற்றும் இன்ன பிற நுண்ணுயிர்கள்  பெரிதும் பரவும் இந்த கார்த்திகை மாதத்தில நம்மை காத்து கொள்வதற்கு இந்த தீப திருநாள் வழி வகை செய்கிறது. கார்த்திகை தீபத்தில் பயன் படுத்த படும் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் பருத்தித் திரியில் எரியும் போது அதில் இருந்து வரும் நெடியானது கொசு மற்றும் பிற நுண்ணுயிர்களின் வளர்ச்சியை முற்றிலும் அழிக்கிறது.
          
           நம் குடும்பத்தை பற்றி பெரிதும் அக்கறை படும் நாம், பிற வேலைகளை காரணம் காட்டியும், leave கிடைக்கவில்லை என்று சாக்கு சொல்லியும் இந்த விழாவை தவிர்க்கலாமா ?

     இந்த உண்மை அறியாமல், "பழைய வழக்கம் நமக்கு எதற்கு, சாஸ்திரத்துக்கு ரெண்டு விளக்கு ஏற்றுவோம்" என்று இல்லாமல் இல்லம் நிறைய விளக்கு ஏற்றி நம்மை காத்து கொள்வோம்.

No comments:

Post a Comment