Tuesday, 24 November 2015

தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டியக்கடமைகள்!!!

தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டியக்கடமைகள்!!!

1.நம்மிடம் பழகும் சிலர் எதெற்கெடுத்தாலும் நெகடிவ்வாகப் பேசிக்கொண்டே இருப்பார்கள்;நமது சிலபல முயற்சிகளில் ஒருசில தோல்வியில் முடிவதுண்டு;இதை அவர்களிடம் சொல்லி ஆறுதல் கேட்க நினைப்போம்;ஆனால்,இவர்கள் முகத்தில் சந்தோஷம் பொங்கும்; “நான் தான் அப்பவே சொன்னேன்ல” என்பார்கள்.ஆனால்,இவர்கள் ஒருபோதும் ஆறுதல் சொல்ல மாட்டார்கள்.இப்படிப்பட்டவர்களை நமது நட்பு வட்டத்தில் சேர்க்கவே கூடாது.சேர்த்தால் இவர்களின் மனோபாவம் நமக்கும் பரவி விடும்.அப்படி பரவி விட்டால்,நம் கதி அதோ கதிதான்.

2.சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் சொல்கிறது:உங்களின் வயது,சாப்பிடும் மருந்துகள்,பட்ட அவமானங்கள்,நாம் ஜபிக்கும் மந்திரங்கள் மற்றும் வழிபாடுகள் = இவைகளை ஒருபோதும் பிறருக்குத் தெரியாமல் வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த கருத்தின் அடிப்படையில் ஒரு பெரிய்ய்ய்ய்ய பதிவே எழுதலாம். நாம் ஏதாவது ஒரு கோவிலுக்கு பரிகாரத்துக்குச் செல்வதாக இருந்தால்,போகும் முன்பும் போய்விட்டு வந்தப்பின்னரும் எவரிடமும் அதுபற்றிச் சொல்லாமல் இருப்பது அவசியம்.இதன் மூலமாக நமது எதிரிகளை(அனுகூல சத்ருக்களையும்)யும் ஏமாற்றிவிடலாம்.
3.அனுகூல சத்ரு என்றால் என்ன? நம்மோடு பழகுவார்கள்;நம்மோடு தினமும் சில மணித்துளிகள் செலவழிப்பார்கள் அல்லது நம்மோடு பணிபுரிவார்கள்;நமக்கு ஒருசில உதவிகளும் செய்வார்கள்.உடனே இவர்களை நாம் நல்லவர்கள் என்று நம்பிவிடுவோம்;
அப்படி நம்பியப்பிறகு நமது குடும்ப அந்தரங்கங்களையும் சொல்லிவிடுவோம்;நமது ஆன்மீக முயற்சிகள்,நமது தொழில் முன்னேற்றங்கள்,நமது சேமிப்புகள்,நமது சொத்துக்கள்,நமது குடும்ப அவமானங்கள்,நமது குடும்பத்தின் பெருமைகள் போன்றவைகளையும் அடிக்கடி மனம் திறந்து சொல்லிவிடுவோம்.இதற்காகத்தான் இவர்கள் இவ்வளவு நாள் காத்திருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது.நம்மைப் பற்றி முழுமையாக அறிந்தபின்னர்,நமது தொழில் வளர்ச்சி அல்லது குடும்ப ஒற்றுமையை சிதைக்கும் விதமாக மாந்திரீக வேலை ஏதாவது செய்துவிடுவார்கள்.
இந்த மாந்திரீகவேலை எப்படி வேலை செய்யும்? கோவில்பிரசாதம் என்று நமக்குத் தரலாம்; வாழைப்பழம் அல்லது பழரசம் அல்லது குளிர்பானம் அல்லது அசைவ உணவு அல்லது நமக்கு விருப்பமான பானம் அல்லது உணவு என்று ஏதாவது  ஒருவிதத்தில் நமது உடலுக்குள் அவர்களின் மாந்திரீகம் சென்று விடும்.அப்படிச் சென்றுவிட்டால்,நமது கனவில் அடிக்கடி எலும்புகள் அல்லது பயமூட்டும் கனவுகள் அடிக்கடி வரும்.அல்லது யார் நம்மீது அக்கறையாக இருக்கிறார்களோ அவர்களுக்கு சூட்சுமமாக காட்டும்.இது குறைந்தது 6 மாதங்களுக்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்கும் வேலை செய்யும்.நாம் யார்? நாம் தான் பகுத்தறிவுச் சிங்கமாச்சே! இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடுவோம்.நாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கிவிட்டால்,மாந்திரீகம் வேலை செய்யாமலா போய்விடும்?இவர்கள் தான் அனுகூலச் சத்ருக்கள்! இவர்களை அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது.
இவர்களிடமிருந்து எப்படி ஒதுங்குவது? எல்லோரிடமும் எப்போதும் உண்மையைப் பேசாதீர்கள்.இப்படி உண்மையைப்  பேசித்தான் பல குடும்பங்கள் சிதைந்து வருகின்றன. உண்மை என்ற மகாராணியை பொய் என்ற காவலர்களை வைத்து பாதுகாக்க வேண்டும் என்பது நவீன சாணக்கியத்தனம் ஆகும்.நம்மில் சிலர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வேலை பார்ப்பதாகச் சொல்லுவர்;சிலர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான சம்பளத் தொகையைச் சொல்லுபவர்களும் உண்டு.நமது பார்வையில் இவர்கள் பிராடுகள் என்று நினைப்போம்;இந்த கலியுகத்தில் இவர்களைப் போல வாழப் பழகாவிட்டால் நாம் தொலைந்தோம்.
சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் நமது ஒவ்வொருவருக்குமே இன்றைய வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நிறைய்ய போதிக்கிறது.அதில் ஒன்று: வளைந்து நெளிந்து இருக்கும் எந்த ஒரு மரத்தையும் தச்சர்கள் வெட்ட மாட்டார்கள்.நேராக இருக்கும் மரத்தையே வெட்டுவார்கள்.அதுபோல நீங்கள் எல்லோரிடமும் உங்களைப் பற்றிய உண்மைகளை மட்டுமே சொன்னால்,சிலர் பொறாமைப்படுவார்கள்,ஆனால்,பலர் உங்களை உங்கள் துறையில் அல்லது உங்கள் குடும்ப ஒற்றுமையை வீழ்த்திட நீங்களே வழி அமைத்துக்கொடுத்ததாக அர்த்தமாகிவிடும்.

4.ஒருபோதும் இடுப்பில் அரைஞாண் கயிறு இல்லாமல் இருக்கக் கூடாது.இந்த  அரைஞாண் கயிறு சிகப்பாக மட்டுமே இருக்க வேண்டும்.இது பெண்களுக்கும் பொருந்தும்.
5.ஒருபோதும் கழுத்தில் கட்டப்படும் ருத்ராட்சம் சிகப்புக் கயிற்றில் மட்டுமே கட்டப்பட்டிருக்க வேண்டும்.தமிழ்நாட்டில் பலர் கறுப்புக்கயிற்றில் கட்டியிருக்கிறார்கள்.இது மிகவும் தவறு.இது அவர்களின் மனநிலையை படிப்படியாகப் பாதிக்கும்.
6.ஒருபோதும் நிர்வாணமாக குளிக்கக் கூடாது.அப்படிக் குளித்தால் நமது செல்வச் செழிப்பு நம்மை விட்டுச் செல்வதற்கு நாமே காரணமாகிவிடுவோம்.
7.ஒரு போதும் நிர்வாணமாக தூங்கக் கூடாது.நிர்வாணமாகப்படுத்து,போர்வையை நம் மீது போர்த்தி தூங்கக் கூடாது.இப்படிச் செய்தால் நமது குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோம்.
8.ஒரு போதும் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அது நமது விட்டு மொட்டை மாடியாக இருந்தாலும் சரி,வேறு எந்த இடமாக இருந்தாலும்(காடு,கடற்கரையோரம்,நதிக்கரையோரம்) சரி.இப்படிச் செய்பவர்களை உடனே மோகினி மற்றும் யோகினிகள் பிடித்துக்கொள்ளும்.இதனால் காம இச்சை காம வெறியாக மாறிவிடும்.இந்த காம வெறிக்கு முடிவே கிடையாது.நம்பிக்கைக்குரிய ஆன்மீக குருக்கள் மூலமாகவே இந்த யோகினி அல்லது மோகினியை வெளியேற்ற முடியும்.அப்படிப்பட்டவர்கள் தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒருவர் கூட கிடையாதே? ஏன் வம்பினை ஓசிக்கு வாங்க வேண்டும்?(எதிர்காலத்தில்  அதீத உளவியல்துறைக்கு இன்றைய கம்யூட்டர் என் ஜினியரிங் துறை போல அதிகமுக்கியத்துவம் வரும்;அப்போது நமது பூமியில்,நமது தெருவில் இருக்கும் குலதெய்வங்கள்,சிறுதெய்வங்கள்,மோகினிகள்,யோகினிகளை நேரில் பார்க்கவும்,பேசவும் சந்தர்ப்பம் உண்டாகும்.அதுவரை நாம் பகுத்தறிவு வாதிகளாகத்தான்  இருப்போம்!!!)
9.ஒருபோதும் காம அனுபவங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.வீடியோ எடுக்கும் பழக்கம் வேகமாகப் பரவி வருகிறது.இது மஹா பாவம் மட்டுமல்ல;இதைவிடக் கீழான செயல் உலகில் கிடையாது.(காம சாஸ்திரம் சொல்லுவது என்னவெனில்,ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு காம இச்சையைத் தூண்டிவிட்டால்,அந்த ஆண் அந்தப் பெண்ணின் காம இச்சையைத் தணிக்க வேண்டும்.இது பெண்ணுக்கும் பொருந்தும்.எனவேதான் காம விஷயங்களில் கணவன் மனைவி என்ற சமுதாய அமைப்பு உருவானது.இதை மீறினால்,மிகப்பெரிய அழிவை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்;இன்று பொழுது போக்காக பலர் காம வலைப்பூக்களையும்,இணையதளங்களையும் நடத்திவருகின்றனர்.இது அவர்களின் பல பிறவிகளையும் கடுமையாக பாதிக்கும்;அவர்கள் வீட்டுப்  பெண்களின் நிம்மதியான வாழ்க்கையைச் சீர்குலைக்கும்.அது மட்டுமல்ல;இப்படி நடத்துபவர்களின் மனைவி,மகள்,பேத்தி என்று ஏழு தலைமுறைப் பெண்களையும் ஒழுக்கரீதியாக கடுமையாக பாதிக்கும்)

10.உடலுறவு முடிந்ததும் குளித்தே ஆக வேண்டும்.குளித்தப்பின்னரே,அந்த இடத்தை விட்டு வேறிடத்துக்கு பயணிக்க வேண்டும்;இல்லாவிட்டால் சில சூட்சும சக்திகளின் கைப்பாவையாக மாறி நாம் வழிபடும் தெய்வமே நம்மை பாதுகாக்க முடியாமல் போய்விடும்.

11.வெள்ளிக்கிழமை அன்று நாம் செய்யும் தானங்களும்,உதவிகளும் பலமடங்காகப் பெருகி நம்மைத் தேடி வரும்.வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டும் நாம் யாருக்கும்,எவருக்கும் பணம்,தங்கம்,உப்பு போன்றவைகளைத் தரக்கூடாது.இந்த நம்பிக்கை இன்றும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக பின்பற்றப்பட்டுவருகிறது.

12.வீட்டுக்கு ஒரு நூலகம் அமைப்போம்;அந்த நூலகத்தில் புராதனமான புத்தகங்களை வாங்கி வைப்போம்;தினமும் அதில் ஏதாவது ஒரு புத்தகத்தின் சில பக்கங்களை வாசிப்போம்;இணையநூலகத்தினால் பக்கவிளைவுகள் அதிகம்.புத்தகம் நமது வாழ்க்கையை புரட்டிப்போடும் அனுபவத் தொகுப்பு ஆகும். நமது வீட்டு நூலகத்தில் இருக்க வேண்டிய புத்தகங்கள்:
1.சுவாமி விவேகானந்தரின் கர்மயோகம்            2.Lectures from Columbo to Almora- Swami Vivekananada
3.மறைந்திருக்கும் உண்மைகள்- ஓஷோ
      4.வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்- ஓஷோ
5.வந்தார்கள்,வென்றார்கள்=மதன்
6.இது உங்களுக்காக = விகடன் பிரசுரம் வெளியீடு
7.நான் ஏன் நாத்திகனானேன்?= தந்தை பெரியார்
8.தேசப்பிரிவினையின் சோக வரலாறு=ஹெ.வே.ஷேசாத்ரி
9.விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னத்தின் வரலாறு=விவேகானந்த கேந்திர வெளியீடு
10.விழிமின் ;எழுமின்=விவேகானந்த கேந்திர வெளியீடு
11.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்=விநாயக தாமோதர சாவர்க்கர்
12.நாதுராம் விநாயக் கோட்ஸே=எழுதியவர் இஜட்.ஒய்.ஹிம்சாகர்(குமரிப்பதிப்பகம்,நாகப்பட்டிணம்)
13.ஓம்சக்தியும்,அணுசக்தியும்
14.பாரதத்தின் விஞ்ஞானச் சாதனைகள்=இராம.கோபாலன்
15.கூடு = பாலகுமாரன் எழுதிய நாவல்
16.எங்கே போகிறோம்? =அகிலன்
17.ஏழை படும்பாடு=விக்டர் ஹ்யூகோ,தமிழில் சுத்தானந்த பாரதி
18.பாரதியார் கவிதைகள்
19.ஸ்ரீரங்கன் உலா
20.நான் நேசிக்கும் இந்தியா=ஓஷோ
21.அடுத்த நூற்றாண்டு=சுஜாதா
22.மனித மனத்தின் அற்புத சக்திகள்
23.காமத்திலிருந்து கடவுளுக்கு=ஓஷோ
24.உங்களால் வெல்ல முடியும்=ஷிவ் கெரா
25.நீங்களும் முதல்வராகலாம்=நக்கீரன் வெளியிட்ட மொழிபெயர்ப்பு சுயமுன்னேற்ற நூல்
26.டாலர் தேசம் =பா.ராகவன்
27.சக்கரவர்த்தி திருமகன்=ராஜாஜி
28.எண்ணங்கள்=எம்.எஸ்.உதயமூர்த்தி
29.வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்=ஜேம்ஸ் ஆலன்(தமிழில்)
30.சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்
31.ஆன்மீகத்திறவுகோல்=மிஸ்டிக் செல்வம்
32.சொர்ண பைரவர் வழிபாடு=மிஸ்டிக் செல்வம்
33.ஆன்மீகப்பயணம் இரண்டு பாகங்கள்=மிஸ்டிக் செல்வம்
34.சிவபராக்கிரமம்=மிஸ்டிக் செல்வம்
35.இந்தியா 2020=ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்
36.தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்=ரா.பி.சேதுப்பிள்ளை
37.கண் சிமிட்டும் விண்மீன்கள்=சுசீலா கனகதுர்கா
38.திருமூலரின் திருமந்திரம்=எளிய உரையுடன்
39.திருப்பாவை
40.திருவெம்பாவை
41.பைரவ ரகசியம்=காகபுஜண்டர் தருமலிங்கசுவாமிகள்
42.பைரவ விஜயம்=மிஸ்டிக் செல்வம்
43.மங்களம் வாழ்வருளும் மகா பைரவர்=பரமஹம்ஸ ஸ்ரீமத் பரத்வாஜ சுவாமிகள்
44.திராவிடத்தால் வீழ்ந்தோம்=குமரிப்பதிப்பகம்
45.தமிழ் இலக்கிய வரலாறு
46.ஒரு யோகியின் சுயசரிதை
47.வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு
48.மாவீரன் புலித்தேவன்
49.கட்டபொம்மன் அரசாங்கம்
50.விதுரநீதி
51.சுக்கிர நீதி
52.ஆழ்மனத்தின் அற்புத சக்திகள்=கண்ணதாசன் பதிப்பக வெளியீடு
53.சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு
54.சுவாமி சித்பவானந்தர்
55.சதுரகிரி ஸ்தல புராணம்=தாமரைப்பதிப்பகம்
56.அதிசய சித்தர்கள்=தினத்தந்தியில் தொடராக வெளிவந்தது
57.சித்தர்களின் சாகாக் கலை=வேணு சீனிவானன்(வெளியீடு விஜயா பதிப்பகம்,கோவை)
58.யுனிவர்சல் மைண்டு பவர்=பி.எஸ்.பி.அவர்கள்
59.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வரலாறு
60.மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்=சுவாமி சுகபோதானந்தா

13.தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருபவர்,தேய்பிறை அஷ்டமியன்று மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதை நிறுத்திவிட்டு,பைரவ மந்திரத்தை வீட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோ முன்பு அல்லது கோவிலில் இருக்கும் சன்னதி முன்பாக ஜபிக்கலாம்.
அல்லது
தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் மந்திரத்தை ஜபித்துவருபவர்கள் அமாவாசை அன்று மட்டும் பைரவர் வழிபாட்டை நிறுத்திவைத்துவிட்டு,அன்று மட்டும் ஓம்சிவசிவஓம் மந்திரத்தை சிவாலயம் அல்லது வீட்டுப்பூஜை அறையில் ஜபிக்கலாம்.
இரண்டுமே மிதமிஞ்சிய தெய்வீக சக்தி வாய்ந்தவை;இரண்டையும் ஒருவரே தினமும் ஜபித்துவந்தால்,எந்த ஒரு  நற்பயனும் விளையாது என்பது அனுபவ உண்மை;மேலும் இரண்டையும் ஒருவரே ஜபித்து வந்தால் மனக்குழப்பமே மிஞ்சும்.

14.ஜோதிடம் பார்க்க நாம் ஒரு புதிய ஜோதிடரை சந்திக்கிறோம்;ஒரு வருடத்தில் அல்லது ஓரிரு வருடங்களில் அவரை பலமுறை ஜோதிடம் பார்க்க சந்திக்கிறோம்;அவர் சொன்னதைப் பின்பற்றிப்பார்த்து அது நமக்கு வெற்றியைத் தந்துவிட்டால்,அதன் பிறகு அவரையே ஆஸ்தான ஜோதிடராக ஆக்கிக் கொள்வது நல்லது.அப்படி ஆஸ்தான ஜோதிடராக்கியப் பின்னர்,அவரையும்,அவரது ஜோதிடக் கணிப்பையும் சந்தேகப்படக்கூடாது.இரண்டாவதாக இன்னொரு ஜோதிடரை சந்திக்கக் கூடாது.
15.ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை இந்த மூன்று நாட்களிலும் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் அன்னதானம் செய்ய வேண்டும்.இப்படி நாம் வாழ்நாள் முழுக்கவுமே அன்னதானம் செய்து வருவது மிகுந்த நன்மை பயக்கும்.
16.எனது ஜோதிட அனுபவப்படி,நீதி நேர்மை,நியாயம் என்று மட்டும் வாழ்பவர்கள் கூட ஒரிஜினல் ஜோதிடரின் ஆலோசனையை பின்பற்றுவதில்லை;இதனால் இவர்கள் வாழ்நாள் முழுவதுமே கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.அதே சமயம்,நீதி நியாயத்தை ஓரளவே பின்பற்றி, வசதியாக வாழ்வதற்கு எப்படி வேண்டுமானாலும் வாழ்பவர்கள் தனது ஜோதிடரின் ஆலோசனையை அப்படியே பின்பற்றி தங்களது தப்புக்களுக்கு(தவறு என்பது தெரியாமல் செய்வது;தப்பு என்பது வேண்டுமென்றே செய்வது) பிராயச்சித்தம் தேடிக்கொள்கிறார்கள்;அடிக்கடி இப்படி தப்புக்கள் செய்தும்,உடனே அதற்குரிய பரிகாரம்/பிராயச்சித்தம் செய்துகொண்டு இருப்பதும் அவர்களை சொகுசாகவும்,நிம்மதியாகவும் வாழ வைக்கிறது.
நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் முழு நீதி நியாயத்தோடு வாழ முடியாது என்பதை நேர்மையாளர்கள் உணர்வதற்குள் அவர்களின் வாழ்க்கையில் பெரும்பகுதி செலவழிந்துவிடுகிறது.இதனால்,நேர்மையாளர்கள் பல அரிய,பொன்னான வாய்ப்புகளை இழந்துவிடுகிறார்கள்.(அவர்களே அவன் அப்படியெல்லாம் அயோக்கியத்தனம் செய்கிறான்;ஆனால் நல்லாத்தானே இருக்கிறான் என்று புலம்பவும் செய்கிறார்கள்;)

17.உலகில் இருக்கும் ஒவ்வொரு நாடுமே தனது மதத்தைக் காப்பாற்றவும்,பரப்பவும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.ஒவ்வொரு மதத்துக்கும் அரசியல்பின்புலம் இருக்கிறது.அதே சமயம் நமது இந்து தர்மத்துக்கு மட்டுமே அரசியல் பின்புலம் இல்லை;எனவே,நாம் ஒவ்வொருவருமே நமது இந்து தர்மத்தை பாதுகாக்க சிலபல பொறுப்புக்களை சரிவர செய்ய வேண்டும்.அவை அனைத்துமே மிகச் சுலபமானவையே!
அ)பன்னாட்டு குளிர்பானங்களை அருந்துவதை நிறுத்துவோம்;50 பைசாவுக்கு தயார் செய்து,ரூ.15/-விற்கும்  பன்னாட்டு குளிர்பானங்கள் அனைத்துமே,நாம் தரும் ரூ.15/- இல்ரூ.5/-ஐ கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு அனுப்பி வைப்பதை கடமையாகச் செய்துவருகிறது.அதாவது நம்மிடமிருந்தே பணத்தைப் பிடுங்கி,நமது நாட்டிலே வாழ்ந்து வரும் நமது அப்பாவி இந்து சகோதர,சகோதரிகளை கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றப்பயன்படுத்துகின்றன. பன்னாட்டு குளிர்பானங்களால் நமது உடலுக்கு 0.00001% நன்மை கூட கிடையாது.தீமையோ 2000% வரை ஏற்படுகிறது என்பதை அறிவியல் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.மேலும் பன்னாட்டு குளிர்பானம் ஒன்றை தாகத்துக்காக நாம் அருந்துவோம்;அருந்தி முடித்ததும்,தாகம் அதிகரிக்கும்.தீராது.
ஆ) மாதம் ஒருமுறை முடிந்தால் வாரம் ஒருமுறை நமது குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது வீட்டிலிருந்து அருகில் இருக்கும் கோவிலுக்குச் செல்லுவோம்;அங்கே நமது ஆன்மீக முயற்சிகள்,அதனால் கிடைத்த வெற்றிகள் அல்லது அனுபவங்களை நமது குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொள்ளுவோம்;இதன்மூலமாக நமது குடும்பத்தாரிடம் இன்னும் நெருக்கம் உண்டாகும்.மேலும் நமக்கு உண்டான பிரச்னைகள் அதை நாம் எப்படி எதிர்கொண்டோம்? அல்லது அதை எப்படி சொதப்பினோம்? என்பதை நமது குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்வது இன்றைய வேகமான காலகட்டத்தில் அவசியம் ஆகும்.

இ) இறை வழிபாட்டைப் பொறுத்தவரையில் விநாயகர் வழிபாடு,குல தெய்வ வழிபாடு மற்றும் நமது இஷ்ட தெய்வ வழிபாடு என்று மூன்றே வழிபாடு செய்தாலே போதுமானது.நிறைய தெய்வ வழிபாடுகள் நமது கோரிக்கைகளை நிறைவேற்றாது.இஷ்ட தெய்வ வழிபாட்டைத் தேர்ந்தெடுப்பது சுலபம்.நமது பிறந்த ஜாதகப்படி நமக்கு என்ன திசை நடைபெறுகிறதோ,அதற்குரிய அதிதேவதை வழிபாட்டையே இஷ்டதெய்வ வழிபாட்டாகத் தேர்ந்தெடுப்பது போதுமானது.

18.ஒரு போதும் கடன் வாங்கக்கூடாது;கடன் கொடுக்கக்கூடாது;இந்தக் கொள்கையில் உறுதியாக இருந்தாலே பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும்.அதே சமயம்,நமக்குத் தேவையான அனைத்தையும் நாமே நமது உழைப்பு மற்றும் சேமிப்பின் மூலமாக வாங்கிக்கொள்ளப்பழக வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவு பெற்றதாகத் திகழ வேண்டும்.அதற்கு சேமிப்பும்,சிக்கனமும் உதவும்.மீளாத கடன் அல்லது நோய் அல்லது எதிரிகளால் துன்பப்படுபவர்கள் அவருடைய கர்மவினைகளால்தான் இவ்வாறு கஷ்டப்படுவார்கள்.அதை உரிய ஜோதிட ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலமாக நீக்கிவிட முடியும்.

19.பல நூற்றாண்டுகளாக நம்மிடையே ஒரு  மூடநம்பிக்கை பரவியிருக்கிறது.சிவனை வழிபடுபவர்களை சிவன் கடுமையாக சோதிப்பார்;அதன் பிறகே நமது கோரிக்கையை ஏற்பார் என்பது அந்த மூட நம்பிக்கை ஆகும்.சிவன் மட்டுமல்ல;எந்த ஒரு இந்துக்கடவுளும் தன்னை வழிபடும் மனிதர்களை சோதிப்பது இல்லை என்பதே அனுபவ ஆராய்ச்சி முடிவு.பிறகு ஏன் நமக்கு ஏதாவது ஒரு தெய்வத்தை வழிபாடு செய்யத் துவங்கியதும்,சோதனைகள் வருகின்றன?

ஏனெனில்,நம் ஒவ்வொருவரைச் சுற்றியும் நமது வாழ்க்கையை இயக்கும் நவக்கிரக சக்திகள் இருந்துகொண்டே இருக்கின்றன.நமது பிரார்த்தனைகளின் வலிமை அவைகளைச் செயல்படவிடாமல் தடுத்து,நமக்கு நன்மைகளை மட்டுமே தர முடியும்.அந்த நவக்கிரக சக்திகளே நம்மை தொடர்ந்து வழிபாடு செய்ய விடாமல் தடுக்கும் என்பது ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவு ஆகும்.

20.ஒரு அமாவாசையன்று திரு அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும்;அந்த அமாவாசைத் திதி இருக்கும் நேரத்துக்குள் கிரிவலப் பயணம் சென்று முடிக்க வேண்டும்;அந்த கிரிவலப் பயணம் முழுவதும்(சுமார் 14 கி.மீ.தூரம்) ஓம்சிவசிவஓம் என்று ஜபித்தவாறே செல்ல வேண்டும்.இப்படி பயணித்து முடித்தால்,நாம் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ஒரு மாதத்துக்கு தினமும் நமது வீட்டில் ஓம்சிவசிவஓம் ஜபித்ததற்குச் சமமான ஜபப்   பலன் கிடைத்துவிடும்.

No comments:

Post a Comment