பண புழக்கத்திற்க்கு எளிய பரிகாரம்
மேலை நாடுகளில் கடைபிடித்து வரும் தாந்த்ரீக முறைகளில் சிலவற்றை இனி உங்களுக்கு அளிக்கலாம் என உள்ளேன். இவை அனைத்தும் பரிசோதிக்கபட்டவை ஆகும்.
ஆகையால் அனைவரும் செய்து பயன் அடையலாம். இதை இன்று இரவு (வெள்ளிக்கிழமைகளில்) 8-9 மணிக்குள் செய்தால் பலன் இரட்டிப்பு ஆகும்.சாதாரண நாட்களிலும் செய்யலாம்-கால நேரம் பார்க்க வேண்டியதில்லை. சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கிண்ணம் எடுத்து கொள்ளவும். அதில் சம அளவு உப்பு, சர்க்கரை மற்றும் அரிசி சேர்க்கவும். அதற்கு நடுவில் ஒரு புத்தூசி அல்லது காப்பூசி எனப்படும் சேஃப்டி பின் ஒன்றை மேல் நோக்கி இருக்குமாறு சொருகவும். பின்பு கிண்ணத்தை கையில் ஏந்தி பிரபஞ்சத்திடம் (கடவுளிடம்) தங்களுக்கு என்றும் உணவு, உடை, உறைவிடம் மற்றும் செல்வம் தங்கியிருக்க பிரார்த்தனை செய்து கொண்டு, கிண்ணத்தை வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் (கிண்ணத்தை மூடாமல்) வைத்து விடவும். தென் மேற்கு மூளையில் கிழக்கு நோக்கியும், வட கிழக்கு மூளையில் மேற்கு நோக்கியும் வைப்பது இரட்டிப்பு பலன் தரும்.
இதை தினமும் ஒரு முறை பார்த்து மனதினுள் மேற்கண்ட பிரார்த்தனை செய்து வந்தால் போதும்.மந்திர உச்சரிப்புகள் ஏதும் தேவை இல்லை. அன்றாடம் சிறு முன்னேற்றமாவது வந்து கொண்டே இருப்பதை கண் கூடாக காணலாம். இவை தூசி படர்ந்து அழுக்கானவுடன், வேறு இதே முறையில் மாற்றி வைக்கவும். வாழ் நாள் முழுதும் செய்யலாம். முடிந்த அளவு பொருட்கள் சேர்த்தால் போதும்-
No comments:
Post a Comment