Monday 23 November 2015

செய்வினை தோஷம் அகல வணங்க வேண்டிய திருத்தலம்.

செய்வினை தோஷம் அகல வணங்க வேண்டிய திருத்தலம்.
இந்த நவீன யுகத்தில் செய்வினை என்பது சாத்தியமா?
செய்வினை என்றால் என்ன? நாம் செய்த வினையே செய்வினையாகும். அற்ப காசிற்காக ஆசைப்பட்டு பிறர்க்கு தீய வினை செய்யும் மந்திரவாதிகள் பின்பு அதனாலேயே மாண்டு போகின்றார்கள்.
ஒரு மனிதனை செய்வினை அதிகம் தாக்குகின்ற காலம் எதுவெனில் ராகு-கேது தசை அல்லது சந்திரன் நீச்சம் பெற்று தசை நடத்துகின்ற காலம், மேலும் 6,8,12 -லே மோசமான கோச்சார சூழ்நிலையிலே ஜோதிடம் அறிந்த மந்திரவாதிகளால், வைத்துச் செய்யப்படுகின்ற மோசமான முறையே இந்த செய்வினையாகும். இதை நீக்க நாம் செல்ல வேண்டிய திருத்தலம்"திருவாரூர்", இத்தல இறைவன்-"வன்மிகநாதர்", இறைவி-அல்லியன் கோதை அம்மை.
வைகாசி மாதம் 10 நாட்கள் இங்கு இத்திருவிழா நடைபெறுகின்றது. பூக்குழி எனப்படும் தீமிதி திருவிழாவும் நடைபெறுகின்றது. இங்குள்ள சீதளா தேவி அம்பாளை வணங்கி வேண்டும்பொழுது நற்பலன்களைப் பெறலாம். ஒவ்வொரு மாதம் பௌர்ணமியிலும் அபிஷேகம் நடைபெறுகின்றது.
இதில் கலந்து கொண்டால் செய்வினை அகலுகின்றது. இத்திருத்தலத்திலுள்ள சக்கரத்தின் தன்மையானது செய்வினைக்கு மட்டுமின்றி மற்ற துன்பங்களுக்கும் நிவர்த்தி அளிக்கின்றது

No comments:

Post a Comment