Wednesday, 25 November 2015

ஆலய ஒழுக்கம்

ஆலய ஒழுக்கம்
1.பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது. மற்றவரை தள்ளிவிடக்கூடாது.
2. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது. அழவும் கூடாது .
3. சோம்பல் முறித்தல், தலை சீவுதல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபோடுதல் கூடாது.
4. பிறப்பு, இறப்பு, தீட்டு க்களுடன் செல்ல கூடாது.
5. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.
6. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.
7. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.  (அழகை மெச்சும் இடம் ஆலயம் அல்ல )
8. நந்தி  தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போக கூடாது.
9. தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
10. ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது. சிற்ப்பங்களை தொடவும் கூடாது .
11. மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது. துன்டை இடுப்பில் கட்டிக்கொள்ளலாம் .
12. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது. தரிசனத்திற்க்கு பின் பிரசாதம் சாப்பிடலாம் .
13. கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.
14. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் இறைவனை தவிர வேறு யாரையும் வணங்க கூடாது.
15. கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.
16. அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங் களில் வில்வம் பறிக்க கூடாது. இதற்கு முதல் நாள் மலையிலேயே அர்ச்சனைக்கு பறித்து வைத்து கொள்ள வேண்டும்.
17. ஆலயத்தில் மூலதெய்வத்தையும். ஆரத்தியையும் புகைப்படம் எடுக்க கூடாது.
18. தெய்வ வழிபாடு ஈர துணி, ஒராடைஉடன் கூடாது.
19. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது. மனச்சுத்தம் இல்லாமலும் செல்ல வேண்டாம்
20.சந்நிதியில் கருவரை தீபம் இல்லாமல் தரிசனம் செய்ய கூடாது.
21. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவ கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ளவேண்டும்
22. கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.
23. கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்
24. ஸ்தல விருட்சங்களை இரவில் தொட்டு வழிபட கூடாது.
25. கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியனத்தையோ இடையுறு செய்ய கூடாது.(உதாரணம்: கோவில் உள்ளே செல் போன் பேசுதல் கூடாது) .
27. தீபத்திற்க்கு சுத்தமான எண்ணெய் மட்டுமே உபயோகிக்க வேண்டும் ( ஆலயத்திலேயே விற்கும் தீப எண்ணெய் மெழுகு மற்றும் அழுக்கு எண்ணெய் கலந்து விற்பனை செய்வதால் தவிற்க்கவும் ) .
28 .அர்ச்சகர்கள் பணத்திற்க்காக பணி செய்யாமல் தெய்வத்திற்க்காக பணிவிடை செய்ய வேண்டும் அவரே சிறந்த அர்ச்சகர். அந்த ஆலயத்தில் தான் தெய்வம் குடிகொள்ளும் அதுபோன்ற ஆலயங்களை நாடிச்சென்றால் பலன் உண்டு . பணத்திற்க்கு அடிமை யான அர்ச்சகர்கள் நிறைந்து விட்டதால் அதுபோன்ற ஆலயம் காண்பது அறிதாகி விட்டது எனவே உங்களுக்காக நீங்களே மானசிகமாக அர்ச்சனை செய்து கொள்ளுங்கள் அதுவே பலன் கொடுக்கும் .
29 . ஆலயத்தில் உங்கள் பெருமையை நிலைநாட்ட முயற்ச்சிக்காதீர்கள் தெய்வத்திடம் சிறுமையாகிவிடுவீர்கள் .
30. அர்ச்சகருக்கு அதிகமாக பணம் கொடுத்தால் யாரோ தெய்வத்திற்க்கு கொடுத்த மாலையை உங்கள் கழுத்தில் அணிவித்து கௌரவிப்பார் நீங்களும் பெருமிதத்தோடு கழுத்தை நீட்டி அணிந்து கொள்வீ ர்கள் . அப்போதே அந்த மாலைக்கு சொந்தக்காரனின் பாவத்தை எல்லாம் பெருமையாக நீங்கள் பெற்று விட்டீர்கள் என்று உறுதியாக நம்பலாம் . எனவே அதுபோல் இன்னொருவருடைய மாலையையோ . எலும்பிச்சை கனியையோ வாங்காதீர்கள் . இவ்வாறு ஏற்றுக் கொண்டவர்கள் கடுமையான கஷ்டப்படுகிறார்கள் என்பதை என் ஆய்வில் கண்ட பிறகே இதை உறுதி செய்து தெறிவிக்கிறேன் .
31 . மூலஸ்தானத்தில் இருந்து கொண்டு தட்சனை வை தட்சனை வை என எந்த அர்ச்சகர் கேட்டுக்கொண்டிருக்கிறாறோ அவர் கையால் கொடுக்கும் விபுதி குங்குமத்தை வாங்காதீர்கள் . நிச்சயமாக உங்கள் வேண்டுதால் நடக்க பலகாலமாகும் . சுத்த மனம் படைத்த அர்ச்சகரே இறை தொடர்பாலராக இருக்க முடியும் அவர் அளிக்கும் பிரசாதமும் ஓதும் மந்திரமும் முழு பலன் நமக்கு கிடைக்க உதவும் .
32 . அர்ச்சகர்களுக்கு அக்காலத்தில் மன்னர்கள் போதிய வசதி வாய்ப்பை செய்து கொடுத்து எக்கஷ்டமும் அவர்கள் மனதை தாக்கா வண்ணம் பரிசு பொருட்களெல்லாம் கொடுத்து கௌரவித்தார்கள் அதனால் அர்ச்சகர்கள் அவர்கள் தேவைக்கு யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லாமல் அவர்களுக்கென்று ஒருகண்ணியத்தை கடைபிடித்தார்கள் .போது மென்ற மனதோடும் இருந்தார்கள் .சுத்த மனதோடு அர்ச்சனை ஆரத்தி செய்தார்கள் . ஆனால் இன்று அவர்கள் தேவைக்கு யாரும் கொடுப்தில்லை அதனால் அவர்களே ஒரு யுத்தியைகையாண்டு  தட்சனை பெற ஆரம்பித்தார்கள் அது இன்று போதுமென்ற நிலையை தாண்டி நிறுத்த முடியாத பேராசையாக வளர்ந்து விட்டது . மக்களும் அந்த வட்டத்தில் அகப்பட்டு ஒரு நிலையில்லாமல் அர்ச்சகர்களை கெடுத்ததின் விளைவாக ஏழை பணக்காரன் என்ற வித்தி யாசம் காணா சம தர்ம ஆலயத்தில் இன்று முகம் பார்த்து .தட்சனையைபார்த்து அர்ச்சனையும் ஆரத்தியும் நடக்கிறது . ஆலயம் இன்று மிகுந்த லாபம் தரும் ஒரு வனிக நிறுவனமாக காட்சி கொடுக்கிறது . இது போன்ற இடத்தில் இறைவன் தங்கி மக்களுக்கு அருள்பாலிப்பாரா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் . எனவே உங்களிடம் தவறு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் . மேலும் மக்கள் ஒன்று சேர்ந்து ஆலய ஒழுக்கத்தை கடைபிடிக்க வலியுருத்துங்கள் .அர்ச்சகர்களுக்கும் அவர்களின் ஸ்தான வலிமையை புரியவையுங்கள் . வசதி படைத்தவர்கள் விருப்பமிருந்தால் தனிப்பட்ட வகையில் அர்ச்சகர்களின் தேவையை கேட்டறிந்து உதவுங்கள் நீங்களும் நன்றாக இருப்பீர்கள் ஆலயமும் நன்றாக இருக்கும்  .
33 . ஆலயம் இன்று மக்களுக்கும் காதலருக்கும் உல்லாசமாக பொழுது போக்கும் இடமாக மாறிவருகிறது . இதை மக்களும் ஆலய நிர்வாகிகளும் கடுமையான கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் . கூட்டம் ஆலயத்தில் நிரம்ப வேண்டும் என்பதற்க்காக தவறுகளை ஊக்குவிப்பது ஆலயத்திற்க்கு கேடுவிளைவிக்கும் . பிறகு எத்தனை கும்பாபிஷேகம் செய்தும் தெய்வம் அவ்விடம் குடிகொள்ளாது . இன்னும் பல ஒழுக்கக் கேட்டிற்க்கு காரணமாக தரிசனத்திற்க்கென்று உண்டாக்கும் கட்டண க்யு வரிசையே காரணமாகும் . ஆலய வளர்ச்சிக்கு என்றும் கூட்ட நெறிசலை கட்டுப்படுத்த என்றும் பொய்காரணம் கூறி வசூலில் சாதனை பார்க்கிறார்கள் நிர்வாகிகள் . அதனாலும் சமதர்மம் பாதிக்கப்படுகிறது . உங்கள் அவசரத்தன்டையாலும் பொருமையின்மையாலும் . பணம் அதிகம் உள்ளதாலும் எவ்வளவு கட்டணம் கேட்டாலும் கொடுத்துவிடுவதால் நிர்வாகிகள் மேலும் பேராசைபிடித்து செயல்படுகிறார்கள் . இதனால் ஏழை பக்தனின் பிராத்தனை வாசலுக்கு வெகுதுார த்திலேயே தடுத்து நிறுத்தப்படுகிறது . கட்டணம் செலுத்துபவர்கள் தெய்வத்தின் மிக அருகாமையில் சென்று வணங்குகிறார்கள் . இதனால் ஏழை பாதிப்படைய கட்டண தரிசனமே காரணமாகிறது . இந்த குற்றத்திற்க்கு மக்கள் தான் முதல் காரணம் . கட்டணவரிசையை தவிர்த்து மக்களோடு மக்களாக தரிசனம் செய்வதே இறைவனுக்கு செய்யும் உண்மையான மறியாதையாகும் . மக்களுக்குள் குணபேதகத்தை உண்டாக்க சில ஆலய விதிமுறைகளும் தவரான வரைமுறைகளும் ஆலயத்தில் பெருகிவிட்டன . ஒரு வகையில் அரசாங்கமும் தெறிந்தோ தெறியாமலோ உடந்தையாக இருந்து ஊக்குவிக்கிறது . அரசாங்கம் நன்மை செய்யும் பொருட்டு ஆலய நிர்வாகத்தை கையிலெடுத்தாலும் இதையே பல ஆலய நிர்வாகிகள் தனக்கு பக்கபலமாக தவறு செய்ய பயன் படுத்திக்கொள்கிறார்கள் . ஆலயத்தை மூடுவதிலும் திறப்பதிலும் பிரம்ம மூகூர்தம் கடைபிடிக்க போய் இப்போது அலுவலக நேரம் போல் கடைபிடிக்கப்படுகிறது . இதனால் தெய்வம் ஆலயத்தில் இருக்கிறதா என்ற கேள்வியே எழுகிறது . எனவே ஆலயம் போக விருப்பம் இல்லாமல் போகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்  அது போன்ற நல்ல உள்ளங்களின் இல்லத்திலும் இதயத்திலும் இறைவன் குடிகொள்வதால் வீட்டிலேயே சுத்தத்துடன் பிராத்தனை செய்தாலே முழு பலன் கிடைக்கும் என்பதை கனிவுடன் தெறிவித்துக்கொள்கிறேன் .  அதற்க்காக ஆலயம் போகவேண்டாம் என்று கூறவில்லை .உங்களால் முடிந்தால் ஆலய தவறுகளை திருத்துங்கள் அப்படி அவர்கள் திருந்தாத போது உங்கள் ஆத்மா கெடாமல் இருக்க அது போன்று தவறு நடக்கும் ஆலயத்திற்க்கு செல்லாமல் இருப்பதே நலம் . 
34 . இறைவனுக்கு மறியாதை கொடுங்கள் . ஆலயத்தில் மன்னனும் ஆண்டியும் சமமே எனவே முக்கிய பிரமுகர்களுக்கென்று மறியாதை செய்யும் பழக்கத்தை ஆலய வெளிப்புரத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். ஆலயத்தினுள்வேண்டாம் .இறைவனுக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் கானும் இடம் ஆலயம் தான் . மனிதர்கள் எல்லோரும் இறைவனின் முன் சமம் இறைவன் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற வித்தியாசம் தான் அது . அதுபோன்ற இடத்தில் தட்சனைக்காகவோ நன்கொடைக்காகவோ ஆசைப்பட்டு இறைவனுக்கு செய்ய வேண்டிய மறியாதையெல்லாம் தனிமனிதனுக்கு செய்து மற்றவரை மட்டம் தட்டி பார்க்கும் வித்தியாசம் ஆலய நிர்வாகிகளுக்கும் வேண்டாம் அர்ச்சகர்களுக்கும் வேண்டாம் . ஆலயத்தில் தனிமறியாதையை எதிர்பார்க்கும் பிரமுகர்களும் மாறவேண்டும் . பிரமுகர்கள் இறைவனுக்கு உண்மையான மறியாதை செய்ய நினைத்தால் உங்களுக்கு ஆலயத்தினுள் இருந்துகொண்டு முகஸ்துதி பாட எத்தனிக்கும் அர்ச்சகர்களையும் ஆலய நிர்வாகிகளையும் அவர்கள் தவருகளை திருத்தி ஆலயத்தினுள் இதுபோன்ற தவருகளை செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளவும் . இது போன்ற தவறுகளால் இறைதரிசனம் செய்ய வரும் மக்களுக்கு இடஞ்சல் அதிகமாகவே உள்ளது . பிரமுகர் மறியாதை வேளையில் மக்கள் புறக்கனிக்கப்படுகிறார்கள் அந்த நேரத்தில் உண்டாகும் மன அவஸ்தை முழுவதுமாக பிரமுகரையே பாதிக்கும் என்பதை நினைவில் வைக்கவும் . ஆலயம் மக்களுக்கு பொதுவானது என்பதை புரியாதவருக்கு மக்கள்தான் புரியவைக்க வேண்டும் .
35 . ஆலயத்தினுள் தீவிரவாதம் கூடாது .
36 . இறைவனுக்கும் இறைவாகனத்திற்க்கும் இடையில் உண்டியல் கூடாது .
37 . மற்றவரும் தரிசனம் கான ஏதுவாக மூலஸ்தானத்தில் இருந்து விரைந்து வெளிவந்து காத்திருக்கும் மற்றவருக்கும் தரிசனம் காண வழிசெய்ய வேண்டும் .
38 . அடாவடி ஊழியர்களையும் . காவலர்களையும் ஆலயத்தினுள் அனுமதிக்கவேண்டாம் என ஆலய நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்ளவும் .
39 . பிச்சைகாரர்களின் தொந்தரவு தியானத்தை பாதிக்கலாம் எனவே ஆலயத்திற்க்கு வெளியே அவர்களை இருந்து யாசகம் கேட்கும் படி கேட்டுக்கொள்ளுங்கள் . நீங்களும் ஆலயம் நுழையும் போதே அவர்களுக்கு தர்மம் செய்து விட்டு நிம்மதியாக தரிசனம் செய்யுங்கள் .
            இவ்வித ஒழுக்கங்களை கடைபிடிப்பதால் நமக்கு செல்வம் சேரும் .

No comments:

Post a Comment