தீபஜோதி உணர்த்தும் உண்மை
உணர்ந்து காணவேண்டி
நமச்சிவாய நம்முள்ளே ஜோதியாய் இருக்கும் ஆதி அந்தம் இல்லாத பரம்பொருளை உணரவேண்டி பாதம் பணிகிறேன்.
நாம் என்ற எண்ணம் நம் உள்ள வர காரணம் மனம், இந்த மனம் தான் இது என் பெயர், என் உடல், என் கல்வித்தகுதி, என் செல்வம், என் மனைவி, என் உறவு, என் மதிப்பு, என் கெளரவம், என் மரியாதை, எல்லாவற்றிலும் என் எனது என்னுடையது என்று அனைத்தையும் சொந்தம் எதையும் விடமறுகிறது.
மனம் என்றால் என்ன ?
அது நம் வாழ்வில் இதுவரையில் நடந்த நிகழ்வுகளின் பதிவு, அல்லது நம் பெற்ற / பெற என்னும் அனுபவத்தின் பதிவு, இதன் வழிகாட்டுதலின் பெயரில்தான் நம் வாழ்க்கை இன்று வரை பயன்படுகிறது, சிறுவயது முதல் மற்றவர்கள் கூறுவது, உணர்த்துவது, அனுபவிப்பது என்பதை கொண்டு இது நல்லது, இது தீயது, இவர்கள் நல்லவர்கள், அவர்கள் தீயவர்கள், இந்த பொருள் நமக்கு பயன்படும், அந்த பொருள் பயன்படாது என்று எத்தனையோ எண்ணகளின் பதிவே நமது மனம், இந்த பதிவுகளை ஆராய்ந்து நம் மனம் எடுக்கும் முடிவின் படிதான் நமது வாழ்க்கை.
இந்த மனதில் உள்ள பதிவுகள் அனைத்தும் சரியானதா ?
நீங்களே கேட்டு பாருங்கள் ?
பல சகிக்கமுடியாத குப்பைகள் உங்கள் மனம் என்னும் குப்பை தொட்டியில் உள்ளதை உணரலாம்.
சரி அதை சீர்செய்வது எப்படி ?
நமது மனதில் தெய்வம் என்று ஒன்று உண்டு என்ற எண்ணம் வர காரணம், சில நிகழ்வுகள் சரியாய் / தவறாய் நிகழும்போது வந்ததே, அப்போது மெய்பொருள் என்று ஒன்று உண்டு, அதுவே நம்மை சீர்படுத்தும் என்ற எண்ணத்தால், பல ஆலயம் சுற்றி, பல தெய்வம் வணங்கி, பல விரதம் இருந்து, எங்கும் கிடைக்காத ஒரு நிறைவு மெய்யானவன் திருவருளால் கிட்டி மெய்யான கருணை கடவுள் ஈசனே என்றுணர்த்து. அவரை சொலால் செயலால் சிந்தையால் சிக்கென பற்றி எங்கும் நிக்கமற நிறைத்து அருள்பவன் என்னுள்ளே இருக்கிறான் என்று உணர்ந்து,
இந்த தீபத்திருநாளில் நம் அகத்துள் ஜோதியை விளங்குபவனை அவன் அருளால் உணர்த்து,
நம் மனதுள்ளே உள்ள குப்பைகளை ஒழித்து,
என் எண்ணம் என்று ஒன்று இல்லை உன் கருணையால் உதிக்கும் எண்ணமே என்று உணர்ந்து அர்ப்பணித்து.
என் செல்வம் என்று ஏதும் இல்லை உன் செல்வதை அனுபவிக்கும் பாக்கியமே என்று உணர்ந்து அர்ப்பணித்து.
என் அறிவு என்று ஏதும் இல்லை உன் கருணையே என் அறிவாக வெளிபடுகிறது என்று உணர்ந்து அர்ப்பணித்து.
என் மதிப்பு, மரியாதை, திறமை, பெருமை எல்லாம் மாயை என்று உணர்ந்து அர்ப்பணித்து.
என் உறவு, சொந்தம், பந்தம், நட்பு என்று அனைத்தும் நின் கருணையால் விளைந்தது, மெய் உறவு, சொந்தம், பந்தம், நட்பு என்று என்றும் இருப்பவன் நீ ஒருவனே என்று உணர்ந்து அர்ப்பணித்து.
நான், எனது, என்று அனைத்தும் நீ இட்ட பிச்சையே என்று உணர்ந்து
நான், எனது என்ற எண்ணத்தை அடியோடு அழித்து எல்லாம் நீயே, நின் கருணையே, நின் திருவருளையே என்ற எண்ணம் மட்டும் என்னுளே என்றும் நிலைபெற்று நீங்காமல் இருக்கவேண்டும்.
என்ற எண்ணமே நமது மனத்தை சீர்படுத்தும்.
மனம் என்னும் குப்பையில் மகேசன் என்ற ஜோதியை கொண்டு வாழ்வை பிரகாசிக்க செய்ய சிவன் அருளை வேண்டுவதே தீபஜோதி உணர்த்தும் உண்மை.
No comments:
Post a Comment