Thursday, 26 November 2015

தலைப்பிள்ளை ஆண் பிள்ளை: ஆச்சர்யம் தரும் அதிசய பிள்ளையார்!

தலைப்பிள்ளை ஆண் பிள்ளை: ஆச்சர்யம் தரும் அதிசய பிள்ளையார்!
துரை அருகே உள்ள விநாயகர் கோயிலில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு தலைப்பிள்ளை ஆண்பிள்ளையாக பிறக்கும் அதிசயம் நடக்கிறது. மேலுரை அடுத்து கீழவளவு என்ற ஊரில் பஞ்சபாண்டவர் மலை உள்ளது. இங்குதான் 100 வருட பழமை வாய்ந்த இந்த விநாயகர் கோயில் உள்ளது.
கோயிலின் சிறப்பு பற்றி நம்மிடம் பேசிய அதே ஊரைச்சேர்ந்த செந்தில் குமார், “சுற்றுப்புறத்திலிருந்து ஆண்டுதோறும் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் இந்த கோயிலில் நடைபெறுகிறது. இதற்கு காரணம் இங்கு திருமணமான தம்பதிகளுக்கு பிறக்கும் முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்கும் என்பதுதான்.
இந்த அதிசய பிள்ளையார் சிலையின் பீடத்தின் கீழே, அம்மரத்தின் வேர் துதிக்கைபோல அமைந்து உள்ளது. இருபுறமும் அதிசயமாக, இயற்கையாக அமைந்து உள்ள இந்த துதிக்கையால் இப்பகுதி மக்களின் இஷ்ட தெய்வமாக இந்த பிள்ளையார் விளங்குகிறார்“ என்றார்.
கோயிலில் வேண்டுதல் நிறைவேற்ற வந்த ராமன் என்ற என்ற பக்தர் நம்மிடம், “ எங்களுக்கும் போன வருஷம் இங்குதான் திருமணம் நடந்ததது. சொன்னமாதிரியே ஆண் குழந்தையே பிறந்ததுனா பாத்துக்கோங்க சார் என்றார்.
பங்குனி திருவிழா இக்கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது

No comments:

Post a Comment