Saturday 21 November 2015

ஆவணி அவிட்டம் - உபநயனம் பூணூல் சடங்கு.

ஆவணி அவிட்டம் -    உபநயனம் பூணூல் சடங்கு.

  எட்டு வயது முதல் பதினாறு வயதிற்குள் மாத்திரமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  உபநயனம் (additional eye, ie. The so called THIRD EYE) என்பதில் இரண்டு இருக்கின்றன. ஒன்று பூணூல் (SACRED THREAD) போட்டது முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல் சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மிக உயர்நிலை அடைவதற்காக ஏற்பட்டது. இரண்டாவது,  முக்கிய அம்சம்  ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின் மூலம் வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை ஏற்றுக்கொள்வதே முக்கிய நோக்கமாகும்.  உபநயனம், ப்ரம்மோபதேசம் என்கிறோம்.

  பூணூல் அணிவது ஒரு மனோவியல் ரீதியான ஒழுக்க நெறியை பின்பற்றுவதற்கு உபாயமாக கடைபிடிக்கபடுகிறது.   பூணூலுக்கு ஏக்னோ பவித்ரம் என்று பெயர் கொடுத்து பேசுகின்றன. சூத்ர, வைசிக, சத்ரிய, பிராமண ஆகிய நான்கு வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டும் என இந்த பிரம்மானங்கள் வலியுறுத்துகின்றன. 

புரி + நூல் என்பது தான் திரிந்து பூணூல் என்று மாறி உள்ளது.
புரி என்றால் முடிச்சு மற்றும் விளக்கம் என்றும் அர்த்தம். முடி போட்ட நூல் "புரி + நூல் "
இதனை குரு குலத்தில் படிப்பவர் மட்டுமே அணிந்து வந்தனர். படித்தவரை அடையாளம் காட்டவே இது பயன் படுத்தப் பட்டது.

முதலில் எல்லோரும் ஒரு புரி மட்டுமே அணிந்தனர்.

காலப் போக்கில் பிரமச்சாரி - ஒரு புரியும்,
குடுமபஸ்தான் - இரு புரியும்,
சன்யாசம் பெற்றவர் - முப்புரியும் அணிந்தன

ஆடிமாத அமாவாசைக்கு பிறகு ச்ராவண மாசம் கணக்குப்படி வரும். ச்ராவண மாசத்தில் ச்ரவண நட்சத்திரத்தன்று  (திருவோணம்) அந்த நாள் தோஷமும் இல்லாமல் இருந்தால் யஜுர் வேதிகள் ஆவணி அவிட்டம், உபாகர்மா செய்து கொள்வார்கள்.  சாம வேதத்திற்கு ஆவணிமாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தன்று செய்துகொள்வார்கள்.

இந்த உபாகர்மா (Additional Daily duties) அன்று தக்ஷிணாயத்தில் ஆறுமாதத்திற்கான வேதபாடங்களை படித்து முடித்து உத்தராயண ஆரம்பத்தில் அந்த வேதத்திற்கான அர்த்தங்களையும், தர்ம சாஸ்திரத்தையும்  தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி முடியாதவர்கள் ஆவணி அவிட்டத்தில் ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக்  கொள்வது முக்கியமாக இருந்தாலும்,   பூணூலை மாற்றிக் கொண்ட பிறகு சிறிது அளவாவது வேதாரம்பத்தை செய்த கொள்ள வேண்டும். ஆகவே அவணி அவிட்டத்தில் வேதாரம்பம் செய்வது முக்கியம். அதை ஒட்டித்தான் பூணூல் போட்டுக் கொண்டு "காமோர்கார்ஷீத்" ஜபம் (பழைய வினைகளின் பாக்கியை அழிக்க வேண்டி ஜபம்) செய்வது மறுநாள் காயத்ரீ ஜபம் செய்யவேண்டும்.

பஞ்சாக்ஷரீ ஜபம், அஷ்டாக்ஷரீ ஜபம் போன்ற பல மந்திர ஜபங்கள் எல்லாம் இருக்கின்றன. பஞ்சாக்ஷரம் போன்ற மந்திரங்களை ஜபிப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் இருக்கிறது. ஆனால் காயத்ரீ மந்திரம் ஜபித்த எல்லோருக்கும் ஒரே பலன் மனத்தூய்மைதான். 

பூணூல் அணிவிக்கும்போது குரு சொல்லித் தரும் ஜபம் "ஓம், பூர்புவ, சுவஹ, தத், ஸவிதுர், வரோண்யம், பர்கோ, தேவஸ்ய, தீமஹி, தியோ யோந, ப்ரசோதயாத்' என்பதாகும். இம்மந்திரத்தை தினம் மூன்று வேளை 108 முறையாவது  ஜபிக்க பாவம் நிவர்த்தியாகும்.

பிராமணர்கள், செட்டியார்கள், ஆச்சாரிகள், கருமார்கள், கருணீகர்கள், வள்ளுவர்கள் என தமிழ்நாட்டில் பல்வேறுபட்ட சமூக மக்கள் இந்த பூணூலை பயன்படுத்தினாலும், யார் ஒருவன் பிரம்மஞானத்தை தெரிந்து கொள்ள முயல்கிறனோ அவனே இதை அணிய தகுதியானவன் மற்றபடி சமூகத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

இம்மந்திரம் பாவங்களைப் போக்கும். நல்ல ஆரோக்கியம், அழகு, பலம், வீர்யம்,  தேஜஸ் முதலானவற்றைத் தருகிறது. மனதைப் பரிசுத்தப்படுத்துகிறது. ஜபிப்பவர்களுக்கு அஷ்டமா சித்திகளைக் கொடுக்கிறது. 

  காயத்ரிக்கு மூன்று கண்கள், ஐந்து முகங்கள், பத்து கரங்கள் உண்டு. வாகனம்- அன்னம். சிவன்போல ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத் தல், அருளல் என ஐந்து தொழில்களை காயத்ரியின் ஐந்து முகங்களும் செய்கின்றன. சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி என்ற ஐந்து சக்திகளின் முகங்களே காயத்ரியின் ஐந்து முகங்கள்.
விசுவாமித்திரரால் இம்மந்திரம் இராமபிரானுக்கு உபதேசிக்கப்பட்டது. 

  காயத்ரி மந்திரம் சூரியனுடைய ஆற்றலை நோக்கிக் கூறப் படுவதாகும். இம்மந்திரம் சூரியனைத் தலைமைத் தெய்வமாகக் கொண்டது. எனவே சூரியனை வணங் குவது காயத்ரியையே வணங்குவதற்குச் சமமாகும். 

காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு, வஸ்திரத்தால் இரு கைகளையும் மூடி முகத்திற்கு நேராக வைத்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மதியம் கிழக்கு முகமாக அமர்ந்து கைகளை மார்பிற்கு நேராக வைத்து ஜபிக்க வேண்டும். மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து நாபிக்குச் சமமாக கைகளை வைத்து ஜபிக்க வேண்டும்.

No comments:

Post a Comment