கரிநாள் ஜோதிடத்தில்
கரி நாட்கள் என்பது பூமிக்கும் சூரியனுக்கு உள்ள பாகை வித்தியாசங்களை கூறுகிற ஓன்று. இது எப்படி திதி, கர்ணம் கணக்கு போல சூரியனின் ராசி மாற்றங்களை பொறுத்து கூறபடுகிறது. மேலும் இதை அதிக ஜோதிடர்கள் பார்க்க படுவதில்லை.
தமிழ்நாட்டில் ஒரு சில பகுதியில் மட்டும் இந்த நாட்களில் முஹுர்த்தங்கள் வைப்பதில்லை.. ஒரு சில ஜோதிட வல்லுனர்கள் இந்த நாட்களில் வரும் முதல் முஹுர்த்தம் (அதாவது காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள்ளாக) மட்டும் தவிர்த்தால் போதும் என்கிறார்கள். எனவே ஜோதிடர்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.
இது போலவே நடுகுத்து என்கின்ற சூரியனின் ஒவ்வொரு ராசியிலும் 15 வது பாகையை கூறிக்ககூடியது. இதற்கு நாமும் அதிக முக்கியதுவம் தரவேண்டாம் என்பது என் கருத்து..........
இது குறித்து ஜோதிட நூல்களில் அதிகம் சொல்லவும் இல்லை. இருந்தாலும் தமிழில் ஜோதிடத்திற்கு முதன்மையான நூலான ஜோதிட கிரஹ சிந்தாமணி என்னும் பெரிய வருஷாதி நூலில் பாடல்களை தந்துள்ளார் இதன் ஆசிரியர், ஆனால் அவரும் அதற்குரிய காரணத்தை கொடுக்கவில்லை.
ஜோதிட கிரஹ சிந்தாமணி பாடல்.
இன்பமுறுமேடமதிலாறு பதினைந்தாம்
ஏறதனிலேழுபதி னாறுபதினேழாம்
அன்புமிகுமானியொன்று மாறலவனிரண்டோ
டையிரண்டுமைந்நான்கு மாவணியிரண்டும்
ஒன்பதேழுநான்குகன்னி யுற்றபதினாறே
டொன்றொருமுப்பான்றுலையிலோராறுதேளில்
முன்சோமவாரமொன்று பத்துபதினேழாம்
முனியாறுமின்பதும்பன்னொன்றுமுதவாநாள்.
உதவாத நாள் கலையிலொன்றிரண்டுமூன்று
வொருபதுடனின்றுபதி னேழதுவுமாகா
துதிபெருகுமாசிபதி னைந்துபதினாறும்
சொல்லுபதினேழுகடை மாதமதிலாறும்
பதினைந்துமொன்றொழியைந் நான்குமிகுதீதாம்
பகர்ந்தமாதந்தோறுந் தெய்தியெனக கொண்டு
கதிதருநற்தியைவரை முனிவனுரைத்திட்ட
கரிநாண்முப்பானான்குங் கண்டறிகுவீரே
இந்த பாடலை நன்கு படித்து பார்த்தால் தமிழ் மாதங்களில் எந்தெந்த நாட்கள் கரினாட்கள் என அறியலாம். இந்த பாடல் புரியவில்லை என்றால் கவலையே படவேண்டாம்,
கிழ்கண்ட பட்டியலை பாருங்கள் அது தான் கரிநாட்கள்.
சித்திரை 6,15
வைகாசி 7, 16, 17
ஆனி 1,6
ஆடி 2, 10, 20
ஆவணி 2, 9, 28
புரட்டாசி 16, 29
ஐப்பசி 6, 20
கார்த்திகை 1, 4, 10, 17
மார்கழி 6, 9, 11
தை 1, 2, 3, 11, 17
மாசி 15, 16, 17
பங்குனி 6, 15, 19
என 35 நாட்களைக் கரிநாள் என்று குறித்துள்ளனர். சில வருடங்களில் 34 நாட்கள் கூட வரலாம். இந்த நாட்களில் தமிழகத்தில் முஹுர்த்தம் அதிகம் வைப்பதில்லை. இதே போல சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் கரிநாட்கள் அனுஷ்டிக்க படுகிறது
No comments:
Post a Comment