Sunday, 22 November 2015

கங்கை கரையில் வாழும் அகோரிகள் யார்?

கங்கை கரையில் வாழும் அகோரிகள் யார்?

இந்தியாவின் எண்ணற்ற மர்மங்களில் ஒன்றாக கங்கை கரைகளில் வாழ்ந்து திரியும் அகோரிகள் உள்ளனர்.

அகோரிகள் என்பவர்கள் வட இந்தியாவில் உள்ள கங்கை ஆற்றின் கரையில் வாழும் சைவ சமய சாதுக்கள் ஆவர்.

காசி நகரத்தில் அதிகம் காணப்படும் இவர்கள் பெரும்பாலும் சிவனின் கோர ரூபமான பைரவரையும், வீரபத்திரரையும் வழிபடுகின்றனர்.

இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மனித வாழ்கைக்கு அப்பாற்பட்டவையாக உள்ளதால் இவர்கள் மக்கள் மத்தியில் தனித்து தெரிகின்றனர்.

அகோரிகள் யாரையும் துன்புறுத்தாத சாதுக்கள் என்று கூறப்பட்டாலும், இவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் சிவபெருமானுக்கு சிறுவயதிலேயே நேர்ந்து விட்ட குழந்தைகளாக காசி, கயா, வாரணாசி, ரிஷிகேஷ் ஆகிய தலங்களில் உள்ள மடங்களில் விடப்பட்டவர்கள் ஆவர்.

இவர்கள் கங்கை நதியில் விடப்படும் சடலங்கள், காசி உள்ளிட்ட இடங்களில் எரியூட்டப்படும் உடல்களிலிருந்து மண்டையோடுகளை சேகரித்துக் கொள்கிறார்கள்.

இந்தக் கபால ஓடுகளை தண்ணீர் அருந்தவும், திருவோடாகவும் பயன்படுத்துகின்றனர். இவர்களில் பெரும்பாலானர்வகள் 2 முதல் 20 பேர் கொண்ட குழுவாக வாழக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அகோரிகளில் 50 சதவிகிதத்தினர் நிர்வாணமாகவும், மீதமுள்ளவர்கள் அரை நிர்வாணமாகவும் வாழும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலும் 90 சதவிகிதம் பேருக்கு மதுப்பழக்கம், கஞ்சா புகைப்பது, மது அருந்துதல், போதைப் பழக்கம் ஆகியவை உள்ளது.

அகோரிகள் நெருப்பில் வேகும் மனித உடல் பாகங்களை எடுத்து உண்பதாக கூறுவதை பலரும் கேட்டிருப்போம்.

ஆனால் அகோரிகளில் 3 சதவிதத்தினருக்கும் குறைவானவர்களே இவ்வாறு மனித உடல் பாகங்களை உண்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆடையணியும் அகோரிகளில் பலர் வெள்ளுடையும், கால பைரவர் என்பதைக் குறிக்கும் விதமான கருப்பு வண்ணம் மற்றும் காவி ஆகிய நிறங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

மேலும், அளவில் மிக குறைவாக உள்ள பெண் அகோரிகளை பார்வதியின் மறுஉருவமாக பக்தர்கள் கருதுவதால் ‘துர்க்கா ஜி” என்ற பெயரில் அழைக்கின்றனர்.

அகோரிகள் பெரும்பாலும், சுடுகாட்டுச் சாம்பலை பூசிக்கொண்டு, பிச்சை எடுப்பவர்களாக கருதப்பட்டு வந்தாலும் அவர்களை ”பாபாஜி” என்று அழைத்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதை வட இந்தியர்கள் வரம் போல கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகோரிகள் பங்குபெறும் உலகின் மிகப்பெரிய மக்கள் ஒன்றுகூடலாக கருதப்படும் ”கும்பமேளா” என்ற பிரம்மாண்ட விழா ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும்.

இந்த மாபெரும் திருவிழாவின்போது உடல் முழுவதும் திருநீறு பூசிய பல்லாயிரம் அகோரிகள், நதியில் புனித நீராடுவதை பார்க்கும் உலக மக்கள் இந்தியாவின் தொன்மையை பார்த்து வியப்பில் ஆழ்கின்றனர்.

No comments:

Post a Comment